டாமன்சாரா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டாமன்சாரா மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டாமன்சாரா (P106)
மலேசிய மக்களவை தொகுதி
சிலாங்கூர்
Damansara (106)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
டாமன்சாரா மக்களவைத் தொகுதி

மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிடாமன்சாரா தொகுதி
முக்கிய நகரங்கள்டாமன்சாரா; டாமன்சாரா பெர்டானா டாமன்சாரா ஜெயா, ஆரா டாமன்சாரா, பண்டார் உத்தாமா டாமன்சாரா, முத்தியாரா டாமன்சாரா, டாமன்சாரா உத்தாமா, கோத்தா டாமன்சாரா, சுங்கைவே
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
நீக்கப்பட்ட காலம்சிலாங்கூர் தெங்கா தொகுதி (1975)
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
(2022)
மக்களவை உறுப்பினர்கோவிந்த் சிங் தியோ
(Gobind Singh Deo)
வாக்காளர்கள் எண்ணிக்கை241,978 (2022)[1]
தொகுதி பரப்பளவு65 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் டாமன்சாரா மக்களவை தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (22.9%)
  சீனர் (66.2%)
  இதர இனத்தவர் (1.0%)

டாமன்சாரா மக்களவை தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Damansara; ஆங்கிலம்: Damansara Federal Constituency; சீனம்: 白沙罗国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P106) ஆகும்.

டாமன்சாரா மக்களவை தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1959-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் 1959-ஆம் ஆண்டில் இருந்து டாமன்சாரா மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

டாமன்சாரா நகரம்[தொகு]

பெட்டாலிங் ஜெயா மாநகரம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். பெட்டாலிங் ஜெயா பெருநகரத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாகவும் டாமன்சாரா நகரம் விளங்குகிறது. இந்த நகரத்திற்கு அருகில் ஓடும் டாமன்சாரா நதியின் (Sungai Damansara) பெயரால் இந்தப் புறநகர்ப் பகுதி அழைக்கப் படுகிறது.[5]

1974-க்கு முன்னர், டாமன்சாரா என்பது ஒரு முக்கிம். கிள்ளான் மாவட்டத்தின் துணை மாவட்டமாக இருந்தது. சிலாங்கூர் மாநிலத் தலைநகர் சா ஆலாம், சுபாங் ஜெயா, பண்டார் சன்வே, கிளானா ஜெயா, கோத்தா கெமுனிங், புத்ரா அயிட்ஸ் போன்ற பகுதிகள், முன்னர் காலத்தில் டாமன்சாரா துணை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.

இன்றைய நிலையில், டாமன்சாராவின் எல்லை வரையறை பெரிய அளவில் பரந்து விரிந்து உள்ளது. பெட்டாலிங் ஜெயா நகரத்தின் வடக்குப் புறநகர்ப் பகுதி; கெப்போங், சுங்கை பூலோ புறநகர்ப் பகுதிகள்; மற்றும் கிழக்கில் சிகாம்புட் புறநகர்ப் பகுதி; தெற்கில் கிளானா ஜெயா புறநகர்ப் பகுதி போன்ற பல புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.[6]

பெட்டாலிங் மாவட்டம்[தொகு]

பெட்டாலிங் மாவட்டம்

பெட்டாலிங் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இதனால், அண்மைய காலங்களில் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டின் அதிகாரப் பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,298,123 மக்கள் வசிக்கின்றார்கள்.

பெட்டாலிங் மாவட்டம் சுமார் 484.32 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. ஏராளமான நகர துணைப் பிரிவுகள், பழைய துணை நிர்வாகங்கள் (முக்கிம்) உள்ளன. இவை அனைத்தும் டாமன்சாரா, சுபாங் மற்றும் பெட்டாலிங் போன்ற ஒரே பெயர்களைப் பகிர்ந்து கொள்கின்றன. பெட்டாலிங் மாவட்டம் 4 முக்கிம் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

டாமன்சாரா மக்களவை தொகுதி[தொகு]

டாமன்சாரா தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள்
(1995 - 2022)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
சிலாங்கூர் தெங்கா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை P073 1959–1963 கராம் சிங்
(Karam Singh Veriah)
மலாயா மக்கள் சோசலிச முன்னணி
(ராக்யாட்)
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது மலேசிய மக்களவை P073 1963–1964 கராம் சிங்
(Karam Singh Veriah)
மலாயா மக்கள் சோசலிச முன்னணி
(ராக்யாட்)
2-ஆவது மலேசிய மக்களவை 1964–1969 மைக்கல் சென்
(Michael Chen Wing Sum)
கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
1969–1971 நாடாளுமன்றம் ஒத்திவைப்பு[7]
3-ஆவது மலேசிய மக்களவை P073 1971–1974 ஓர் சியோக் பூன்
(Hor Cheok Foon)
ஜனநாயக செயல் கட்சி
தொகுதி சீரமைப்பு: பெட்டாலிங் தொகுதி; சா ஆலாம் தொகுதி; சுங்கை பீசி தொகுதி;
என 3 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது
தொகுதி சீரமைப்பு: பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதி;சுபாங் தொகுதி ஆகிய 2 தொகுதிகளில் இருந்து புதிய டாமன்சாரா தொகுதி உருவாக்கப்பட்டது
14-ஆவது மலேசிய மக்களவை P106 2018–2022 தோனி புவா
(Tony Pua Kiam Wee)
பாக்காத்தான் அராப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மலேசிய மக்களவை 2022–தற்போது கோவிந்த் சிங் தியோ
(Gobind Singh Deo)

டாமன்சாரா மக்களவை தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
239,103 - -
வாக்களித்தவர்கள்
(Turnout)
176,625 73.90% -9.86
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
174,937 100.00% -
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
715 - -
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
973 - -
பெரும்பான்மை
(Majority)
124,619 71.23% -7.21
வெற்றி பெற்ற கட்சி: பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[8]

டாமன்சாரா மக்களவை வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (சுபாங் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
கோவிந்த் சிங் தியோ
(Gobind Singh Deo)
பாக்காத்தான் (PH) 142,875 81.67% -7.33
லிம் சி சிங்
(Lim Si Ching)
பெரிக்காத்தான் (PN) 18,256 10.44% +10.44
டான் கிம் துவான்
(Tan Gim Tuan)
பாரிசான் (BN) 13,806 7.89% -2.84

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. https://www.mycensus.gov.my/index.php/census-product/publication/census-2020/myparlimen
  5. "Portal Rasmi PDT Petaling Sejarah Daerah Petaling". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 26 January 2022.
  6. "Majlis Bandaraya Petaling Jaya (MBPJ)". Portal Rasmi Majlis Bandaraya Petaling Jaya (MBPJ). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  7. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-20.
  8. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]