ரோடியம் அறுபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோடியம் அறுபுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ரோடியம்(VI) புளோரைடு
வேறு பெயர்கள்
ரோடியம் அறுபுளோரைடு
இனங்காட்டிகள்
13693-07-7
InChI
  • InChI=1/6FH.2Rh/h6*1H;;/q;;;;;;+6/p-6
யேமல் -3D படிமங்கள் Image
  • F[Rh](F)(F)(F)(F)F
பண்புகள்
F6Rh
வாய்ப்பாட்டு எடை 216.91 கி/மோல்
தோற்றம் கருப்புநிற படிகத் திண்மம் [1]
அடர்த்தி 3.71கி/மி.லி
உருகுநிலை ≈ 70 °C (158 °F; 343 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ரோடியம் அறுபுளோரைடு (Rhodium hexafluoride) என்பது RhF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ரோடியம் மற்றும் புளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் ரோடியம்(VI) புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அதிக வினைத்திறனும், எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் உள்ள இச்சேர்மம் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது [1].

தயாரிப்பு[தொகு]

ரோடியம் உலோகத்துடன் மிகையளவு தனிமநிலை புளோரினைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ரோடியம் அறுபுளோரைடு உருவாகிறது.

Rh + 3 F2 → RhF6

கட்டமைப்பு[தொகு]

எண்முக மூலக்கூற்று வடிவமைப்புடன் ரோடியம் அறுபுளோரைடு காணப்படுகிறது. d3 வடிவமைப்புடன் இசைந்துள்ள ஆறு Rh–F பிணைப்புகளும் 1.824 Å நீளத்திற்குச் சமமாக உள்ளன. Pnma இடக்குழுவுடன், ஏ = 9.323 Å, பி = 8.474 Å, மற்றும் சி = 4.910 Å என்ற அணிக்கோவை அளபுருக்களுடன் செஞ்சாய்சதுரமாக ரோடியம் அறுபுளோரைடு படிகமாகிறது.

மற்றும் சில உலோக புளோரைடுகள் போல ரோடியம் அறுபுளோரைடும் வலிமையான ஆக்சிசனேற்றியாக செயல்படுகிறது. தண்ணீர் இல்லாவிட்டாலும் கண்ணாடியை தாக்கும் வல்லமையும் தனிமநிலை ஆக்சிசனுடன் வினைபுரியும் ஆற்றலும் இப்புளோரைக்கு உண்டு [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 CRC Handbook of Chemistry and Physics, 90th Edition, CRC Press, Boca Raton, Florida, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-9084-0, Section 4, Physical Constants of Inorganic Compounds, p. 4-85.
  2. Riedel, Sebastian; Kaupp, Martin (2009). "The highest oxidation states of the transition metal elements". Coordination Chemistry Reviews (Elsevier) 253: 606–624. doi:10.1016/j.ccr.2008.07.014. http://144.206.159.178/ft/243/588116/14862785.pdf. 

மேலும் படிக்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோடியம்_அறுபுளோரைடு&oldid=2698445" இலிருந்து மீள்விக்கப்பட்டது