எக்சாடெக்காகார்பனைல்யெக்சாரோடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சாடெக்காகார்பனைல்யெக்சாரோடியம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சாடெக்காகார்பனைல்யெக்சாரோடியம்
வேறு பெயர்கள்
எக்சாரோடியம் எக்சாடெக்காகார்பனைல்
இனங்காட்டிகள்
28407-51-4 Y
பண்புகள்
C16O16Rh6
வாய்ப்பாட்டு எடை 1065.62 கி/மோல்
தோற்றம் கருப்பு நிற படிகங்கள்
உருகுநிலை 235 °C (455 °F; 508 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

எக்சாடெக்காகார்பனைல்யெக்சாரோடியம் (Hexadecacarbonylhexarhodium) என்பது Rh6(CO)16.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். உலோகக் கார்பனைல் கொத்தான இச்சேர்மம் கருப்பு நிற படிகங்களாகக் காணப்படுகிறது. கரிமக் கரைப்பான்களில் எக்சாடெக்காகார்பனைல்யெக்சாரோடியம் படிகங்கள் கரைகின்றன [2].

கண்டுபிடிப்பும் தயாரிப்பும்[தொகு]

1943 ஆம் ஆண்டில் எய்பர் Rh6(CO)16) சேர்மத்தைத் தயாரித்தார். இதற்காக இவர் 80-230 ° செல்சியசு வெப்பநிலையில் 200 வளிமண்டல அழுத்த கார்பன் மோனாக்சைடுடன் வெள்ளி அல்லது தாமிரத்தை ஆலைடு ஏற்பியாகப் பயன்படுத்தி RhCl3•3H2O நீரேற்றை கார்பனைலேற்றம் செய்தார். இம்முறையில் Rh4(CO)11.மட்டுமே உருவானது. பின்னர் ரோடியம் டிரைகுளோரைடு நீரிலியும் இரும்புபெண்டாகார்பனைலும் சேர்ந்த கலவையை கார்பனைலேற்றம் செய்து Rh6(CO)16 சேர்மம் தயாரிக்கப்பட்டது. [(CO)2Rh(μ-Cl)]2 மற்றும் ரோடியம்(II) அசிட்டேட்டு உள்ளிட்ட சேர்மங்களும் எக்சாடெக்காகார்பனைல்யெக்சாரோடியம் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மங்களாக கருதப்படுகின்றன :[3]

3 Rh2(O2CCH3)4   +   22 CO   +   6 H2O   →   Rh6(CO)16   +   6 CO2   +   12 CH3COOH
3 [(CO)2RhCl]2   +   4 CO   +   6 Cu   →   Rh6(CO)16   +   6 CuCl.

வினைகள்[தொகு]

ஐதரசனேற்றம், ஐதரோபார்மைலேற்றம் உள்ளிட்ட கரிம வினைகளுக்கு வினையூக்கியாக எக்சாடெக்காகார்பனைல்யெக்சாரோடியம் பயன்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Corey, Eugene R.; Lawrence F. Dahl; Beck, Wolfgang (1963). "Rh6(CO)16 and its Identity with Previously Reported Rh4(CO)11". J. Am. Chem. Soc. 85 (8): 1202–1203. doi:10.1021/ja00891a040. 
  2. 2.0 2.1 Booth, B. L.; Else, M. J.; Fields, R.; Goldwhite, H.; Haszeldine, R. N. (1968). "Metal carbonyl chemistry IV. The preparation of cobalt and rhodium carbonyls by reductive carbonylation with pentacarbonyliron". J. Organomet. Chem. 14 (2): 417-422. doi:10.1016/S0022-328X(00)87682-2. 
  3. James, B. R.; Rempel, G. L.; Teo, W. K. (1976). "Hexadecacarbonylhexarhodium". Inorg. Synth. 16: 49. doi:10.1002/9780470132470.ch15.