உது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உது (சமாஸ்)
அரியணையில் அமர்ந்த நிலையில் நீதிக் கடவுள் சமாஸ், களிமண் பலகை (கிமு 888 – 855),
அதிபதிசூரியக் கடவுள், நீதி, சத்தியம் மற்றும் நல்லறம்
இடம்சொர்க்கம்
கிரகம்சூரியன்
துணைசெரிதா
பெற்றோர்கள்சின் மற்றும் என்கி
சகோதரன்/சகோதரிஎரேஸ்கிகல்
குழந்தைகள்கிட்டு (வாய்மை), மிசாரு (நீதி)

உது அல்லது சமாஸ் (Utu) அக்காதிய மரபு[1][2] சுமேரிய மொழியில் உத் என்பதற்கு சூரியக் கடவுள் எனும் பொருள்படும். Kasak, Enn; Veede, Raul (2001). "Understanding Planets in Ancient Mesopotamia (PDF)". Electronic Journal of Folklore (Estonian Literary Museum) 16: 7–35. doi:10.7592/fejf2001.16.planets. பன்னாட்டுத் தர தொடர் எண்:1406-0957. http://www.folklore.ee/Folklore/vol16/planets.pdf. 

சுமேரியர்கள் வழிபட்ட உது எனும் சூரியக் கடவுளை, மெசொப்பொத்தேமியாவில் கிழக்கு செமிடிக் மொழிகள் பேசிய மக்கள் சமாஷ் எனும் பெயரில் வழிபட்டனர். உது அல்லது சமாஸ் எனும் சூரியக் கடவுள் நீதி, வாய்மை, சத்தியம், அறநெறி ஆகிய பண்புகளுடன் கூடியவர். இச்சூரியக் கடவுளின் முக்கியக் கோயில்கள் சிப்பர் மற்றும் லார்சா நகரங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சொர்க்கங்கள் வழியாக இரதத்தில் செல்லும் சூரியக் கடவுள் உது, அன்றைய நாளில் நடைபெறும் நிகழ்வுகளை காண்கிறார்.

தெய்வீக நீதியை நிலைநாட்டும் சூரியக் கடவுள் உது, துயரத்தில் உழழும் மக்களுக்கு உதவுகிறார். சுமேரிய தொன்மவியலின் படி, பிசாசுகள் துமுசித்தை பாதள லோகத்திற்க் இழுத்துச் செல்கையில், துமுசித்தை காத்து இரட்சித்தார். சுமேரியர்களின் கில்கமெஷ் காப்பியத்தில், சூரியக் கடவுள் உது, பிசாசு அம்பாபாவிடமிருந்து, கில்கமெஷை காத்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

குடும்பம்[தொகு]

சிங்கத்தின் மீது வில் ஏந்தி காட்சியளிக்கும் இஷ்தர், வலது மூலையில் சூரியக் கடவுள் சமாசின் சின்னம், தெற்கு மெசொப்பொத்தேமியா, ஈராக்

சொர்கத்தின் ராணியான இன்னன்னாவின்[3][4][5][4] இரட்டைக் குழந்தைகளில் உது எனும் சூரியக் கடவுளும் ஒருவர்.

சுமேரியச் சாத்திரங்களின் படி, இன்னன்னா மற்றும் உது மிகவும் நெருக்கமானவர்களாக காட்டியுள்ளது. [6] [7] உது, சந்திரக் கடவுளான சின் மற்றும் என்கியின மகன் என அறியப்படுகிறது.[8][9] சில நேரங்களில் என்லில் அல்லது அநுவின் மகனாகக் கருதப்படுகிறார்.[8][9] இவரது மனைவியின் பெயர் செரிதா ஆகும். ஆனால் அக்காதிய மொழியில் அயா எனக் குறித்துள்ளது.[10][11][9]

இவர்களுக்கு பிறந்த இரட்டைக குழந்தைகளில் கிட்டு மற்றும் மிசாரு ஆவார்.[11] முதல் பாபிலோனியப் பேரரசின் காலத்தில் (கிமு1830 –- 1531), சூரியக் கடவுளான உதுவிற்கு சிப்பர் மற்றும் உரூக் நகரங்களில் கோயில் கட்டி வழிபட்டனர். பின்னர் அசூர் நகரத்திலும் வழிபட்டனர். [10][9]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sumerian.org/sumlogo.htm s.v. "babbar(2)"
  2. Frederick Augustus Vanderbergh : Sumerian Hymns from Cuneiform Texts in the British Museum. Columbia University Press, 1908. p. 53.
  3. Black & Green 1992, ப. 182.
  4. 4.0 4.1 Pryke 2017, ப. 36.
  5. Black & Green 1992, ப. 108–109.
  6. Pryke 2017, ப. 36–37.
  7. Black & Green 1992, ப. 183.
  8. 8.0 8.1 Black & Green 1992, ப. 182–184.
  9. 9.0 9.1 9.2 9.3 Mark 2017.
  10. 10.0 10.1 Black & Green 1992, ப. 184.
  11. 11.0 11.1 Holland 2009, ப. 115.

ஆதார நூற்பட்டி[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உது&oldid=3851128" இலிருந்து மீள்விக்கப்பட்டது