" singapore strait" என்ற பெயரில் உள்ள கட்டுரையை தமிழ்படுத்தினேன். ஆனால் முதல் பக்கத்தில் தமிழ் கட்டுரையை வரவைக்க முடியவில்லை. இதற்க்கு நான் எப்படி உருவாக்கி வரவைக்க வேண்டும்.--Muthuppandy pandian (பேச்சு) 07:16, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
அதை தமிழ்படுத்த சிங்கப்பூர் நீரிணை அதன் தமிழ்த்தலைப்பாக இருந்தால் ஆங்கிலக்கட்டுரையை ஆங்கில விக்கிப்பீடியாவை தொகுத்து அதன் உள்ளடக்கத்தை தமிழ்த் தலைப்பில் வெட்டி ஓட்டுங்கள். பின் அதை தமிழாக்கம் செய்யலாம் அல்லது அதை தங்கள் மணல் தொட்டியில் வெட்டி ஓட்டிவிட்டு தமிழாக்கம் செய்துவிட்டு உண்மையான தமிழ்த் தலைப்புக்கு நகர்த்தலாம். நீங்கள் எதிர்பார்த்த பதில் கிடைத்ததா? சந்தேகம் இருந்தால் கேட்கவும்--நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 07:25, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
மூத்தசிவன் என்ற கட்டுரையை ஆரம்பித்திருக்கிறீர்கள். இது முழுமையாக மொழிபெயர்க்கப்படாமல் உள்ளது. மொழிபெயர்க்கப்படாமல் உள்ள ஆங்கிலக் கட்டுரைகள் வரவேற்கப்படுவதில்லை. இதனை உங்கள் மணல்தொட்டியில் அல்லது சோதனைப் பக்கத்தில் வைத்து மொழிபெயர்த்து விட்டுப் பின்னர் தமிழ்த் தலைப்புக்கு மாற்றுவது நல்லது.--Kanags\உரையாடுக07:59, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
பண்டைய எகிப்து என்ற கட்டுரை முழுக்க முழுக்க தரம் -7 வரலாறு நூலில் இருந்து நகல் எடுக்கப்பட்டு, அதற்குப் பொருத்தமற்ற உசாத்துணை இணைப்புக்களும் கொடுக்கப்பட்டு, முதற்பக்கத்திலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற பதிப்புரிமை மீறல் உள்ளடக்கங்களை சேர்ப்பதை நிறுத்தி, ஏற்கெனவே கட்டுரையில் நீங்கள் சேர்த்த பதிப்புரிமை மீறல் உள்ளடக்கங்களை உடன் நீக்கிவிடவும். --Anton (பேச்சு) 08:42, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
எனக்கு இந்த இடத்தில் ஒரு சந்தேகம். தகவல்கள் ஒரு வரலாற்று நூலில் இருந்து எடுக்கப்பட்டால், அந்த வரலாற்று நூலை உசாத்துணையாகக் கொடுத்தால், தகவல்கள் பதிப்புரிமைமீறலாகக் கொள்ளப்படுமா? மேற்கோளாகவும் அதே வரலாற்று நூலைக் கொடுக்க முடியாதா?--கலை (பேச்சு) 14:28, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நூலை படித்துவிட்டு அதை மூடி விடவும். அதன்பிறகு நினைவில் உள்ளதை எழுதினால் பதிப்புரிமை மீறலில் பெரும்பாலும் வராது. ஆனால் பட்டியல் கட்டுரைக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:14, 3 செப்டம்பர் 2013 (UTC)
வரும் வெள்ளி, சனி , ஞாயிறு கண்டி நுவரெலியா ஆகிய பிரதேசங்களுக்கு கல்விச்சுற்றுலா செல்ல இருப்பதால் அந்த நாள்களில் விக்கிக்கு வர இயலாது.--நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 15:32, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
வணக்கம், ஆதவன். 'உங்களுக்குத் தெரியுமா?' இற்றை குறித்த தங்களின் கருத்துகளுக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்ட முன்னேற்றம், அடுத்த இற்றையில் செயல்படுத்தப்படும்.(பக்கங்களில் வார்ப்புரு இட்டுக்கொண்டிருக்கையில் காலையுணவு வேளை வந்துவிட்டதால், பாதியில் சென்றுவிட்டேன்; திரும்பிவந்து அப்பணியினை நிறைவு செய்துவிட்டேன்!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:06, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
சூன் 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மீண்டும் களத்தில் குதிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இப்போது நீங்கள் கோரியபடி நிறைய புதுத் தலைப்புகளும் உள்ளன :) --இரவி (பேச்சு) 06:39, 2 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துகள்.--Kanags\உரையாடுக 08:18, 2 செப்டம்பர் 2013 (UTC)
சரி, இரவி. முழுமையாக இல்லாவிடிலும் முடிந்தளவு செய்வேன். நன்றி இரவி, கனக்ஸ் --♥ ஆதவன் ♥♀ பேச்சு ♀ 09:01, 2 செப்டம்பர் 2013 (UTC)
முதற்பரிசு வெல்லவும் வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:50, 2 செப்டம்பர் 2013 (UTC)
வந்திருக்கும் போட்டியாளர்களைப் பார்த்தால் நடுங்குது. வாழ்த்துக்கு நன்றி பார்வதி அவர்களே!--♥ ஆதவன் ♥♀ பேச்சு ♀ 15:34, 2 செப்டம்பர் 2013 (UTC)
ஆதவரே. சூறாவளி, சூரியப்புயல் எல்லாம் சேர்ந்து 250 கட்டுரைகள் விரிவாக்கப்போறாங்களாம். இனி நாம் விட்டத்தை பார்த்து வெறிக்க வேண்டியதுதான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:38, 2 செப்டம்பர் 2013 (UTC)
அரசியல்ல இதெல்லாம் சகயமப்பா!!!!--♥ ஆதவன் ♥♀ பேச்சு ♀ 09:00, 3 செப்டம்பர் 2013 (UTC)
தமிழ்நாட்டில் வெளியாகும் இதழ் ஒன்றில் தங்கள் விக்கிப்பீடியா பங்களிப்பு குறித்த செய்தி வெளியிடுவதற்காக தங்கள் புகைப்படத்தை (மார்பளவு புகைப்படம்) msmuthukamalam@gmail.com எனும் முகவரிக்கு உடனடியாக அனுப்பிட வேண்டுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:59, 3 செப்டம்பர் 2013 (UTC)
ஆதவன் தங்கள் பயனர் பக்க புகைபடம் அருகே சிறு பிழை இருந்தது நானே அதை சரி செய்து விட்டேன். முத்துராமன் (பேச்சு) 16:29, 3 செப்டம்பர் 2013 (UTC)
நேற்று நான் அதை கவனிக்கவில்லை.மிக்க நன்றி முத்துராமன்--♥ ஆதவன் ♥♀ பேச்சு ♀ 04:22, 4 செப்டம்பர் 2013 (UTC)
இந்தக் குட்டிப் பையனா(ரா) இவ்வளவு வேலைகளும் பண்றார்?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:53, 3 செப்டம்பர் 2013 (UTC)
சரி, இதை நான் கேட்டதற்குக் காரணம் யாழ் இந்துக்கல்லூரியில் கிட்டத்தட்ட நாற்பது கழகங்கள் உண்டு. அதே போல் இலங்கையில்? உலகத்தில்? அதான் இந்த சந்தேகம். நன்றி பூரட்லேய்ப் :) --♥ ஆதவன் ♥♀ பேச்சு ♀ 05:46, 6 செப்டம்பர் 2013 (UTC)
அதனால் என்ன? நாற்பது கழங்களுக்கும் கட்டுரை எழுத யாரேனும் முன்வந்தால் அதற்கென தனி பகுப்பு உருவாக்கலாம். இலங்கை, உலகம் என அங்கங்கு இருப்பவர்களுக்கு அவரவர் இடத்தில் உள்ளவை முக்கியமானவை என்பது எனது கருத்து.
ஆனால் கட்டுரை முதலில் இருந்தது போலவே இருந்தால் நல்லது என நினைக்கிறேன். தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் பட்டியல் வேண்டாமே. (இருந்தால் ஒன்றும் பெரிய குற்றமில்லை). ஆனால் அவை முழுமையாகவும் இல்லை. இதுவும் எனது கருத்தே.
\\விக்கிபீடியாவில் புதிதாக உருவாக்கப்பட்டதும் 2013இலாகும்.\\ இதென்ன விவரமென்று எனக்குப் புரியவில்லை. ஆதவன், என்னைப் பூங்கோதை என்று அழைக்கலாம் .--Booradleyp1 (பேச்சு) 03:28, 9 செப்டம்பர் 2013 (UTC)
இக்கட்டுரையை எழுதியவர் இக்கழகத்தின் புதிய தலைவர். இவர் இக்கழகத்தை முகநூல், டுவிட்டர் போன்ற இடங்களில் தொடங்கியுள்ளார். இதைப் அறிமுகம் செய்யும் நோக்கிலோ தெரியவில்லை. அதே போல் விக்கியில் 2013 இல் இதை பற்றி எழுதியுள்ளதால் அதைக் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியை நீக்கியுள்ளேன். , சரி பூங்கோதை மிக்க நன்றி :) --♥ ஆதவன் ♥♀ பேச்சு ♀ 09:29, 9 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம்! 'Vandalism' எனும் வார்த்தை குறித்து மேற்கொண்டு எதுவும் அந்தப் பேச்சுப் பக்கத்தில் கருத்துகளை இடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இது கொஞ்சம் உணர்வுப்பூர்வமான விடயம் என்பதால், சிக்கல் மேலும் பெருகலாம். நாம் அதற்குக் காரணமாகி விடக்கூடாது. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:44, 8 செப்டம்பர் 2013 (UTC)
ஆம், உண்மைதான், அதை தவிர்க்கிறேன்--♥ ஆதவன் ♥♀ பேச்சு ♀ 06:58, 8 செப்டம்பர் 2013 (UTC)
வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடினை பயன்படுத்துவது குறித்தான பரிந்துரைகள் தேவை[தொகு]
வணக்கம் நண்பரே, இந்திய மொழி விக்கிகள் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய தென்காசியாரின் பரிந்துரைகளை ஆலமரத்தடியில் ஆய்வு செய்திருந்தீர்கள். அத்துடன் உங்களது பரிந்துரைகளையும் தருவது சிறப்பாக இருக்கும். தற்போது வரை மயூரநாதன், இரவி ஆகியோரோடு எனது பரிந்துரைகளையும் தந்துள்ளேன். அவற்றைக்கண்டு விமர்சிக்கவும், தங்களது தனிப்பரிந்துரைகளை விரைந்து தரவும் வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:31, 21 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் ஆதவன்! உங்களைப் பார்த்தால் இளம் மாணவர் போலில்லை. நிறைந்த அறிவும், சீரான தமிழ் நடையும், அதீத சுறுசுறுப்பும் வியக்க வைக்கின்றன. அதிலும், அண்மைக்காலமாக, யாழ்ப்பாணத்து மாணவர்களின் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது. என்னே வேகம்! மற்றவர்கள் உங்கள் நண்பர்களோ?? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:31, 30 செப்டம்பர் 2013 (UTC)
அப்படிக்கூறமுடியாது. ஆனால் அவர்கள் எனது வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாது நாம் நான்கு பேரும் (யாழ் இந்துக் கல்லூரி) பலவிடையங்களில் ஒன்றுக்கொன்று ஒன்றுபட்டவர்கள். மேலும் ஜீவன் (ஜீவா) , எனது தூண்டிலில் சிக்கிய சுறா மீன் :). வரலாற்றில் ஆர்வம் . தற்போது சற்று தடுமாறுகிறார். எப்படியும் இரண்டு கிழைமைகளில் சரியாகிவிடும் என நினைக்கிறேன் :) --♥ ஆதவன் ♥♀ பேச்சு ♀01:48, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிக்கு தேவைப்படும் கருவிகள் குறித்து வழிகாட்டல் தேவை[தொகு]
வணக்கம் நண்பரே, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது பல பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படுகின்ற கருவிகள் குறித்து அறிய முடிந்தது. அவ்வாறான தேவைகளை ஒருங்கினைத்து ஒரே பக்கத்தில் சரியான விளக்கத்துடன் தரும் பொழுது நிரலியில் பயற்சிப் பெற்ற தன்னாலர்வர்கள் உதவ முன்வருவார்கள் என்பதால் இங்கு அதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் தங்களுடைய மேலான வழிகாட்டல்களையும், சிறப்பான எண்ணங்களையும் முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:34, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ--01:47, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஓரே மாதிரியான வேலையைச் செய்ய தானியாங்கிகளும், ஆட்டோவிக்கிபிரவுசரும் உள்ளன. வெளிவரவிருக்கும் கட்டுரைகள் என்ற பகுப்பில் உள்ள கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் ஒரே வார்ப்புருவை இடுவது எளிய வேலை. இதற்காக உங்கள் உழைப்பை வீணாக்க வேண்டாம். சோடாபாட்டில் இது குறித்து விளக்கமாகக் கூறுவார். கேட்டுத் தெரிக! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:43, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம் ஆதவன்!
'உங்களுக்குத் தெரியுமா?' இற்றைப்படுத்தலில் (அவ்வப்போது) இணைந்து செயல்பட நீங்கள் விருப்பம் தெரிவித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. நாம் உடனடியாக செயல்படுத்த வேண்டிய செயல்கள் 2 உள்ளதாக கருதுகிறேன்.
பரிந்துரைகள் பக்கத்தில் முன்பு குறைவான தகவல்களே இருந்தன. கடந்த வாரம் முதற்கொண்டு, பயனர்கள் தங்களது பரிந்துரைகளை இட்டுவருகின்றனர். மேலும் பரிந்துரைகள் பலவற்றை பெற நாம் முயற்சி செய்ய வேண்டும்.
எல்லா நேரத்திலும் அடுத்த 3 வாரத்திற்குரிய 'இற்றைப்படுத்தப்பட்ட பக்கங்கள்' தயாராக இருக்கவேண்டும்.
உங்கள் பயனர் பக்க வடிவமைப்பு மிக்க அழகாக உள்ளது அண்ணா :) உங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்!,நீங்கள் ஒரு யாழ்த் தமிழன் என்பதை நினைத்து பெருமையடைகிறேன்! ஸ்ரீஹீரன்உரையாடுக
ஐயய்யோ! இளவேந்தா தங்கள் கல்லூரியில் போர்க்கலை கற்பிப்பதாகக் கேள்வி, எதிர் காலத்தில் இலங்கை ராணுவத்தில் இணைய வாழ்த்துக்கள்.
இணையும் முன்பே இவற்றை ஆரம்பிக்கலாமே: விக்கியிளம் ராணுவம் (குழு), வலைவாசல்:ராணுவம்முக்கிய குறிப்பு:-கவனம் விக்கித் தீவிரவாசிகளின் நடமாட்டம் இங்கு அதிகம். (வடிவேலு, தளபதி, இளவல்)இப்படிக்கு தீவிரவாசி--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:50, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
எனக்குத் தெரிந்த ஒரே ஒரு ராணுவம் இலங்கை ராணுவம் தான், தாங்கள் இளவேந்தன் என்பதால் தங்களுக்கு பல நாட்டு ராணுவங்களைத் தெரிந்திருக்கும் ஆகவே விக்கியிளம் ராணுவத்தை உருவாக்கத் தகுதி உடைவர் தாங்கள்தான். இதில் எந்த ஆட்சேபனமும் இல்லை. இப்படிக்கு (அறிந்தும் அறியாத இளவல்)--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 03:28, 9 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளனவணக்கம், Aathavan jaffna. உங்களுக்கான புதிய தகவல்கள்
வலைவாசல் பேச்சு:வானியல் பக்கத்தில் உள்ளன. நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.