விக்கிப்பீடியா பேச்சு:தொடர்-தொகுப்பு 2024/நிதி நல்கை பெறுவதற்கான திட்டமிடல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திட்டமிடலுக்கான கூட்டம் 1[தொகு]

முதல் கூட்டம் 06-ஏப்ரல்-2024 (சனிக்கிழமை) அன்று, இந்திய நேரம் இரவு 7 முதல் 8 மணி வரை நடைபெறும். கலந்துகொண்டு உங்களின் பரிந்துரைகளை வழங்கி, நிதி நல்கைக்கான முன்மொழிவை உருவாக்க உதவுங்கள். கூட்டத்தில் இணைவதற்கான இணைப்பு: https://meet.google.com/yox-pnih-mdt - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:04, 3 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

உரையாடல் 1[தொகு]

28-ஏப்பிரல்-2024 அன்று நடந்த மாதாந்திர இணையவழி கலந்துரையாடல்களின் போது இந்த நிகழ்வு குறித்தும் பேசப்பட்டது. தொடர்பங்களிப்பாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. நிதி நல்கைக்கான விண்ணப்பத்தில் இந்த இலக்குகள் குறிப்பிடப்படும். இந்த நிகழ்வில் பங்குபெறுபவர்களுக்கும் இந்த இலக்குகள் தெரிவிக்கப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:09, 28 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

சி.ஐ.எஸ் அமைப்பினருடன் இணையவழிக் கலந்துரையாடல் 1[தொகு]

  • நாள்: 09-மே-2024
  • நேரம்: மாலை 5 மணி முதல் 6 மணி வரை
  • கலந்துகொண்டோர்:
  • சி.ஐ.எஸ் அமைப்பினருக்கு திட்டம் குறித்து PowerPoint slides மூலமாக விளக்கப்பட்டது.
  • திட்டத்திற்கான நிதிநல்கையை தங்களாலும் அளிக்க இயலும் என பவன் சந்தோசு தெரிவித்தார். மே 23 அன்று இதனை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார்.
  • கூடுதலாக, Rapid Fund-க்குரிய விண்ணப்பத்தின் வரைவையும் தயாராக வைத்திருக்குமாறு முடிவெடுக்கப்பட்டது. விண்ணப்பத்தின் வரைவை மேம்படுத்த நிதேசு உதவுவார் என பவன் சந்தோசு தெரிவித்தார்.
  • இலங்கைப் பயனர் கலந்துகொள்வதற்குரிய ஏற்பாடுகள் குறித்து திட்டமிடுவதற்கும் சி.ஐ.எஸ் உதவும் என பவன் சந்தோசு தெரிவித்தார்.

@Balu1967 and TNSE Mahalingam VNR: ஆகியோரின் கவனத்திற்கு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:57, 10 மே 2024 (UTC)[பதிலளி]