தும்பாட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 6°10′N 102°10′E / 6.167°N 102.167°E / 6.167; 102.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தும்பாட் மாவட்டம்
Tumpat District
Jajahan Tumpat
கிளாந்தான்
Location of தும்பாட் மாவட்டம்
Map
தும்பாட் மாவட்டம் is located in மலேசியா
தும்பாட் மாவட்டம்
      தும்பாட் மாவட்டம்
ஆள்கூறுகள்: 6°10′N 102°10′E / 6.167°N 102.167°E / 6.167; 102.167
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான்
மாவட்டம் தும்பாட் மாவட்டம்
தொகுதிதும்பாட்
உள்ளூராட்சிதும்பாட் நகராண்மைக் கழகம்
அரசு
 • மாவட்ட அதிகாரிநோர்சமான் அப்துல் கனி[1]
பரப்பளவு
 • மொத்தம்169.5 km2 (65.4 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,52,168
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
16xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-09
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்D

தும்பாட் மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Tumpat; கிளாந்தான் மலாய் மொழி: Ttupak; ஆங்கிலம்: Tumpat District; தாய் மொழி: ตุมปัต; சீனம்: 道北县; ஜாவி: تومڤت‎‎ ) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் வடக்குப் பகுதியில், தாய்லாந்து நாட்டிற்கு அருகில் உள்ள ஒரு மாவட்டம்.

தும்பாட் நகரம் மாநிலத் தலைநகர் கோத்தா பாரு நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் (East Coast Line (Malaysia) இறுதி முனையில் அமைந்துள்ளது. இந்தத் தொடருந்துச் சேவை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கிம்மாஸ் நகரில் தொடங்குகிறது.

பொது[தொகு]

தும்பாட் நகரம் தாய்லாந்து எல்லையில் கிளாந்தான் மாநிலத்தில் வடக்கில் உள்ளது. மேற்கில் கோலோக் ஆறு; கிழக்கில் கிளாந்தான் ஆறு; தெற்கில் பாசீர் மாஸ், கோத்தா பாரு; மேற்கில் தாய்லாந்து தாக் பாய் மாவட்டம் (Tak Bai District) ஆகியவை உள்ளன.

மக்கள் தொகையியல்[தொகு]

2010-ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, தும்பாட் மக்கள்தொகை சுமார் 152,168. பெரும்பான்மையானவர்கள் மலாய் மக்கள். குறிப்பிடத்தக்க அளவில் மலேசியச் சயாமியர்கள் (Malaysian Siamese); மலேசிய இந்தியர்கள் மற்றும் மலேசியச் சீனர்களும் வாழ்கின்றனர்.

Rank மாவட்டம்/முக்கிம் மக்கள் தொகை 2000
1 வக்காப் பாரு 29,902
2 பெங்காலான் குபோர் 20,642
3 தும்பாட் 19,896
4 சுங்கை பினாங்கு 16,622
5 தெர்பாக் 16,096
6 கெபக்காட் 14,663
7 ஜாலான் பெசார் 12,595
8 பாலேக்பாங்
9 கெலாபோரான்
10 கம்போங் லாவுட்
11 கோக் கெலி
12 பெராங்கான்
13 புனோகான்
14 கெத்திங்
15 மோராக்
16 பாசீர் பெக்கான்

சுற்றுலா[தொகு]

தும்பாட் நகரம், தாய்லாந்து நாட்டிற்கு மிக அருகில் இருப்பதால் அந்த நாட்டின் தாக்கங்கள் அதிகமாக உள்ளன. அந்த வகையில் தும்பாட் மாவட்டத்தில் பல பௌத்த ஆலயங்கள் உள்ளன.

  • மச்சிமாரம் - Wat Machimmaram
  • வாட் பிரசும்தாட் சனராம் - Wat Prachumthat Canaram
  • வாட் பிக்குல்தோங் வரராம் - Wat Phikulthong Vararam
  • வாட் போதிவிகான் - Wat Phothivihan
  • பந்தாய் ஸ்ரீ தூஜோ - Pantai Sri Tujuh
  • பந்தாய் சூரி - Pantai Suri
  • பந்தாய் கெத்திங் - Pantai Geting

காலநிலை[தொகு]

தும்பாட் வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டுள்ளது. பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் மிதமான மழையும், மீதமுள்ள மாதங்களில் கனமழையும் பொழிகின்றது.

தட்பவெப்ப நிலைத் தகவல், தும்பாட்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.2
(84.6)
30.0
(86)
31.3
(88.3)
32.3
(90.1)
32.5
(90.5)
32.2
(90)
31.7
(89.1)
31.6
(88.9)
31.5
(88.7)
30.6
(87.1)
29.3
(84.7)
28.6
(83.5)
30.9
(87.62)
தினசரி சராசரி °C (°F) 26.0
(78.8)
26.2
(79.2)
27.1
(80.8)
27.9
(82.2)
28.2
(82.8)
27.9
(82.2)
27.4
(81.3)
27.4
(81.3)
27.4
(81.3)
26.9
(80.4)
26.2
(79.2)
25.7
(78.3)
27.03
(80.65)
தாழ் சராசரி °C (°F) 22.6
(72.7)
22.5
(72.5)
22.9
(73.2)
23.6
(74.5)
24.0
(75.2)
23.7
(74.7)
23.2
(73.8)
23.3
(73.9)
23.3
(73.9)
23.3
(73.9)
23.2
(73.8)
22.9
(73.2)
23.21
(73.78)
மழைப்பொழிவுmm (inches) 172
(6.77)
68
(2.68)
80
(3.15)
79
(3.11)
130
(5.12)
137
(5.39)
129
(5.08)
128
(5.04)
177
(6.97)
238
(9.37)
553
(21.77)
530
(20.87)
2,421
(95.31)
ஆதாரம்: Climate-Data.org[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Laman Web Rasmi Pejabat Tanah Dan Jajahan Tanah Merah - Perutusan Ketua Jajahan". www.ptjtm.kelantan.gov.my.
  2. "Latar Belakang Tumpat". 26 June 2016. Archived from the original on 19 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 28 ஜூன் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "Climate: Tumpat". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 28 October 2020.

மேலும் காண்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்பாட்_மாவட்டம்&oldid=3932659" இலிருந்து மீள்விக்கப்பட்டது