உள்ளடக்கத்துக்குச் செல்

பூச்சோங் ஜெயா

ஆள்கூறுகள்: 3°0′6″N 101°37′37″E / 3.00167°N 101.62694°E / 3.00167; 101.62694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூச்சோங் ஜெயா
Puchong Jaya
பூச்சோங் ஜெயா எல்ஆர்டி (LRT) நிலையம்
பூச்சோங் ஜெயா எல்ஆர்டி (LRT) நிலையம்
பூச்சோங் ஜெயா is located in மலேசியா
பூச்சோங் ஜெயா
      பூச்சோங் ஜெயா
ஆள்கூறுகள்: 3°0′6″N 101°37′37″E / 3.00167°N 101.62694°E / 3.00167; 101.62694
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
அமைவு1980
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
47100
மலேசியத் தொலைபேசி எண்+603-80; +603-58
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்B

பூச்சோங் ஜெயா, (மலாய்: Puchong Jaya; ஆங்கிலம்: Puchong Jaya; சீனம்: 蒲种再也); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங், சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரம்.[1]

பூச்சோங் ஜெயா நகரத்தின் வடக்கில் கின்ராரா நகரம்; சுபாங் ஜெயா மாநகரம்; தெற்கில் சிப்பாங் நகரம்; மற்றும் புத்ராஜெயா நகரம்; கிழக்கில் செர்டாங் நகரம்; மேற்கில் புத்ரா அயிட்ஸ் ஆகிய இடங்கள் எல்லைகளாக உள்ளன. முன்பு செர்டாங் என்று அழைக்கப்பட்டது, இப்போது ஸ்ரீ கெம்பாங்கான் என்று அழைக்கப் படுகிறது.

பொது[தொகு]

1970-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் பூச்சோங் ஜெயா நகரம், பூச்சோங் நகரத்தின் ஒரு பகுதியாகத் தான் இருந்தது. ஒரு கிராமப்புறப் பகுதியாக இருந்தது. பூச்சோங் நகரத்தின் வளர்ச்சியினாலும்; சுபாங் ஜெயா வளர்ச்சியினாலும்; பூச்சோங் ஜெயா எனும் ஒரு புதிய துணை நகரம் உருவானது.

1970-ஆம் ஆண்டுகளில் பூச்சோங் ஜெயாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி அதி வேகமாக பெறத் தொடங்கியது. இப்போது மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பல தொழில் பூங்காக்கள், வணிக மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உருவாகி உள்ளன. நகரமயமாக்கல் துரிதமாக நிகழ்ந்து உள்ளது.[2]

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம்[தொகு]

பூச்சோங் ஜெயா நகரம் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

பெட்டாலிங் மாவட்டத்தில் இருக்கும் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (Subang Jaya City Council) நிர்வாகத்தின் கீழ் உள்ள இதர இடங்கள்:

பூச்சோங் நகர மையம் (Pusat Bandar Puchong) பெரும்பாலும் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் அதிகார எல்லைக்குள் அமைந்து உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Puchong Jaya is a township with the majority population being Chinese. The township itself is well organized with business areas, factory areas as well as residential areas". PropSocial (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
  2. Puchong – Origins and History – Bandar Puteri Today பரணிடப்பட்டது 2015-12-08 at the வந்தவழி இயந்திரம். Bandar Puteri Today. 20 November 2015. Retrieved 2015-06-02.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூச்சோங்_ஜெயா&oldid=3996910" இலிருந்து மீள்விக்கப்பட்டது