அல் மனார் மத்திய கல்லூரி, மருதமுனை

ஆள்கூறுகள்: 7°26′10″N 81°48′46″E / 7.43611°N 81.81278°E / 7.43611; 81.81278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல் மனார் மத்திய கல்லூரி, மருதமுனை
Al Manar Central College, Maruthamunai
முகவரி
கொழும்பு-மட்டக்களப்பு வீதி
மருதமுனை,
அம்பாறை, இலங்கை கிழக்கு மாகாணம், 32314
இலங்கை
அமைவிடம்7°26′10″N 81°48′46″E / 7.43611°N 81.81278°E / 7.43611; 81.81278
தகவல்
வகைஅரசு கலப்புப் பள்ளி
குறிக்கோள்Learn Through Wisdom
(கற்று அறிந்து தெளிக)
சமயச் சார்பு(கள்)இல்லை
தொடக்கம்1911
ஆணையம்கல்வி அமைச்சகம், கிழக்கு மாகாணம்.
பகுப்புஅரசு பள்ளி.
பள்ளி இலக்கம்1608005
பள்ளிக் குறியீடு15043
அதிபர்எம். ஏ. எம். இனாமுல்லா
தரங்கள்1-13
பால்இரு பாலர்
வயது6 to 19
மாணவர்கள்2350 (2013)
கல்வி முறைஇலங்கை கல்வி அமைச்சகத்தின்
தேசிய மேனிலைப்பள்ளி.
கற்பித்தல் மொழிஆங்கிலம், தமிழ்
மொழிதமிழ்
நிறங்கள்சிவப்பு, மஞ்சள்         
விளையாட்டுக்கள் துடுப்பாட்டம்2, கூடைப்பந்து2, கால்பந்து, கைப்பந்து
School feesஇலவச கல்வி

அல் மனார் மத்திய கல்லூரி (Al Manar Central College) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணம் மருதமுனையில் உள்ள ஒரு பாடசாலை ஆகும். இது 1911 இல் நிறுவப்பட்டது. இது மருதமுனையில் உள்ள பழைய பாடசாலைகளில் ஒன்று ஆகும். இப்பள்ளியில் தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

அல்-மனார் என்ற அறபிச் சொல்லிற்கு கலங்கரை என்பது பொருளாகும். இப்பாடசாலை 1910ஆம் ஆண்டு கிராமப் பாடசாலைச் சட்டத்தின்கீழ் ஆரம்பிக்கப்பட்டது. 1911 இல் இப்பாடசாலைக்கான காணி நன்கொடையாக பெறப்பட்டு, அவ்வாண்டிலேயே தனது கல்விப்பணியை ஆரம்பித்தது. 1912 நவம்பரில் பதிவு செய்யப்பட்டது. இதன் படிமுறை வளர்ச்சியின்போது இப் பாடசாலையின் பெயர்மாற்றம் வருமாறு,

  • 1911ஆம் ஆண்டு அரச ஆண் பாடசாலை
  • 1920 ஆம் ஆண்டு அரச தமிழ் கலவன் பாடசாலை (பெண்கள் 1930களிலேயே இணைக்கப்படுகின்றனர்)
  • 1953 ஆம் ஆண்டு மீண்டும் அரச ஆண் பாடசாலை எனப் பெயர்மாற்றப்பட்டு குறித்த காலத்துக்குள்ளே மருதமுனை வடக்கு அரசினர் பாடசாலை எனப் பெயர்மாற்றப்பட்டது.
  • 1958 முஸ்லிம் வித்தியாலயம்
  • 1974. மருதமுனை அல்-மனார் மகாவித்தியாலயம் (இதன் போது 1958 இல் அரசினர் முஸ்லிம் என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டு 1970ம் ஆண்டு அல்-ஹிறா மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றப்பட்ட பாடசாலை, முஸ்லிம் வித்தியாலயத்துடன் இணைக்கப்பட்டே மருதமுனை அல்-மனார் மகாவித்தியாலயமாக மாற்றப்படுகின்றது.)
  • 1911ஆம் ஆண்டுகளில் 1ம், 2ம் வகுப்புக்களுடனும் 50 மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை இன்று 1ஏ.பீ தரப் பாடசாலையாக 2350ற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலையாக விள்ங்குகிறது.

அதிபர்களின் பட்டியல்[தொகு]

  • பி. சின்னையா 1912–1914
  • ஜை. எஸ். வேலுப்பிள்ளை 1914–1920
  • கே. எஸ். வைரமுத்து 1921–1935
  • வி. சாமித்தம்பி 1935–1940
  • உ. சின்னத்தம்பி 1940–1941
  • கே. இளையதம்பி 1941
  • டி. சீனித்தம்பி 1941–1943
  • கே. எஸ். வைரமுத்து 1943–1948
  • ஏ. எம். சரிபுதீன் 1949–1950
  • ஐ. எம். எஸ். எம். பலீல் மௌளானா 1950–1951
  • இ. உத்துமல்லிபீ 1951–1952
  • ஏ. எம். சரீபுதீன் 1952–1957
  • யு. எல். ஐயாமில் மரைக்காயர் 1957–1962
  • ஏ. அகமதுல்பீ 1962–1969
  • ஏ. எச். முகமது 1969–1976
  • ஏ. எச். முகமது மஜீத் 1976–1992
  • எம். எச். காதர் இப்ராகிம் 1992–1994
  • ஏ. எல். மீரா மொகைதீன் 1994–2002
  • எஸ். எல். அப்துல் ரகீம் 2003–2009
  • டாக்டர். எஸ். எம். எம். எஸ். உமர் மௌலானா 2009–2014
  • எம். எம். இர்பான் 2015–2016
  • எம். ஏ. எம். இனாமுல்லா 2016 – தற்போது