பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு15

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிமேற்கோள் உதவி[தொகு]

விக்கிமேற்கோள் தளத்தை மேம்படுத்துவதில் கடந்த 1 மாதமாக ஈடுபட்டு வருகிறேன். இத்தளத்தின் முதற்பக்கத்தின் தலைப்பு Wikiquote என்று ஆங்கிலத்தில் உள்ளது. இதனை தமிழில் விக்கிமேற்கோள் என்று எவ்வாறு மாற்றுவது என தெரியவில்லை. மேல்-விக்கியில் இது பற்றி தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. --கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 08:04, 28 சனவரி 2012 (UTC) [பதிலளி]

பக்சில்லாவில் வழுக் கோரிக்கை பதிய வேண்டும் கிருஷ்ணா. சில நாட்களுக்கு முன்னர் விக்கிநூல்களுக்கு இது போன்ற நாம் வைத்த கோரிக்கை - https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=32340. பக்சில்லாவில் கணக்கொன்றை ஏற்படுத்தி இதுபோன்று ஒரு கோரிக்கை வையுங்கள், செய்து தருவார்கள். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் என்னையோ ஸ்ரீகாந்தையோ தொடர்பு கொள்ளுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 08:38, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி. பக்சில்லாவில் வழுக் கோரிக்கை பதிந்துவிட்டேன். --கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 15:54, 30 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இன்று ஒரு (முக்கியமான) தகவல்![தொகு]

செங்கைப் பொதுவன் ஐயா, இன்று காலை (ஜனவரி 29, 2012; 7.04 IST) பதிவேற்றிய 'தொடு விளையாட்டு' எனும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் அவரின் 1000 ஆவது படைப்பாகும். --Selvasivagurunathan mஉரையாடுக

ஆகா மிக்க மகிழ்ச்சி. ஒரு சிறிய துணுக்கு - பொதுவன் ஐயா வந்த புதிதில் புகுபதிகை செய்யாது ஏறக்குறைய நூறு கட்டுரைகள் உருவாக்கியிருக்கிறார். அவற்றையும் சேர்த்தால், 1000 சில காலம் முன் எட்டப்பட்டது. :-)--சோடாபாட்டில்உரையாடுக 05:48, 29 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சந்தேகம்[தொகு]

வணக்கம், நான் காமன்சில் இருந்து Phases of the Moon படத்தை எடுத்து தமிழில் மாற்றியுள்ளேன். இது நிலா கட்டுரையில் உள்ளது. இவ்வாறு மேலும் சில படங்களை மாற்ற நினைக்கிறேன். இவற்றை என்ன உரிமையின் (சொந்த முயற்சி (அ) நியாயப்பயன்பாடு) கீழ் பதிவேற்றுவது. நன்றி--shanmugam 18:44, 1 பெப்ரவரி 2012 (UTC)

உங்கள் சொந்த உரிமை தான். ஆனால் மூலத்தைக் கட்டாயம் சுட்ட வேண்டும் (attribution)--சோடாபாட்டில்உரையாடுக 18:46, 1 பெப்ரவரி 2012 (UTC)
உடனடி பதிலுக்கு மிக்க நன்றி.. Derived from வார்ப்புருவை இட்டு அங்கேயே பதிவேற்றியுள்ளேன்..--shanmugam 19:01, 1 பெப்ரவரி 2012 (UTC)

ஒரு வேண்டுகோள்[தொகு]

அய்யா சோடாபாட்டில், கொங்கு வெள்ளாளர் என்ற பக்கத்தில் தொடர்ந்து ஆதாரம் இல்லாததும் ,[[1]] புலவர் ராசு என்ற ஒருவரின் கருத்தினை ஆதாரங்கள் இல்லாமலும் எழுதி வருகின்றனர் , இது சரியா என்பதை பற்றி எனக்கு தெரியவில்லை .? தாங்கள் தான் கூற வேண்டும் மேலும் தாங்கள் ஏற்கனவே கூறியதை போல ஒரு கருத்தினை வெளியிடும் முன்பு அதனை உரையாடல் பகுதியில் இட்டு யாருக்கும் ஆட்சேபனை இல்லை என்றால் தான் அதனை கட்டுரையில் இணைக்க முடியும் என்ற கருத்தினை ஏற்கனவே கூறி உள்ளீர் . ஆனால் தொடர்ந்து மூவேண்டிரர்களையும், வேளிர் , காலிங்கராயர் போன்ற மக்களையும் இணைத்து பக்க சார்புடயவயாக உள்ளன . இதில் பலவும் வரலாற்றுக்கு புறம்பானது . எனவே தற்போது போட்டு இருக்கும் கொங்கு வெள்ளாளர் என்ற பக்கத்தினை சரிபார்த்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன் .

ஒரு கட்டுரையில் ஆதாரம் இல்லை என்று நான் நீக்கினால் , அப்படி எல்லாம் நீக்க கூடாது என்கின்றனர் . அப்படி விதி உள்ளதா என்பதையும் கூறவும் . நன்றி -Rajanaicker

ஐயம் தீருங்கள்![தொகு]

பயனர்:Selvasivagurunathan m/மணல்தொட்டி எனும் பெயரில் பக்கம் ஆரம்பித்து ஒரு 'rough note book' போல, நீண்ட காலத்திற்கு உபயோகிக்க அனுமதி உண்டா? இதுவும் ஒரு கைப்பாவையாக கருதப்படுமா? ஏன் இந்தத் தேவை என்றால் ... கிடைக்கும் சிறுசிறு கால இடைவெளிகளில் நான் கட்டுரையாக்கம் செய்கிறேன். விக்கிப்பீடியாவில் draft போல எங்காவது சேமித்து வைத்தால், கட்டுரை முடிவுற்றதும் பதிவேற்றம் செய்ய ஏதுவாகும். உங்களின் ஆலோசனையைச் சொல்லுங்கள். --Selvasivagurunathan mஉரையாடுக

உங்கள் பயனர் வெளியில் (பயனர்:Selvasivagurunathan m/மணல்தொட்டி) ஆரம்பிப்பது ஒரு பொழுதும் கைப்பாவை ஆகாது. எவ்வளவு காலத்துக்கு வேண்டுமெனிலும் பயனர்வெளிப்பக்கங்களை draft போல பயன்படுத்தலாம். தாராளமாகத் தொடங்குங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 07:21, 3 பெப்ரவரி 2012 (UTC)
கார்த்தியின் பேச்சுப் பக்கத்தில் எனது வேண்டுகோளை எழுதிவிட்டு சேமிக்கும்போது 'உங்களின் தகவல்கள் சர்வர்'ஐ சென்றடையவில்லை' எனும் அறிவிப்பு வந்தது. அதன்பிறகு நிகழ்ந்தவை எனது தவறுகளா என்பது தெரியவில்லை/புரியவில்லை. எப்படி இருப்பினும் உடனே உதவியதற்கு நன்றி. --Selvasivagurunathan mஉரையாடுக
'பயனர்வெளி' என்பதன் அர்த்தம் என்ன? தமிழ் wiktionary 'யிலும் விளக்கம் இல்லை. (நீங்கள் பதிலளித்தால் அங்கும் இற்றைபடுத்துகிறேன்)--Selvasivagurunathan mஉரையாடுக
உங்கள் பயனர் பக்கம் பயனர் பேச்சு:Selvasivagurunathan m என்பது உங்கள் பயனர் பக்கத்தின் பேச்சுப்பக்கம். நீங்கள் விரும்பினால் பயனர் பேச்சு:Selvasivagurunathan m/முயற்சி-1 என்று பெயரிட்டு அங்கே "மணல்தொட்டி" போல உங்கள் சோதனைகளைச் செய்து பார்க்கலாம்.பயனருக்கான பக்கமும் அதன் உள்பக்கங்களும், பயனர்வெளி--செல்வா 11:37, 3 பெப்ரவரி 2012 (UTC)
Wikipedia:Namespace என்னும் பக்கத்ததப் பாருங்கள்.--செல்வா 11:41, 3 பெப்ரவரி 2012 (UTC)

வார்ப்புரு வடிவமைப்பு[தொகு]

இன்று உருவாக்கப்பட்ட சில நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள் தங்களால் வழிமாற்றப்பட்டுள்ளது. உண்மையில் அந்த தலைப்புகள் தான் பக்கத்தின் தலைப்புகள் அதனை வழிமாறுவதன் மூலம் பிறதலைப்புகள் தானே முதன்மை படுத்தப்படும். உதா) பல்காரியா என்பது தான் பக்கத்தின் பெயர் ஆனால் அப்பெயரில் உள்ள வார்ப்புரு ஏன் பல்கேரியாவுக்கு மாற்ற வெண்டும்? எதாவது ஒரு பெயரில் இரண்டையும் பயன்படுத்தும் போது தானியக்கமாக்கல் எளிதாகுமே! மற்றும் இனி எப்படி வார்ப்புருக்களின் பெயர் வைப்பது என்றும் சொல்லலாமே - அன்புடன் --நீச்சல்காரன் 17:14, 3 பெப்ரவரி 2012 (UTC)

நீச்சல்காரன், நான் வழிமாற்றி விட்டது, ஒரு நாட்டுக்கு ஒரு வார்ப்புரு மட்டும் இருக்க வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு. ஒரு நாட்டுக்கு ஒரு நாட்டு வார்ப்புரு மட்டும் இருந்தால் இற்றைப்படுத்தலும், மாற்றங்களும் எளிது என்பதால். எப்பெயர் வைப்பது என்று நான் யோசிக்க வில்லை. முன்பு வார்ப்புருக்கள் இருந்தால் அவற்றுக்கே வழிமாற்றி விட்டேன். எப்பெயர் முதன்மையாக இருக்க வேண்டும் என்பது பற்றி நான் யோசிக்கவில்லை. அந்த ஒரு வார்ப்புரு, நீங்கள் சொல்வது போலக் கட்டுரை எப்பெயரில் இருக்கிறதோ அதே பெயரில் இருப்பதில் எனக்கு மறுப்பில்லை, இனி வருவனவற்றை அவ்வாறே செய்யலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:21, 3 பெப்ரவரி 2012 (UTC)
புரியவைத்ததற்கு மிக்க நன்றி சோடாபாட்டில் அவர்களே! --நீச்சல்காரன் 04:44, 4 பெப்ரவரி 2012 (UTC)

வார்ப்புரு தோன்றாமை[தொகு]

1) இன்று இந்த வார்ப்புருவை உருவாக்கினேன். எனினும் இது இணைக்கப்பட்ட பக்கங்களில் உரிய சின்னம் தோன்றவில்லை. காரணம் என்னவாக இருக்கலாம்?

கோப்புப் பெயரில் கண்ணுக்குத் தெரியாத மாற்றமாக (misplaced spaces or unicode mismatch) இருக்கலாம் என ஊகிக்கிறேன். கோப்பின் பெயரை மீண்டும் படியெடுத்து ஒட்டினேன், இப்போது தோன்றுகின்றன.

2) வார்ப்புரு:Str find, வார்ப்புரு:Str len ஆகியவை 'Italic title', 'French title' போன்ற வார்ப்புருக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சூர்யபிரகாசு தொகுத்த இவ்வார்ப்புருக்களை நீக்கியது ஏன்?

சூர்யா ஏதோ சோதனைக்காக உருவாக்கி பின் என்னை நீக்கச் சொன்னாரென நினைவு. அவை பிற வார்ப்புருக்களில் பயன்பட்டதை கவனிக்கவிலை. இப்போது அவற்றை மீண்டும் உருவாக்கியிருக்கிறேன்.

--சிவகோசரன் 16:28, 4 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி --சிவகோசரன் 03:12, 5 பெப்ரவரி 2012 (UTC)

கொங்கு வேளாளர் தொகுத்தல் போர்[தொகு]

கொங்கு வேளாளர் உரையடலில் அனைத்து அதாரதை சரி பார்த்து .குறிப்பிட்டு உள்ள கருத்தை கட்டுரையில் இனைக்கவும்

Venmann 07:31, 5 பெப்ரவரி 2012 (UTC)


நல்ல பழக்கவழக்கங்கள்[தொகு]

வணக்கம், திரு. சோடாபாட்டில் ஐயா, இந்த தலைப்பில் பொதுவான நல்ல பயனுள்ள தகவல்களை நான் தொகுக உள்ளேன். நான் இந்த தலைப்பில் எழுதலாமா? என்பதை தாங்கள் சொன்னால பயனுள்ளதாக இருக்கும்,

நன்றி,

karthim02

கார்த்தி, தகவல் கட்டுரைகள் மட்டுமே விக்கியில் இடம் பெறலாம். “நல்ல பழக்கவழக்கங்கள்” என்ற தலைப்பு அறிவுரைக் கட்டுரைத் தலைப்பு போல உள்ளதே?. இன்னும் கொஞ்சம் விபரமாகச் சொன்னால் உறுதியாக விக்கியில் ஏற்றுக் கொள்ளத்தக்க கலைக்களஞ்சிய உள்ளடக்கமா இல்லையா என்று சொல்ல முடியும். (திரு, ஐயா எல்லாம் வேண்டாம். வெறும் சோடாபாட்டில் என்று கூப்பிடுங்கள் :-)) --சோடாபாட்டில்உரையாடுக 05:31, 6 பெப்ரவரி 2012 (UTC)


வணக்கம்

திரு. சோடாபாட்டில், நான் சொல்லவருவது, நமது தொன்மையான நூல்களில் நல்ல பழக்கவழக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதனை இந்த தலைப்பின் மூலம் பழமையான நமது திருக்குறள்,திரிகடுகம் போன்ற நூலில் சொல்லப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் குறிப்பாக "" நம்முடைய உணவு உண்ணும முறை, இல்லறம் மற்றும் பல. இவை அறிவுரை கூறுவது போல இருந்தாலும் நமது தொன்மையான நூல்கள் மூலம் சொன்னால் நன்றாக இருக்கும்.

நன்றி, கார்த்தி.

கார்த்தி, இவ்வாறான கட்டுரை “ஆய்வுக் கட்டுரை” ஆகிவிடும். தகவல் கட்டுரையாகாது. --சோடாபாட்டில்உரையாடுக 13:12, 7 பெப்ரவரி 2012 (UTC)
  • சோடாபாட்டில், பயனர் கார்த்தி எழுத விரும்பும் "நல்ல பழக்கவழக்கங்கள்" கட்டுரையை, ஏற்கெனவே விக்கியில் இருக்கின்ற "திருக்குறள்", "திரிகடுகம்" போன்ற கட்டுரைகள் பகுதியில், அவற்றின் உள்ளடக்கமாக, அல்லது உள்ளடக்கத்தின் ஒரு பகுதியாக இடுகை செய்யலாமே! அப்போது கார்த்தி அறிவுரை கூறுகிறார் என்றில்லாமல் குறள்/திரிகடுகம் குறிப்பிடும் நல்ல பழக்கவழக்கங்கள் விக்கியில் பதிவாகின்ற வாய்ப்பு கிடைக்குமல்லவா! "ஆய்வுக் கட்டுரை" என்னும் "குறை"யும் எழாது. --பவுல்-Paul 15:01, 7 பெப்ரவரி 2012 (UTC)
செய்யலாம் பவுல். அந்ததந்த நூல் கட்டுரையில் “நூலின் உள்ளடக்கமாகக்” குறிப்பிடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:03, 7 பெப்ரவரி 2012 (UTC)


தகவலுக்கு நன்றி ஐயா

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/வாசு பக்கத்தை சேர்த்திருக்கிறேன். நன்றி. --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 12:52, 7 பெப்ரவரி 2012 (UTC)

மிக்க நன்றி வாசு. வரும் ஞாயிறு முதல் இரு வாரங்கள் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும்--சோடாபாட்டில்உரையாடுக 14:08, 7 பெப்ரவரி 2012 (UTC)
மிக்க நன்றி. தாங்கள் உரை திருத்தியதற்க்கும் நன்றி கூற விரும்புகிறேன். --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:36, 7 பெப்ரவரி 2012 (UTC)

உதவி[தொகு]

நான் தொடங்கிய கட்டுரைகள் பக்கம் [403: User account expired]எனக்காட்டுகிறது. உதவுங்கள்--Parvathisri 17:54, 9 பெப்ரவரி 2012 (UTC)

அந்தக் கருவி செயலிழந்துள்ளது. தற்காலிகமாக இந்த இணைப்பைப் பயன்படுத்துங்கள். முந்தைய இணைப்பு பற்றி விசாரிக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:52, 10 பெப்ரவரி 2012 (UTC)
அதற்கு பதிலாக வேறொரு இணைப்பை உங்கள் பயனர் பக்கத்தில் கொடுத்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:25, 13 பெப்ரவரி 2012 (UTC)
மிக்க நன்றி.--Parvathisri 07:45, 13 பெப்ரவரி 2012 (UTC)

பகுப்பு உருவாக்கம்[தொகு]

வணக்கம்...ஒரு பகுப்பின் தலைப்பை எவ்வாறு மாற்றுவது...பகுப்பு:இந்திய போர் கப்பல் என்பதை இந்திய போர்க் கப்பல்கள் என மாற்ற வேண்டும்..--shanmugam 11:52, 11 பெப்ரவரி 2012 (UTC)

பகுப்பைப் பக்கங்களைப் போல நகர்த்த இயலாது. பக்கத்தை நீக்கிவிட்டு புதிதாகத் தொடங்கவேண்டும். புதிய பகுப்பை உருவாக்கி விட்டு பழைய பகுப்பில் நீக்கல் வேண்டுகோள் சேர்த்து விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 13:09, 11 பெப்ரவரி 2012 (UTC)

உதவுங்கள்![தொகு]

படிமங்களை பதிவேற்றுவது குறித்து இன்னமும் நான் பயிற்சி எடுத்துக்கொள்ளவில்லை. எனவே Iramuthusamy அவர்களுக்கு உதவுமாறு உங்களை கேட்கிறேன். இங்கு கடைசித் தலைப்பை (கை கோர்க்கிறேன்!) காணுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் 13:42, 12 பெப்ரவரி 2012 (UTC)

Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 19:13, 12 பெப்ரவரி 2012 (UTC)

திரைப்படங்கள் பகுப்பு உதவி![தொகு]

இங்கு பார்க்கவும். திரைப்படங்கள் வெளிவந்த ஆண்டுகளின் பகுப்புகளில் எந்த வகையான தலைப்பினை பயன்படுத்துவது 1991 திரைப்படங்கள் அல்லது 1991ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் என்றா? உதவவும். நன்றி --அஸ்வின் 15:59, 13 பெப்ரவரி 2012 (UTC)

1991ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் என்று முதலில் இருந்தன. இப்போது “1991 திரைப்படங்கள்” என்ற முறைக்கு மெதுவாக மாற்றப்பட்டு வருகின்றன. எனவே ““1991 திரைப்படங்கள்” என்ற முறையைப் பயன்படுத்துங்கள். உங்கள் தானியங்கி மூலம் பிற பகுப்புகளை மாற்றினாலும் நல்லது. (நற்கீரன் இந்த மாற்றத்தை செய்து வந்தார், அவரிடம் ஒரு முறை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்).--சோடாபாட்டில்உரையாடுக 16:47, 13 பெப்ரவரி 2012 (UTC)

விக்கிமேற்கோள் பிரச்சனை[தொகு]

விக்கி மேற்கோள் தளத்தின் ஆலமரத்தடியை தொகுக்கும் போது அதில் வழிமாற்றுக்கான உள்ளடக்கம் மட்டுமே காட்டுகிறது. ஏற்கனவே ஆலமரத்தடியில் உள்ள உள்ளடக்கங்களை காட்டவில்லை. அதை தொகுக்க முயன்றாலும் முடியவில்லை. என்ன பிரச்சனை? --கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 13:25, 14 பெப்ரவரி 2012 (UTC)

எங்கோ url unicode mismatch ஆகியுள்ளது. “விக்கிமேற்கோள்:ஆலமரத்தடி” என்ற தலைப்பில் இரு பக்கங்கள் உள்ளன: - 1 2. இவற்றில் இரண்டாமவதை நீக்கி அதன் உள்ளடக்கங்களை முதலாவதில் சேருங்கள் (தொகு போட்டு படியெடுக்காமல் இந்த இணைப்பில் இருந்து படியெடுங்கள். ஒரே பக்கத்தில் அனைத்து உள்ளடக்கங்களையும் கொண்டு வந்த பின்னால், இன்னோரு பக்கத்தை நீக்கி விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 13:49, 14 பெப்ரவரி 2012 (UTC)
தகவலுக்கு நன்றி. ஆலமரத்தடியை உங்களது வழிகாட்டுதலின்படி சரிசெய்து விட்டேன். --கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 14:28, 14 பெப்ரவரி 2012 (UTC)

கவனிக்கவும்[தொகு]

காண்க:பேச்சு:பெரியசாமி தூரன்
நீங்களும் ஒருமுறை சோதித்துவிட்டு ஆவன செய்யவும்.

இதையும் காண்க: பேச்சு:இசைப்பேரறிஞர் விருது. உதவுங்கள்!--மா. செல்வசிவகுருநாதன் 17:56, 14 பெப்ரவரி 2012 (UTC)

உதவி[தொகு]

க. வெள்ளைவாரணனார் கட்டுரையை புதிதாகத் தொகுக்க எண்ணி அதனை எனது சோதனைப் பக்கத்தில் தொகுத்துவிட்டு நகர்த்தியுள்ளேன்.ஆனால் அது புதியன வரிசையில் இடம் பெறவில்லை என நினைக்கிறேன். நகர்த்த நான் மேற்கொண்ட வழிமுறைகளில் ஏதேனும் பிழைகள் உள்ளதா? நான் செய்தது சரியா? உதவவும்.--Parvathisri 18:16, 19 பெப்ரவரி 2012 (UTC)

இவ்வாறு பயனர்வெளியில் எழுதப்பட்டு நகர்த்தப்படுவன, “புதியன” பட்டியலில் வரா (மீடியாவிக்கியின் குறைபாடு). ஆனால் மற்றபடி அவை வேறெந்தப் பிழைகளும் உடையவை அல்ல. நீங்கள் செய்ததில் எந்தப் பிழையும் இல்லை.--சோடாபாட்டில்உரையாடுக 18:25, 19 பெப்ரவரி 2012 (UTC)

அவ்வாறெனில் இது போல நகர்த்தப்படுவன விக்கிபீடியா மொத்த கட்டுரை எண்ணிக்கையில் சேராதா?--Parvathisri 18:32, 19 பெப்ரவரி 2012 (UTC)

சேரும். கட்டுரை எண்ணிக்கை இற்றை உடனுக்குடன் நிகழ்வதில்லை எனினும் இவ்வாறான கட்டுரைகள் எண்ணிக்கையில் சேர்ந்து விடும். “புதியன” பக்கப் பட்டியலில் மட்டும் இவை தோன்றுவதில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 18:34, 19 பெப்ரவரி 2012 (UTC)

தெளிவித்தமைக்கு மிக்க நன்றி.--Parvathisri 18:43, 19 பெப்ரவரி 2012 (UTC)