சுமேரிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமேரிய மொழி
Default
  • சுமேரிய மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2sux
ISO 639-3sux

சுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் ஆகக் குறைந்தது கிமு 4வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில் சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆனாலும் மேலும் இரண்டு ஆயிரவாண்டுகளுக்கு சமய மொழியாக இருந்து வந்தது. கி.பி. முதலாம் ஆண்டுக்கு பிறகு சமய தொடர்பான பணிகளில் இருந்தும் சுமேரிய மொழி நீக்கப்பட்டது. பின்பு 19ஆம் நூற்றாண்டு வரை மறக்கப்பட்டிருந்தது. சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி, அக்காத் மொழி, அறமைக் மொழி, போன்ற செமிடிக் மொழிகளிலிருந்து வேறுபட்டதாகும்.

காலவோட்டம்[தொகு]

கிமு 2600 சுமேரிய எழுத்துகள் அடங்கிய பட்டியல்

சுமேரிய மொழியின் காலவோட்டத்தை 4 பிரதான பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம். அவையாவன:

  1. ஆதி சுமேரிய மொழி - கிமு 3100 – 2600
  2. பாரம்பரிய சுமேரிய மொழி - கிமு 2600 – 2300
  3. புதிய சுமேரிய மொழி - கிமு 2300 – 2000
  4. சுமேரிய மொழிக்கு பிந்திய காலம் - கிமு 2000 – 100

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Edzard, Dietz Otto (2003). Sumerian Grammar. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-12608-2.
  • Thomsen, Marie-Louise (2001) [1984]. The Sumerian Language: An Introduction to Its History and Grammatical Structure. Copenhagen: Akademisk Forlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-500-3654-8.
  • Volk, Konrad (1997). A Sumerian Reader. Rome: Pontificio Istituto Biblico. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-7653-610-8.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமேரிய_மொழி&oldid=3714815" இலிருந்து மீள்விக்கப்பட்டது