பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 1,075: வரிசை 1,075:


விக்கிப்பீடியா முதல் பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகத்தில் உங்களைப் பற்றிய அறிமுகம் கண்டேன். மனம் நிறைந்த வாழ்த்துகள். --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 14:00, 14 சனவரி 2020 (UTC)
விக்கிப்பீடியா முதல் பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகத்தில் உங்களைப் பற்றிய அறிமுகம் கண்டேன். மனம் நிறைந்த வாழ்த்துகள். --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 14:00, 14 சனவரி 2020 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Megaphone Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | ஊக்குவிப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | வேங்கைத் திட்டம் 2.0 வில் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் சோர்வடைந்திருந்த சமயத்தில் ஊக்கம் அளித்ததற்காக இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துகள் வாழ்க வளமுடன், --[[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 17:24, 15 சனவரி 2020 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#172|பதிகை]])</small>
|}

17:24, 15 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், TNSE Mahalingam VNR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தினி (பேச்சு) 16:47, 20 ஏப்ரல் 2017 (UTC)

April 2017

Information icon Hello, TNSE Mahalingam VNR, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO 17:55, 20 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்தரவில் சேர்க்க

ஒரு கட்டுரையை விக்கித்தரவில் சேர்க்க: -->விக்கிப்பீடியா:விக்கித்தரவு<-- என்பதை வாசித்துப் பாருங்கள். உங்கள் கட்டுரை வேண்டுகோளுக்கு அமைய ஹெக்சாமெதிலீன்டெட்ரமீன் என மாற்றப்பட்டுள்ளது; விக்கித்தரவில் சேர்க்கப்பட்டுவிட்டது. --சி.செந்தி (உரையாடுக) 05:31, 7 மே 2017 (UTC)[பதிலளி]

நன்றிகள்.

பேச்சு பக்கங்களில் உங்கள் கருத்துகளுக்கு கீழே கையொப்பம் தோன்ற -~~~~ சேர்த்துவிடுங்கள் அல்லது கருவிப்பட்டையிலுள்ள “நேரமுத்திரையுடன் கையொப்பம்" பொத்தானை ( ) அழுத்தினால், உங்கள் கையொப்பம் சேர்ந்து விடும்.--சி.செந்தி (உரையாடுக) 05:49, 7 மே 2017 (UTC)[பதிலளி]

நன்றிகள்--மகாலிங்கம் (பேச்சு) 13:47, 7 மே 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், TNSE Mahalingam VNR!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:11, 10 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
அம்மோனியம் குளோரைடு கட்டுரையை மிகச் சிறப்பாக வளர்த்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் பங்களிப்பது பற்றி உங்கள் மாவட்ட சக ஆசிரியர்களுக்கும் எடுத்துரையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 17:44, 11 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:08, 11 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சி.செந்தி (உரையாடுக) 05:56, 12 மே 2017 (UTC)[பதிலளி]

நிா்வாகிகளுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். தொடர்ந்து என் குறைகளை சுட்டிக்காட்டி வழிகாட்டுங்கள். எங்கள் மாவட்டத்தில் ஆசிரியப் பெருமக்களிடம் என்னால் ஆன விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 01:13, 12 மே 2017 (UTC)[பதிலளி]

ஒரே மாதத்திற்குள் நல்ல ஆக்கங்களை உருவாக்கி வரும் தங்களுக்கு எம் இனிய வாழ்த்துகள்--2405:204:700A:61B8:3EB3:82FB:9ACA:92AD 02:09, 12 மே 2017 (UTC)[பதிலளி]
வேதியியல் சார்ந்து நல்ல திறனூக்கமுடைய கட்டுரைகளை எழுதி வரும் தங்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள். தங்கள் மாவட்டத்தில் தங்களைப்போன்று ஆர்வத்துடன் எழுதும் வகையில் விக்கிப்பீடியர்களை உருவாக்க விழைகின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:54, 12 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்! தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள். நீங்கள் அறிவியல் தொடர்பான கட்டுரைகளை சிறப்பாக மொழிபெயர்த்து உருவாக்கி விரிவாக்கி வருவதையிட்டு மிக்க மகிழ்வடைகின்றேன். இது போன்ற கட்டுரைகள் பள்ளி மாணவர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக அமையும். இப்பக்கத்தில் முக்கியமான சில அறிவியல் சார் கட்டுரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. முடிந்தால் இங்கு சிவப்பு இணைப்பாக உள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவுங்கள். பிற கட்டுரைகளை முடியும் போது விரிவாக்கி உதவுங்கள்.
அறிவியல் விாிவுரையாளராகிய நீங்கள் தங்களது அறிவை பயன்மிக்க வகையில் இங்கு பயன்படுத்துவதையிட்டு மிக்க மகிழ்வடைகின்றேன். உங்கள் சக ஆசிரிய நண்பர்களையும் விக்கிக்கு அழைத்துவாருங்கள். வாழ்த்துகள்! 🙂 --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:43, 12 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:46, 12 மே 2017 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:38, 12 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என்னை வழிநடத்தி வரும் அத்தனை பேருக்கும் நன்றிகள். தொடர்ந்து பங்களிக்க ஊக்கமளிப்பதாய் உள்ளது உங்களின் வாழ்த்துக்கள். --மகாலிங்கம் (பேச்சு) 17:04, 12 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள் மகாலிங்கம். 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:29, 14 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:31, 13 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி

வணக்கம் நண்பரே! போட்டியில் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சியாக உள்ளது. எனினும் நீங்கள் விரிவாக்கிய வேதி வினைவேகவியல் எனும் கட்டுரை இப்பட்டியலில் இல்லை. பரவாயில்லை! இனிமேல் அப்பட்டியலில் உள்ள கட்டுரைகளை மட்டும் விரிவாக்க்குங்கள்! முற்கூட்டியே விரிவாக்கவுள்ள கட்டுரைகளை இங்கு குறிப்பிடலாம். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்! உதவிகள் தேவைப்படின் தயங்காது கேளுங்கள்! தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்! நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:49, 13 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மகாலிங்கம்! கட்டுரை விரிவாக்கப் போட்டியில் பங்குபற்றுவதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் போட்டிக்கான கட்டுரையை விரிவாக்கும்போது, அதற்கான விதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள். போட்டிக்கான கட்டுரைகள் பட்டியலில் தெரிவு செய்து விரிவாக்கும் கட்டுரைக்கு, உங்களால் 6000 பைட்டுக்கள் சேர்க்கப்பட்ட பின்னர், கட்டுரையின் மொத்த அளவு 26000 பைட்டுக்களைத் தாண்டிய பின்னரே அந்தக் கட்டுரையை சமர்ப்பியுங்கள். நீங்கள் ஏற்கனவே சமர்ப்பித்த கட்டுரை பட்டியலில் இல்லாததுடன், 26000 பைட்டுக்களை அடையவுமில்லை. எனவே அதனைக் கவனித்துச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் உங்கள் பெயரை இங்கே பதிவு செய்து வையுங்கள். மேலும் நீங்கள் முற்பதிவு செய்த பல கட்டுரைகளில் மேற்கோளில்லை என்ற வார்ப்புரு உள்ளது. தயவுசெய்து நீங்கள் கட்டுரையை விரிவாக்கம் செய்யும்போது, முக்கிய தகவல்களுக்கான மேற்கோள்களையும் இணைத்துவிடுங்கள். எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காது கேளுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 18:24, 13 மே 2017 (UTC)[பதிலளி]

ஆலோசனைகளுக்கு நன்றிகள். ஏற்கெனவே என்னுடைய பெயர் பதிவிட்டுள்ளேன். தற்போது போட்டி விதிகள் பற்றி தெரிந்து கொண்டுள்ளேன். கட்டுரைகள் தேர்வில் நீங்கள் கூறியவற்றைக் கவனத்தில் கொள்கிறேன். என்னுடைய நோக்கத்தில் இந்த போட்டி என்பது கூடுதல் வாய்ப்பு. பள்ளிக்கல்வித்துறை செயலர் அவா்களின் உத்தரவுப்படி அறிவியல் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பதே எனது முக்கிய நோக்கமாக உள்ளது. இருப்பினும் ஸ்ரீஹீரன், கலையரசி ஆகியோர் எனக்கு வழங்கிய ஆலோசனைகளை வரவேற்று பின்பற்றி நடக்க முயற்சிக்கிறேன். மீண்டும் நன்றிகள்.--மகாலிங்கம் (பேச்சு) 00:59, 14 மே 2017 (UTC)[பதிலளி]

மகிழ்ழ்சி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:04, 14 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
ஒரு புதிய பயனராக இருந்தும், வேதி வினைவேகவியல் கட்டுரையை அருமையாக வளர்த்தெடுக்கிறீர்கள். பாராட்டுகள். --இரா. செல்வராசு (பேச்சு) 15:39, 14 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் வாழ்த்துக்கள்! --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:58, 14 மே 2017 (UTC)[பதிலளி]

எனது முயற்சிகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் தமிழ் விக்கிப்பீடியா நிா்வாகிகள் அனைவருக்கும் நன்றிகள். --மகாலிங்கம் (பேச்சு) 16:10, 14 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்! நாம் நிருவாகிகள் அல்லர். தங்களைப் போன்ற சக பயனர்கள் தாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:24, 14 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள்!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:30, 14 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள்! --கலை (பேச்சு) 17:00, 14 மே 2017 (UTC)[பதிலளி]

பயனர்:கி.மூர்த்தி

பயனர்:கி.மூர்த்தியுடன் உரையாடினீர்களா? அவரது அலைப்பேசி எண்ணைத் தங்களுக்கு, SCERTயில் தந்தேனென்றே ஞாபகம். அவர் தங்களைப் போன்றே வேதியியல் கட்டுரைகளில் ஆர்வம் மிக்கவர்.--உழவன் (உரை) 02:21, 16 மே 2017 (UTC)[பதிலளி]

இன்று கி.மூர்த்தி அவா்களுடன் தொடர்பு கொண்டு பேசினேன். நல்ல பல ஆலோசனைகளைப் பெற்றேன். வேதியியல் கட்டுரைகளில் எழுதப்பட வேண்டியவை தொடர்பான விவரங்கள் அறிந்து கொண்டேன். நன்றிகள் தகவல் உழவன் ஐயா. --மகாலிங்கம் (பேச்சு) 14:57, 16 மே 2017 (UTC)[பதிலளி]

தொடரட்டும் விக்கிப் பங்களிப்புகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:59, 16 மே 2017 (UTC)[பதிலளி]
சோடியம் ஐதராக்சைடு கட்டுரையை கட்டுரைப் போட்டிக்குப் பதியுங்கள்.--Kanags \உரையாடுக 02:05, 17 மே 2017 (UTC)[பதிலளி]

சோடியம் ஐதராக்சைடு கட்டுரை போட்டிக்கான தலைப்புகளில் உள்ள கட்டுரையா? --மகாலிங்கம் (பேச்சு) 07:28, 17 மே 2017 (UTC)[பதிலளி]

இது போட்டிக்கட்டுரைத் தலைப்புக்களில் இல்லை. அதனால் தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், இது தொடர்பில் எனது கருத்தை இங்கே குறிப்பிடுகிறேன்.--கலை (பேச்சு) 09:15, 17 மே 2017 (UTC)[பதிலளி]
மகாலிங்கள் அவர்களே, இங்குள்ள பட்டியலில் காணப்படும் கட்டுர்டைகள் மட்டுமே போட்டியாளர்கள் விரிவாக்க வேண்டியவை. Kanags தவறாக புரிந்துகொண்டுள்ளார். பரவாயில்லை, இப்போதைக்கு நீங்கள் விரிவாக்கிய சோடியம் ஐதராக்சைடு கட்டுரையை ஏற்றுக்கொண்டுள்ளேன். இனிமேல் அருள்கூர்ந்து, அப்பட்டியலில் உள்ள கட்டுரைகளை மட்டும் விரிவாக்கிவிட்டு சமர்ப்பியுங்கள். போட்டியில் முனைப்போடு பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகள். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:09, 17 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:14, 21 மே 2017 (UTC)[பதிலளி]

என்பதை தலைப்புகள் முற்பதிவு செய்த இடத்திலா? அல்லது போட்டிக்காக விாிவாக்கப்பட வேண்டிய கட்டுரைத் தலைப்புகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்திலா? எந்த இடத்தில் போட வேண்டும்.
அதனை நீங்கள் விரிவாக்க எதிர்பார்க்கும் கட்டுரையின் தொகுப்புப் பக்கத்தில் போடுங்கள். எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் கதிரியக்கம் எனும் கட்டுரையை சில நிமிடங்களில் விரிவாக்க உள்ளீர்கள் என்றால், அதற்கு முன்னர் அக்கட்டுரையின் மேல் இதனை இடலாம். கட்டாயம் என்று இல்லை. நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:30, 21 மே 2017 (UTC)[பதிலளி]

நன்றி. தற்போது புரிந்து கொண்டேன். --மகாலிங்கம் (பேச்சு) 10:33, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:03, 31 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மகாலிங்கம்! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் (கதிரியக்கம், கனிமம், திமீத்ரி மெண்டெலீவ்) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள்

   சாணக்கியர்
   வின்ஸ்டன் சர்ச்சில்
   மைக்கேல் பரடே
   தாவோயியம்

ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். இதில் ஏதாவது மாற்றம் தேவையெனில், தயவுசெய்து கூறுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 21:10, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]

வணக்கம்! உங்களுக்காக 01.06.17 இல் முற்பதிவு செய்யப்பட்ட கனிமம், திமீத்ரி மெண்டெலீவ் கட்டுரைகள் 10 நாட்களாகத் தொகுக்கப்படாத காரணத்தால் முற்பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 10 நாட்களுக்கு, ஏனைய பயனர்கள் விரும்பின் அந்தக் கட்டுரையை முற்பதிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 21.06.17 இற்குள், வேறு எவரும் இந்தக் கட்டுரையை முற்பதிவு செய்யாவிடின், 21.06.17 இற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் இங்கே குறிப்பிட்ட நாளில் (தொடர்ந்துவரும் 10 நாட்களுக்கு) முற்பதிவு செய்யலாம். உங்களால் முன்னர் முற்பதிவு செய்யப்பட்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சில், தாவோயியம் ஆகிய கட்டுரைகள் இன்று முதல் 10 நாட்களுக்கு உங்களுக்காக முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. முற்பதிவின்போது, ஒரு தடவையில் மூன்று கட்டுரைகளுக்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 12:16, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

கவனிக்க

சோடியம் சல்பேட் கட்டுரையில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 04:07, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

திருத்தங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. மிக்க நன்றி. இனி வரும் காலங்களில் சரியாகச் செய்ய முயற்சிக்கிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 08:54, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். இது தொடர்பாக On duty விடுப்பு தேவை எனில், கல்வித் துறையில் உரிய ஒப்புதல் பெற முனைவோம். நன்றி.--இரவி (பேச்சு) 07:37, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]

இரவி அவர்களே! தங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றிகள். நான் சார்ந்த விருதுநகர் மாவட்டத்தில் நான் 28,29,30 ஆகிய தேதிகளில் கருத்தாளராக உள்ளேன். இது தொடர்பான ஆயத்தப்பணிகளும் உள்ளன. 04.07.17 முதல் 06.07.17 வரை உள்ள நாட்களில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடக்கும் பயிற்சிகளில் உதவி தேவைப்பட்டால் நான் சார்ந்துள்ள பாலையம்பட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோரின் அனுமதி பெற்று என்னைப் பயன்படுத்திக் கொள்ள இசைவு தெரிவிக்கிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 02:04, 21 சூன் 2017 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நீங்கள் கலந்து கொள்ள உரிய துறை சார் ஒப்புதலைப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 14:04, 21 சூன் 2017 (UTC)[பதிலளி]
SCERTவில் உள்ள விக்கிப்பீடியா பயிற்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளரிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளோம். கூடிய விரைவில் ஒப்புதல் பெற்றுத் தருகிறோம். --இரவி (பேச்சு) 12:32, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

நன்றிகள்! இரவி இந்த முறை பயிற்சி முழுவதும் உங்கள் ஊக்கமூட்டுதல் பணி மிகச்சிறப்பு. இவையே ஆசிரியர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். --மகாலிங்கம் (பேச்சு) 13:05, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]


நன்றி

விருதுநகர் மாவட்டப் பயிலரங்கில் மிக நல்லமுறையில் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். --இரா. பாலாபேச்சு 12:43, 29 சூன் 2017 (UTC)[பதிலளி]

இரா. பாலாஎங்கள் மாவட்டத்திற்கு வந்து தங்களின் மதிப்பமிக்க பங்களிப்பை வழங்கியமைக்கு எங்களின் மகிழ்வான நன்றிகள். தொடர்ந்து எங்களை விக்கியில் வழிநடத்த கேட்டுக்கொள்கிறோம். --மகாலிங்கம் (பேச்சு) 13:46, 29 சூன் 2017 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம். விருதுநகர் மாவட்டத்தில் நீங்கள் பயிற்சி அளித்து வருவதாக அறிகிறேன். ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகளை என்னால் இயன்றளவு முன்னேற்றி வருகிறேன். தலைப்பினை நகர்த்தினால், கீழ்காணும் செயலைச் செய்வேன். இந்தத் தகவலை பயிற்சி பெறுவோரிடம் தெரிவிக்கவும்; நன்றி!

ஸ்ரீவில்லிப்புத்துர் இரயில் நிலையம் என எழுதப்பட்டிருந்ததை ஸ்ரீவில்லிப்புத்தூர் தொடருந்து நிலையம் என நகர்த்தினேன். அதன்பிறகு இந்த அறிவிப்பினை பயனர் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தேன். இப்படித் தெரிவித்தால் அவர், தான் எழுதிய கட்டுரையைத் தேடவேண்டிய அவசியமிருக்காது என்பது எனது எண்ணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:42, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

உங்களின் கவனத்திற்கு: விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:10, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன், உங்களின் மேலான வழிகாட்டுதல்களுக்கு நன்றிகள். எங்கள் மாவட்டத்தில் வந்திருந்த பங்கேற்பாளர்களில் கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதில் பழக்கமில்லாதவர்கள் அதிகமிருந்தனர். மொழிபெயர்ப்பு குறித்து மீண்டும், மீண்டும் நல்ல வழமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. சில பங்கேற்பாளர்கள் திறம்பட தொடங்கியுள்ளனர். மேற்கோள் சுட்டுதல், படிமங்களை இணைத்தல், தலைப்பிடுதல், மணல் தொட்டியில் எழுதி பின் நகர்த்துதல் என நானும் எம் நிறுவன முதுநிலை விரிவுரையாளர் மணிவண்ணன் (TNSE MANI VNR) இருவரும் மீண்டும், மீண்டும் ஒவ்வொரு பங்கேற்பாளரிடமும் தனித்தனியாக வலியுறுத்தியுள்ளோம். இன்று கூட மொழி நடை, எழுத்துப்பிழை மற்றும் பொருட்பிழையற்ற சொற்றொடர்களை உருவாக்குதல் என நிறைய பேசியுள்ளோம். முதலில் சிறிய கட்டுரைகளில் தொடங்கி பின்னர் விக்கிநெறிகளை கற்ற பின்னர் கட்டுரையின் அளவை விரிவுபடுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளோம். தொடர்ந்து கண்காணிக்கிறோம். உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றிகள். தொடர்ந்து எம் மாவட்ட பங்கேற்பாளர்களை வழிநடத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.--மகாலிங்கம் (பேச்சு) 14:30, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

வணக்கம் மகாலிங்கம். தமிழ்விக்கியில் உங்களது பன்முகப் பங்களிப்புகளுக்கு எனது நன்றியும் பாராட்டுகளும். நீங்கள் தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, மறு உருவாக்கம் என்ற துணைத்தலைப்பு உள்ளடக்கம் ஏதுமின்றி வெறுமையாக உள்ளது. உங்களது பயற்சிப் பணிகளுக்கிடையில் நேரம் கிடைக்கும்போது அதனை நிறைவுசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் மாவட்ட ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகளை மேம்படுத்தும் முயற்சியைத் தொடங்கியுள்ளேன். ஏதாவது உதவி தேவைப்படின் உங்களை அணுகுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:44, 2 சூலை 2017 (UTC)[பதிலளி]

(சிறு தன்னறிமுகம்: நானும் ஒருவகையில் விருதுநகர் மாவட்டத்துடன் தொடர்புடையவளே. வன்னியப்பெருமாள் கல்லூரி மாணவியாக (கணிதம்:1967-70), ஊர்வாசியாக:1967-85)

வணக்கம் Booradleyp1 தங்களின் பாரட்டுகளுக்கு நன்றிகள். நீங்கள் சுட்டிக்காட்டியது சரிதான். விரைவில் சரிசெய்து விடுகிறேன். விருதுநகர் மாவட்ட ஆசிரியர்களின் கட்டுரைகளை மேம்படுத்தும் பணிக்காக மீண்டும் ஒரு முறை நன்றிகள்.--மகாலிங்கம் (பேச்சு) 17:00, 2 சூலை 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
மிகக் குறுகிய காலத்தில் விக்கி நடைமுறைகளைப் புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் உணர்வாலும் விக்கிப்பீடியர்களின் பண்புகளை வரித்துக் கொண்டு மாநிலம் முழுக்க பயிற்சி அளிக்கச் சென்றமை மிகச் சிறப்பு. தங்களைப் போன்ற ஆசிரியர்கள் மற்றவர்களுக்கு நிச்சயம் முன்மாதிரியாக அமைவீர்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:13, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

இரவி, நன்றிகள் இரவி. உங்களின் ஊக்குவிப்பும், மாநிலம் முழுவதும் உள்ள பங்களிப்பாளர்களைக் கவனித்து வழிகாட்டுதலும், உற்சாகப்படுத்துதலும் தான் தியாகு கணேஷ் போன்றும், இன்னும் பல ஆசிரிய ஆர்வலர்களையும் தமிழ் விக்கிப்பீடியாவில் வளம் சேர்க்கும் பணியில் ஈடுபடுத்தி வருகிறருது. என் போன்றோரை தொடர்ந்து இயக்குவதும், இயங்குவதற்கான ஊக்க மருந்தாகவும் தாங்கள் உள்ளீர்கள். மிக்க நன்றிகள்.--மகாலிங்கம் (பேச்சு) 07:52, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:10, 9 சூலை 2017 (UTC)[பதிலளி]

மகாலிங்கம், மிக்க மகிழ்ச்சி. இத்திட்டத்தில் முனைப்புடன் பங்களித்து வரும் பல்வேறு விக்கிப்பீடியர்களுக்கும் தங்களைப் போன்ற புதிய விக்கிப்பீடியர்களைக் கண்டுபிடிப்பது தான் உந்துதல் என்றால் மிகையாகாது. --இரவி (பேச்சு) 10:13, 12 சூலை 2017 (UTC)[பதிலளி]

உங்கள் பார்வைக்கு

திட்டக் கரைசல் கட்டுரையில் பண்புகள்-துணைத் தலைப்பில் ஒரு வாக்கியம் ஆங்கிலத்தில் உள்ளது. அதனைத் தமிழ்ப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். (வேதியியல் தெரியாதாகையால் என்னால் மாற்ற இயலவில்லை)--Booradleyp1 (பேச்சு) 18:44, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

Booradleyp1, உடனடியாக சரிசெய்து விடுகிறேன். விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளை விரைவாகவும், கனிவுடனும் பரிசீலனை செய்யும் தங்கள் சேவை மிகச்சிறப்பாக உள்ளது. மாவட்ட பங்களிப்பாளர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் சோடியம் பைகார்பனேட்டு கட்டுரை மொழியாக்கம் செய்து கொண்டுள்ளேன்.--மகாலிங்கம் (பேச்சு) 01:09, 9 சூலை 2017 (UTC)[பதிலளி]

சோடியம் பைகார்பனேட்டு கட்டுரையையும் துப்புரவு முடிந்த பகுப்பில் சேர்த்துவிட்டேன். இதுவரையான உங்களது அனைத்துக் கட்டுரைகளுமே அப்பகுப்பினுள் வந்தாயிற்று. வேதியியல் துறை சார்ந்த உங்களது அறிதலும் உங்களது தமிழ்நடையும் மிகவும் நன்று. சிலசமயங்களில் உங்கள் கட்டுரைகளில் பெரிய பத்தியாக இருந்தால் சிறு பத்திகளாகப் பிரித்திருப்பேன். அம்மாற்றம், துறைசாரா என் போன்றோரின் புரிதலுக்காக மட்டுமே. பயனர் கி. மூர்த்தியையடுத்து தரமான வேதியியல் கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள். எனது பாராட்டுகள். மாவட்ட அளவு பயிற்சிக்கான பங்களிப்பாக மட்டும் இல்லாமல் எதிர்வரும் காலத்திலும் தொடர்ந்து விக்கியில் பங்களித்து விக்கி சமூகத்தில் இணைந்திருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:14, 9 சூலை 2017 (UTC)[பதிலளி]

Booradleyp1, தமிழ் விக்கிப்பீடியா எனக்குப் பிடித்தமான களமாக உள்ளது. என் விருப்பத்துடனே தான் செய்து கொண்டிருக்கிறேன். விக்கிப்பீடியர்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், தொடர்ந்த கண்காணிப்பு, வழமைகள், கண்ணியம், மொழியின் மீதான காதல், கல்விக்காகவும், உலகளாவிய தமிழ் சமூகத்திற்காகவும் தங்களை அர்ப்பணிக்கும் பாங்கு என அத்தனையும் என்னை நெகிழச் செய்கின்றன. கண்டிப்பாக தொடர்ந்து விக்கியில் பங்களிக்கவே விழைகிறேன். மீண்டும், மீண்டும் நன்றிகள்.--மகாலிங்கம் (பேச்சு) 06:49, 9 சூலை 2017 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

பயிற்சி முடிந்த பின்னரும் பங்களிப்புகளைத் தொடர்ந்துவரும் உங்கள் மாவட்டப் பங்களிப்பாளர்களை நீங்கள் தொடர்புகொள்ள இயலுமானால் (whatsapp, email) அவர்களுக்கு இரு கோரிக்கைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  1. கட்டுரையின் தலைப்புப் பத்தியில், தலைப்பு தமிழிலில் தடித்த எழுத்துக்களிலும், அதன் அருகிலேயே அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் சாய்ந்த எழுத்துக்களிலும் இடப்படுதல் அவசியம்.
  2. அவர்களது உரையாடல் பக்கங்களில் இடப்படும் கருத்துகளுக்கான அவர்களது பதில்களை எந்தவிதமானத் தயக்கமும் இல்லாமல் பதிவு செய்யச் சொல்லுங்கள். அது இருபக்கப் புரிதலை மேலும் வளர்க்க உதவும்.

நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:28, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

Booradleyp1, செய்து விடலாம். நீங்கள் whatsapp இல் இருந்தால் விருதுநகர் குழுவில் உங்களையும் இணைத்து விடலாம். செல்வசிவகுருநாதன், இரவிசங்கர், பாருபாலா ஆகியோர் நமது குழுவில் உள்ளனர். உங்கள் whatsapp எண்ணை 9842585028 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பவும். நான் உங்களை குழுவில் இணைத்து விடுகிறேன். தங்களின் வழிகாட்டுதல்களும், உரையாடல்களும் எளிதாகும். சமீபத்தில் சோடியம் பைகார்பனேட்டு கட்டுரைக்கு ஆங்கிலத் தலைப்பை அடைப்புக் குறிக்குள் தந்தேன். Kanags அவர்கள் கட்டுரையை தமிழ் மட்டுமே உள்ள தலைப்புக்கு வழிமாற்றம் செய்தார்கள். இருப்பினும் தங்கள் செய்தியை தற்போதே whatsapp குழுவில் பகிர்கிறேன். நன்றிகள். தங்களின் மிக வேகமான துப்புரவுப் பணிக்கு.--மகாலிங்கம் (பேச்சு) 15:40, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

நல்லவேளை கேட்டீர்கள், நான் ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள் இடச்சொன்னது கட்டுரையின் தலைப்பில் அல்ல; தலைப்புப் பத்தியில் (lead paragraph). சோடியம் பைகார்பனேட்டு கட்டுரையின் இம்மாற்றத்தைப் பாருங்கள். [1]. நான் கூறுவது உங்களுக்கு விளங்கிய பின்னர் மற்றவர்களுக்குப் பகிருங்கள். தலைப்பில் ஆங்கிலப்பெயர் கட்டாயம் கூடாது. அதனால் தான் கனக்ஸ் உங்களது சோடியம் பைகார்பனேட் கட்டுரையை வழிமாற்றியுள்ளார்கள்.--Booradleyp1 (பேச்சு) 16:09, 11 சூலை 2017 (UTC) Booradleyp1, தவறுதலாகப் புரிந்து கொண்டமைக்கு மன்னிக்கவும். தற்போது புரிந்து விட்டது. தகவலை சரியான முறையில் குழுவில் தெரிவித்துள்ளேன். நன்றிகள்.--மகாலிங்கம் (பேச்சு) 16:23, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

நன்றி மகாலிங்கம். வாட்சு ஆப் எனக்கு சுலபமாக இல்லை. அதனால் நான் அதனை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. மன்னிக்கவும்.--Booradleyp1 (பேச்சு) 16:30, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

உதவிக் குறிப்பு...

வணக்கம்! 14 ஆவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இணைப்பு இங்குள்ளது. அதாவது 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த விவரங்களைக் கொண்ட இணைப்பு. எதாவது கட்டுரையில் மேற்கோள் இணைப்பு வேலை செய்யவில்லை என்றால், இந்த இணைப்பினை பயன்படுத்தவும்; நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:24, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்த்து எழுதுவதால் ஏற்படும் சிரமங்களில் இதுவும் ஒன்று. தனது கட்டுரையை தானே வாசித்து, மேற்கோள்களையும் சொடுக்கிப் பார்க்கும் பழக்கம் நாளடைவில் பயனர்களுக்கு வந்துவிடும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:42, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன், ஆர். மோகன் ராஜ் கட்டுரையில் மேற்கோள்களை இப்போது சரிசெய்துவிட்டேன். நன்றி.--மகாலிங்கம் (பேச்சு) 01:49, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

மிக 👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:50, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

வசந்தி தமிழ் எழுத்தாளர்? குழப்பமாக உள்ளதே! வசந்தி (திரைப்படம்) இருக்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:41, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

தவறாகத்தான் உள்ளது. விருதுநகர் மாவட்ட ஆசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றை சரிசெய்யப்போய் நேரம் தான் வீண். வசந்தி திரைப்படம் பற்றிய கட்டுரை ஏற்கெனவே உள்ளது. கட்டுரையை சரிசெய்ய நேரம் அதிகம் செலவிட்டுள்ளேன்.--மகாலிங்கம் (பேச்சு) 02:43, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

ஒன்று செய்யுங்கள். வசந்தி தமிழ் எழுத்தாளர் கட்டுரையில் செய்த திருத்தங்களை வசந்தி (திரைப்படம்) கட்டுரையில் செய்துவிடுங்கள்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:45, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

பக்க மேம்பாடு

வசந்தி (திரைப்படம்) உள்ளது. அதில் இத்தகைய மாற்றங்களை செய்யுங்கள் அட்டவணைபடுத்துதல் சிறப்பான பணி. ஒரே தகவல்கள் இரு கட்டுரையில் இருப்பது, நமது விக்கியின் எதிர்காலத்துக்கு சிறப்பானதல்ல. எனவே, வசந்தி திரைப்படப்பாடல்கள் எ்ன்பதில் செய்த மாற்றங்களை, மேற்கூறிய கட்டுரையில் செய்யக் கோருகிறேன். வணக்கம்--உழவன் (உரை) 02:51, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

உழவன், செய்துவிட்டேன்.--மகாலிங்கம் (பேச்சு) 02:53, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

வசந்தி திரைப்படப்பாடல்கள் மற்றும் வசந்தி எழுத்தாளர் ஆகிய பக்கங்கள் செல்வசிவகுருநாதன் அவர்களால் நீக்கப்பட்டுள்ளது.--மகாலிங்கம் (பேச்சு) 02:53, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சி. நன்றி. வசந்தி திரைப்படப்பாடல்கள் என்பதில் உள்ள அனைத்தும் வசந்தி (திரைப்படம்) என்ற கட்டுரையில் இருக்கிறது என்றே எண்ணுகிறேன். எனவே, வசந்தி திரைப்படப்பாடல்கள் என்பதனைத்திறந்து {{நீக்குக}.} என்பதனை இட்டால் அது நீக்கும் சிறப்புரிமை உள்ளவர்க்கு உதவியாக இருக்கும். நானே நீக்கி விடலாம் என்றாலும், இந்த நடைமுறை உங்களுக்குத் தெரியவேண்டும் என விரும்புகிறேன். மற்றொன்று, ஒருவரை ஒருவர் கவனித்தே வருகிறோம். செல்வகுருநாதன் பங்களிப்பை கவனித்தேன். இந்நுட்பம் உங்களுக்கும் நாளடைவில் வந்து விடும். நிறைய பணிகள் உள்ளன என பதட்டப்பட வேண்டாம். பொறுமையாக நிறைய கற்போம். வணக்கம்.--உழவன் (உரை) 03:08, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]
{{நீக்குக}.} என்பதனை இடும் போது, தவறாமல் அதனுள் இருக்கும் புள்ளியை எடுத்து இடுங்கள்.--உழவன் (உரை) 03:10, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]
@Selvasivagurunathan m: செல்வசிவகுருநாதன் நீக்கியுள்ளா். எனினும், அடுத்த கட்டுரையில் தேவைப்படின் இந்நடைமுறையை பயன்படுத்துங்கள். இந்த உரையாடலில் இருந்து விடைபெறுகிறேன். வணக்கம்--உழவன் (உரை) 03:48, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

உதவி தேவை...

வணக்கம்! இந்தப் பக்கத்தில், புதுக்கோட்டை ஆசிரியர்கள் எழுதிய வேதியியல் கட்டுரைகளை பட்டியலிட்டுள்ளேன். இவற்றை பார்வையிட்டு உங்களால் இயன்ற முன்னேற்றங்களை செய்துதருமாறு வேண்டுகோள் வைக்கிறேன். அவசரமில்லை; பொறுமையாக செய்து தாருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:09, 22 சூலை 2017 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன், கண்டிப்பாக செய்ய முயற்சிக்கிறேன். அடுத்த வாரத்தில் விடைத்தாள் திருத்தும் பணி உள்ளது. இருப்பினும் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக என்னால் இயன்ற வரை சரிசெய்து விடுகிறேன். தொடர்ந்த தங்கள் வழிகாட்டுதல்களுக்கும், ஒத்துழைப்பிற்கும் நன்றிகள்.--மகாலிங்கம் (பேச்சு) 02:34, 22 சூலை 2017 (UTC)[பதிலளி]

ஒருங்குறியில் கட்டுரை எழுதுங்கள்

வணக்கம், நீங்கள் தமிழில் எழுதப் பயன்படுத்தும் விசைப்பலகை ஒருங்குறிக்கானதல்ல. இந்த மாற்றத்தைப் பாருங்கள். தங்களின் முழுக் கட்டுரையும் திருத்த வேண்டி உள்ளது. ஒருங்குறி விசைப்பலகை பற்றி அறிய உங்கள் ஒருங்கிணைப்பாளரை அணுகுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 00:20, 4 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

Kanags, இந்தக் கட்டுரை என்னால் எழுதப்பட்டதல்ல. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த TNSE Kailasavani VNR என்ற பயனரால் எழுதப்பட்டது. தற்போது தான், நான் அக்கட்டுரையை எடுத்து சரிசெய்து கொண்டிருந்தேன். அதே நேரத்தில் தாங்களும் அந்தக் கட்டுரையில் பணிபுரிந்துள்ளீர்கள். நன்றி.--மகாலிங்கம் (பேச்சு) 00:26, 4 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
தெளிவு படுத்தியமைக்கு நன்றி. ஒரே நேரத்தில் இருவர் ஒரே கட்டுரையைத் தொகுக்கும் போது இவ்வாறான போர் நிகழ்வதுண்டு. திருத்தும் போது, குறிப்பாக தலைப்பில் ஒருங்குறியில் எழுதப்பட்டுள்ளதா என கவனியுங்கள். ர, ர் - இவற்றில் தான் பொதுவாகக் குழப்பம்.--Kanags \உரையாடுக 00:33, 4 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

Kanags, நன்றி. கண்டிப்பாக உங்களின் ஒவ்வொரு அறிவுறுத்தங்களையும் நான் கவனத்தில் கொண்டுள்ளதால் தான் நான் தற்போது ஓரளவு விக்கியின் வழமைகளுக்குப் பழகியுள்ளேன். மிக்க நன்றிகள்.--மகாலிங்கம் (பேச்சு) 00:39, 4 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

ஒருபடித்தான மற்றும் பலபடித்தான கலவைகள்

வணக்கம் நண்பரே... ஒருபடித்தான மற்றும் பலபடித்தான கலவைகள் கட்டுரையைப் படித்தேன். வேதிக்கலவைகளில் எப்போதுமே இவை இரண்டுமே சேர்த்தே அழைக்கப்படுகின்றதாங்க. அழைக்ப்படுவதாக இருந்தாலும் கூட ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட கலவைகள் பற்றி தனித்தனியாகவே கட்டுரைகள் எழுத வேண்டும். ஒருபடித்தான கலவைகள் பலபடித்தான கலவைகள் என்று இருகட்டுரைகளாக அவற்றை பிரித்து எழுதி உதாரணங்களையும், மேற்கோள்களையும் கொடுக்க வேண்டுகிறேன். நன்றிங்க. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:45, 6 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

பயனர்:Jagadeeswarann99, தனித்தனிக் கட்டுரை எழுதுவதற்கு ஏற்ற தகவல்கள் இருந்தால், தனிக் கட்டுரைகள் எழுதலாம். இது ஆங்கில விக்கி கட்டுரையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு எழுதப்பட்டு வருகிறது. இப்போதுதான் கட்டுரையை மொழிபெயர்க்க ஆரம்பித்துள்ளார் போல் தெரிகிறது. எனவே ஒரே கட்டுரையாகவே விட்டு விடலாம்.--Kanags \உரையாடுக 06:06, 6 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

சகோதரன் ஜெகதீஸ்வரன், Kanags அவர்கள் சொன்னது போல இக்கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படும் ஒரு கட்டுரையே. வேறு சில சொந்த வேலைப்பளுவினால் தற்போது கட்டுரையைத்தொடர இயலவில்லை. நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் கட்டுரையை முழுவதுமாக மொழியாக்கம் செய்து விடுவேன்.--மகாலிங்கம் (பேச்சு) 10:50, 6 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

உதவி

வணக்கம். பென்ட்லே சோ்மங்கள் கட்டுரையின் உள்ளடக்கத்தைச் சரிபார்த்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 08:19, 25 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

Booradleyp1, நிச்சயமாக. விருதுநகர் மாவட்டத்தில் வேறு வேதியியல் கட்டுரைகள் இருந்தாலும் நிறுத்தி வையுங்கள். இன்று மற்றும் நாளைக்குள் சரிபார்த்து வைக்கிறேன். தங்களின் விரைவான துப்புரவுப் பணிக்காக விருதுநகர் மாவட்ட விக்கி குழுவின் சார்பாக எங்களின் நன்றிகள்.--மகாலிங்கம் (பேச்சு) 08:27, 25 ஆகத்து 2017 (UTC) கட்டுரையின் உள்ளடக்கம் சரிபார்க்கப்பட்டு விட்டது மேம். நன்றி மேம்.--மகாலிங்கம் (பேச்சு) 09:18, 25 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

உதவிக்கு நன்றி மகாலிங்கம். தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வேறு வேதியியல் கட்டுரைகள் இல்லையென நினைக்கிறேன். தேவையெனில் கண்டிப்பாக உங்களிடம் உதவிக்கு வருவேன். வேதியியல் கட்டுரைகளை தொடர்ந்து உருவாக்கி வருவதற்கு எனது பாராட்டுகள்.

ஒரு சிறு வேண்டுகோள், மேம் எல்லாம் வேண்டாமே, விக்கிப் பயனர்கள் பெயரிட்டு அழைப்பதே வழக்கமாக உள்ளது. தாரளமாகப் ‘பூங்கோதை’ என்றே அழைக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 14:46, 25 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

Booradleyp1, அப்படியே ஆகட்டும். வெகுநாட்களாக அரசுப்பணியில் சார்நிலைப் பணியில் இருந்து விட்டதால், விக்கியின் வழமைகள் தெரிந்திருந்தாலும் கூட மனம் இன்னும் மரபுகளை மீறத் துணிய மறுக்கிறது. இப்பொழுது கூட ஏதோ மேம் என்பதை விட்டு விட்டது குற்ற உணர்வையே தருகிறது. இருப்பினும் தாங்கள் சொல்லியவாறே பின்பற்றுகிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 14:54, 25 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 15:15, 25 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

வட கொரியா அணு ஆயுதச் சோதனை 2017

வணக்கம்! இலக்கணம் கருதி, வட கொரியா அணு ஆயுதச் சோதனை 2017 என நகர்த்தியிருக்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:25, 5 செப்டம்பர் 2017 (UTC)

மா. செல்வசிவகுருநாதன், மிக்க நன்றி. --மகாலிங்கம் (பேச்சு) 01:05, 6 செப்டம்பர் 2017 (UTC)

அனிதா

வணக்கம். அனிதா சண்முகம் கட்டுரையை எழுதியமைக்கு நன்றி. இவர் அனிதா என்றே அறியப்படுகிறார். அனிதா என தலைப்பினை மாற்றட்டுமா? தங்களின் கருத்தினை வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:24, 6 செப்டம்பர் 2017 (UTC)

மா. செல்வசிவகுருநாதன், தாராளமாக மாற்றலாம். இதில் எனது ஆலோசனை எதற்கு? உங்களைப் போன்ற மூத்த பயனர்கள் செய்வது சரியாகத்தான் இருக்கும். நான் முழுமையாக உடன்படுகிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 10:54, 6 செப்டம்பர் 2017 (UTC)

பொறுப்பான முறையில் செயல்படுவோரிடம் முறையாக உரையாடி, அவர்களின் ஒப்புதலுடன் மாற்றங்கள் செய்வதுவே எனது கோட்பாடு; நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:00, 6 செப்டம்பர் 2017 (UTC)

மா. செல்வசிவகுருநாதன், தங்களைப் போன்ற விக்கிப்பீடியர்களின் பொறுப்புணர்வும், தன்னலமற்ற பணியும் என்னை வழிநடத்திச் செல்கின்ற கலங்கரை விளக்கங்கள். நன்றி.--மகாலிங்கம் (பேச்சு) 16:29, 6 செப்டம்பர் 2017 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், TNSE Mahalingam VNR!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--நந்தகுமார் (பேச்சு) 01:40, 30 செப்டம்பர் 2017 (UTC)

நந்தகுமார், நன்றி. Kanags, பூங்கோதை, செல்வசிவகுருநாதன் ஆகியோரும் தாங்களும் தொடர்ந்து துப்புரவுப்பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் காக்க தன்னலமற்ற சேவைகளை அளித்து வரும் தங்களைப் போன்றோர் வழிகாட்டுதல்களின்படி தொடர்ந்து செயல்படுவேன். நன்றி. --மகாலிங்கம் (பேச்சு) 01:55, 30 செப்டம்பர் 2017 (UTC)

ஆசிய மாதம், 2017

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:12, 14 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  2. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  3. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:09, 25 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

WAM Address Collection

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via Google form or email me about that on erick@asianmonth.wiki before the end of Janauary, 2018. The Wikimedia Asian Month team only has access to this form, and we will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. We apologize for the delay in sending this form to you, this year we will make sure that you will receive your postcard from WAM. If you've not received a postcard from last year's WAM, Please let us know. All ambassadors will receive an electronic certificate from the team. Be sure to fill out your email if you are enlisted Ambassadors list.

Best, Erick Guan (talk)

WAM Address Collection - 1st reminder

Hi there. This is a reminder to fill the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your postal mailing address via this Google form. This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems in accessing the google form, you can use Email This User to send your address to my Email.

If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let us know at WAM talk page so I will not keep sending reminders to you. Best, Sailesh Patnaik

Confusion in the previous message- WAM

Hello again, I believe the earlier message has created some confusion. If you have already submitted the details in the Google form, it has been accepted, you don't need to submit it again. The earlier reminder is for those who haven't yet submitted their Google form or if they any alternate way to provide their address. I apologize for creating the confusion. Thanks-Sailesh Patnaik No Problem Sailesh Patnaik, I have already submitted the details in google forms. Thank you.--மகாலிங்கம் (பேச்சு) 16:28, 6 சனவரி 2018 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் ஆசிய மாத போட்டியில் பங்கேற்றமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.. இங்கு தங்களது விவரங்களை பதிவு செய்யவும். நன்றி. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 01:57, 26 சனவரி 2018 (UTC)[பதிலளி]

விக்சனரி-ஆங்கில சொற்களுக்கு வடிவம் இடும் முறை

இடும் முறை-2நிமிட நிகழ்படம் காணவும்

அடிக்கடி விக்சனரியில் பங்களிப்பதற்கு நன்றி. ஒவ்வொரு முறை வரும் போதும், ஏற்கனவே நீங்கள் செய்த சொற்களில் உள்ள மாற்றங்களை கவனிக்கவும். பகிர்ந்து கொள்வதற்கு நிறைய உண்டு. எனினும், இந்நிகழ்படத்தினை உருவாக்க உந்துதலாக இருந்தமைக்கு நன்றி.--உழவன் (உரை) 07:10, 30 சனவரி 2018 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:29, 18 பெப்ரவரி 2018 (UTC)

எந்த விதத்தில் உதவ வேண்டும் என்பதைக் குறிப்பிடுங்கள். என்னால் இயன்ற வரை செய்கிறேன். நன்றி. மகாலிங்கம் (பேச்சு) 16:35, 5 மார்ச் 2018 (UTC)

உதவி

வணக்கம். மெக்னசைட்டு - இந்தக் கட்டுரை பயனர்:Sugayaazh -புதுப் பயனரால் தொடங்கப்பட்டுள்ளது. வேதியியல் தொடர்பானதாக உள்ளதால், இப்பயனருக்கு கட்டுரையை மேம்படுத்தத் தகுந்த ஆலோசனைகளைக் கூறி ஊக்குவிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:27, 8 மார்ச் 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அன்புள்ள மகாலிங்கம்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 09:26, 10 மார்ச் 2018 (UTC)

இரவி, இவ்வளவு நீண்டதொரு வேண்டுகோள் எனக்குத் தேவையே இல்லை. என் மனம் முழுவதும் இதைச் சுற்றியே தான் உள்ளது. துறை தொடர்பான பணிகளின் அழுத்தத்தாலேயே என்னால் இப்பொழுது அதிகமாக பங்களிக்க இயலவில்லை. எனக்கான ஓய்வு நேரம் என்று கிடைத்தால் அதை தமிழ் விக்கிப்பீடியாவில் போட்டிக்காக மட்டுமல்லாது இயல்பான நிலையிலும் தொடர்ந்து கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்தல், வேதியியல் கட்டுரைகளில் கி. மூர்த்தி அவர்களைப் போலில்லாவிட்டாலும் என்னால் இயன்ற அளவு எனது பங்களிப்பை அளித்தல் போன்றவையே எனது ஆசைகள். எனது முன்னவர்கள் செய்வது போல மணிக்கணக்காக இப்பணியைச் செய்ய நான் தயாராகவே இருக்கிறேன். இக்கட்டுரைப்போட்டியின் அறிவிப்பு என் மனதுள் எப்பொழுதும் என்னை அழைத்துக் கொண்டே உள்ளது. ஆனாலும், துறை சார்ந்த பணி நெருக்கடி என்னை மடிக்கணினியின் முன் அமர இடம் கொடுக்கவில்லை. இதோ, இன்று மீண்டும் எனது தமிழ் விக்கிப்பீடியாவுடன் செலவழிக்க இருக்கும் இந்தத் தருணங்கள் தான் இன்றைய நாளின் எனது மகிழ்வான தருணங்கள். நேரம் கிடைத்தால் அது தமிழ் விக்கிப்பீடியாவிற்காகத்தான்.மகாலிங்கம் (பேச்சு) 17:08, 10 மார்ச் 2018 (UTC)

👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 17:16, 10 மார்ச் 2018 (UTC)
👍 விருப்பம் மிக்க மகிழ்ச்சிங்க. என்ன தான் உறவினர்கள், நண்பர்கள நம்ம வீட்டுக்கு விழாவுக்கு வந்து விடுவார்கள் என்றாலும் முறையாக அழைப்பு வைப்பது நம் பண்பாடு அல்லவா? :) கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 16:44, 18 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - கட்டுரைப் போட்டியில் முன்னிலை

வணக்கம். நடைபெற்று வரும் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் தற்போதைய நிலவரப்படி மூன்றாம் இடத்தில் உள்ளீர்கள். தங்களைப் போன்ற பலரும் போட்டிக்குப் பங்களித்த கட்டுரைகளால் இந்த மாதம் மட்டும் இதுவரை 11,899 கூடுதல் பக்கப் பார்வைகளைப் பெற்றிருக்கிறோம் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் பத்து இடங்களுள் இருப்பவர்கள் சென்ற ஆண்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அறிமுகமானவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து முனைப்புடன் பங்களித்து போட்டியில் முன்னேறி தங்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பரிசு வெல்லவும் இன்னும் நிறைய வாசகர்களுக்குக் கட்டற்ற அறிவைத் தமிழில் கொண்டு சேர்க்கவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:21, 27 மார்ச் 2018 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global survey

WMF Surveys, 18:19, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia survey

WMF Surveys, 01:17, 13 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - மார்ச்சு மாதப் போட்டியில் பரிசு!

வணக்கம், மகாலிங்கம். வேங்கைத் திட்டத்தின் கீழ் மார்ச்சு மாதப் போட்டியில் 22 கட்டுரைகளுக்குத் திறம்படப் பங்களித்து மூர்த்தியுடன் இணைந்து மூன்றாம் பரிசைப் பெறுகிறீர்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல், மே மாதமும் தொடர்ந்து மாதாந்த பங்களிப்புகள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும். பரிசுகளை எப்படிப் பெற்றுக் கொள்வது என்ற விவரத்தைத் தனிமடலில் தெரிவிக்கிறேன். தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்துக்கு 10 இலட்சம் இந்திய உரூபாய் மதிப்பில் 40 விக்கிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. இன்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம். இது தொடர்ந்து உங்களுக்கு ஆர்வமுடைய தலைப்புகளில் பங்களிக்க உதவும் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 20:32, 15 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

WMF Surveys, 00:27, 20 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)[பதிலளி]


Thank you for keeping Wikipedia thriving in India

I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.

Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.

This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.

Your efforts can change the future of Wikipedia in India.

You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:

https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics

Thank you,

Jimmy Wales, Wikipedia Founder 18:18, 1 மே 2018 (UTC)

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

நூறு வாழ்த்துகள்

வேங்கைத் திட்டத்தில் நூறு வளமான கட்டுரைகளை ஆக்கியமைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் ! வளர்க நும் பணி ! வாழ்க தமிழ் விக்கிப்பீடியா !!--மணியன் (பேச்சு) 16:02, 31 மே 2018 (UTC)[பதிலளி]

நன்றி

மணியன் நன்றிகளை உரித்தாக்குகிறேன். இத்தகைய வாழ்த்துக்கள் என்னை மேலும் பண்படுத்துகின்றன. தமிழ் விக்கிப்பீடியா என் வாழ்வின் அங்கமாகி விட்டதாகவே உணர்கிறேன். மகாலிங்கம் (பேச்சு) 16:15, 31 மே 2018 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

Try the new version of Content Translation

Hi TNSE Mahalingam VNR,

I’m Pau Giner, a Designer and Product Manager working with the Language team of the Wikimedia Foundation. We are working on some improvements to Content Translation that may be of your interest since you have been a prolific translator during the recent months.

Currently the Language team is working on a new version of Content Translation that will provide a more solid editing experience. This is expected to solve many of the common issues that translators experience when creating a translation. Inserting and editing complex content such as references will be much easy, reliable and producing cleaner wikitext as a result.

The new version is a major refactoring and architectural update of Content Translation, so we want to expose it to editors in a gradual way but starting at an early stage. Given your experience with the current version of the tool, we think you are an ideal candidate to try the new version and give us feedback. If you are interested you can follow these steps:

  1. Access the new version of the tool. You can access the new version anytime at the usual location of the tool by adding a version=2 parameter to the URL. So you can follow this link to start a new translation: https://ta.wikipedia.org/wiki/Special:ContentTranslation?version=2
  2. Translate an article. Try to create a new article as you would normally do in Content Translation.
  3. Provide feedback. Based on your experience translating with the new version (and your previous experiences with the former version) you can provide feedback in this talk page. Provide feedback mentioning what worked well, what didn’t work so well, and whether you noticed anything important to be missing to support your translation workflow. If you are familiar with Phabricator (our bug tracking system), you can report CX2 related issues by creating a ticket using this link.

Your feedback will be very useful to identify common issues to work on for the upcoming months.

Thanks for using Content Translation.

--Pginer-WMF (பேச்சு) 09:53, 11 சூன் 2018 (UTC)[பதிலளி]

தொகுப்புதவிக் கருவி ஒன்று

வணக்கம், ஆங்கில விக்கியில் இருந்துள்ள கட்டுரைகளைத் தமிழில் எழுதும் போது இந்தக் கருவியைப் பயன்படுத்துகிறீர்களா? இது வரை இல்லாவிடின், பயன்படுத்திப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.--Kanags (பேச்சு) 09:35, 13 சூலை 2018 (UTC)[பதிலளி]

Kanags, தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. ஆனால், அக்கருவியைப் பயன்படுத்துவது தொடர்பான சரியான புரிதல் எனக்கில்லையே. எவ்வாறு நிறுவுவது? எவ்வாறு பயன்படுத்துவது என்பது புரியவில்லை. நன்றி.மகாலிங்கம் (பேச்சு) 08:56, 14 சூலை 2018 (UTC)[பதிலளி]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:00, 2 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் 2018 அஞ்சல் அட்டை

வணக்கம். ஆசிய மாதம் 2018-இல் பங்களித்தமைக்கு நன்றிகள். உங்களுடைய அஞ்சல் அட்டை பெறுவதற்கான தகவல்களை இங்கே பதியவும். தகவல்களை அனுப்ப சனவரி 10 இறுதி நாள். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:41, 21 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்கம்

வணக்கம். நிருவாக அணுக்கத்திற்காக உங்களின் பெயரை பரிந்துரைத்துள்ளேன். பயனரின் ஒப்புதலை பெற்ற பிறகே அங்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதனை அறியாமல் செய்துவிட்டேன். மன்னிக்கவும். உங்களுக்கு ஏற்பு எனில் அங்கு உங்களின் ஒப்புதலை தெரிவிக்கவும். இல்லையெனில் எனது பரிந்துரையை நீக்கி விடுகிறேன். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:57, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

குழப்பங்களை தவிர்ப்பதற்காக, பரிந்துரையை தாற்காலிகமாக நீக்கியிருக்கிறேன். உங்களின் பதிலுரைக்குப் பிறகு அதற்கேற்றாப் போல செயல்படுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:53, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@மா. செல்வசிவகுருநாதன், பரிந்துரையை நீக்கியமைக்கு நன்றி. நான் இன்னும் இரண்டாண்டு காலம் சாதாரண பயனராகவே தொடர்கிறேன். விக்கியில் பங்களிப்பதே ஆனந்தம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:24, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:58, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:18, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சந்தேகம்

@TNSE Mahalingam VNR: குகேஷ் கட்டுரை \\மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்\\ என்ற பகுப்பில் இணைக்கப்பட்டுள்ளதன் பொருள் விளங்கவில்லை. காரணத்தைச் சற்று விளக்க முடியுமா, இப்படி ஒரு பகுப்பு உள்ளதை இப்பொழுதுதான் காண்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:12, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Booradleyp1:, நானே கேட்க வேண்டும் என்று தான் இருந்தேன். ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்ப்பு செய்யும் போது இயந்திர மொழிபெயர்ப்பு எனக்கூறி இவ்வாறு ஒரு பகுப்பு தானாக சேர்ந்துள்ளது. ஆனால், நான் கட்டுரையை இயல்பான மொழிபெயர்ப்பாகத் தான் செய்தேன். இதை எவ்வாறு சரி செய்வது என்றும் புரியவில்லை?--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:04, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

உதவி

வணக்கம்! பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் இதில் உள்ள கட்டுரைகளை சீர்படுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேரம் கிடைக்கும்போது பொறுமையாகச் செய்யலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:39, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பக்கங்களை நீக்குவது தொடர்பாக

வணக்கம் தாங்கள் துப்புரவு செய்யும்போது நீக்கப்படவேண்டிய கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் அதைப் பற்றி குறிப்பிடும்போது அதை சிலசமயம் யாரும் கவனிக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே கட்டுரையில் நீக்கல் வார்ப்புரவை இட்டுவிடவும் அ்வாறு இட்டால் அதை பிறகுகூட கண்டு நீக்க ஏதுவாக இருக்கும் நன்றி--அருளரசன் (பேச்சு) 16:59, 21 பெப்ரவரி 2019 (UTC) ஓ வர்புருக்களை இட்டுதான் வருகிறீர்கள் நான்தான் சரியாக கவனிக்கவில்லை மன்னிக்கவும்--அருளரசன் (பேச்சு) 17:04, 21 பெப்ரவரி 2019 (UTC)

பரவாயில்லை. விரைந்து செயல்படும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 17:07, 21 பெப்ரவரி 2019 (UTC)

மேற்கோள்கள்

நீங்கள் தொடங்கும் கட்டுரைகளில் மேற்கோள்கள் பகுதிக்குக் கீழே {{Reflist}} வார்ப்புருவை மறக்காமல் சேருங்கள். நன்றி.--Kanags (பேச்சு) 08:11, 11 மார்ச் 2019 (UTC) @Kanags:, நன்றி. செய்து விடுகிறேன். சில நேரங்களில் அவசரமாய் செய்யும் போது மறந்திருக்கலாம். சரி செய்தமைக்கும் நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:53, 11 மார்ச் 2019 (UTC)

எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302

வணக்கம். இந்தக் கட்டுரை தொடர்பான செய்தியானது முதற்பக்கத்துச் செய்திகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுரையாக்கத்திற்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:05, 12 மார்ச் 2019 (UTC)

@Selvasivagurunathan m:கட்டுரையோடு தொடர்புடைய செய்தியை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியமைக்கு நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:31, 12 மார்ச் 2019 (UTC)

Project Tiger 2.0

Sorry for writing this message in English - feel free to help us translating it

வேங்கைத் திட்டம் 2

வணக்கம் ஐயா| இங்கு தங்களது முன்மொழிவுகளைத் தெரிவிக்கவும்.ஸ்ரீ (talk) 08:04, 2 செப்டம்பர் 2019 (UTC)

500 கட்டுரை

மாணவர்களுக்கு பயனுள்ள பல கட்டுரைகளை உருவாக்கி தற்போது 500 கட்டுரைகளை நிறைவு செய்துள்ள எனது ஆசானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தங்களுடன் இனைந்து பயனிப்பது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.ஸ்ரீ (talk) 08:44, 2 செப்டம்பர் 2019 (UTC)

பதக்கம்

அறிவியல் பதக்கம்
மாணவர்களுக்குத் தேவையான அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருவதற்காக தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி --ஸ்ரீ (talk) 08:49, 2 செப்டம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:32, 2 செப்டம்பர் 2019 (UTC)

👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 11:06, 2 செப்டம்பர் 2019 (UTC)

பதக்கத்தை வழங்கிய நண்பருக்கும், தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது மிகவும் இனிமையான அனுபவம். இணைந்தே பணியாற்றி இணைய உலகில் தமிழை முன்னிலைப்படுத்துவோம். வாழ்க தமிழ். வெல்லட்டும் தமிழ்,--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:43, 3 செப்டம்பர் 2019 (UTC)

உங்கள் கவனத்திற்கு

ஆங்கில விக்கிக் கட்டுரைகளை மொழிபெயர்ப்புக்கு இந்தக் கருவி மிகவும் பயனுடையது. குறிப்பாக ஆங்கில விக்கி உள்ளிணைப்புகளை ஒரு செக்கனில் தந்து விடுகிறது. உங்கள் கட்டுரைகள் சிலவற்றில் நான் அண்மையில் செய்த திருத்தங்களைக் கவனியுங்கள். இவற்றை நான் இக்கருவி கொண்டு ஒரு நிமிட நேரத்தில் திருத்தினேன். இந்தக் கருவியை அனைவரும் கட்டாயம் நிறுவிக் கொள்ள வேண்டும். மூர்த்தியிடம் பலமுறை இதுகுறித்துக் கூறியுள்ளேன். நிறுவினாரா தெரியவில்லை. உதவி தேவையெனில் கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:05, 7 செப்டம்பர் 2019 (UTC)

Community Insights Survey

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

கட்டுரை முன்மொழிவு

தங்களுக்கு ஏதேனும் 100 அறிவியல் கட்டுரைகள் வேண்டுமா அல்லது ஏதேனும் குறிப்பிட்ட பகுப்புகள்( வேதியியல், இயற்பியல்...) விருப்பமாக இருந்தால் கூறவும் அதிலிருந்து 100 கட்டுரைகளை தங்களுக்கு எடுத்துத் தருகிறேன். நன்றிஸ்ரீ (✉) 16:03, 10 செப்டம்பர் 2019 (UTC)

@ஸ்ரீ, புதிய வேதியியல் கட்டுரைகள் தொகுப்பினை எடுத்துத் தந்தால் நலம். --TNSE Mahalingam VNR (பேச்சு) 16:37, 10 செப்டம்பர் 2019 (UTC)

முன்மொழிவு

Title Page ID Namespace Size (bytes) Last change
Fission barrier 56036030 0 10439 20190909183435
Residual chemical shift anisotropy 8088302 0 2671 20190909091022
Oddo–Harkins rule 2324648 0 6204 20190909083325
Nuclear fission product 701333 0 42583 20190909035301
Facility for Rare Isotope Beams 22897257 0 12688 20190909022631
Long-lived fission product 15354874 0 11476 20190909002649
Atomic mass unit 42445 0 33563 20190908221640
Thorium fuel cycle 3901932 0 34058 20190908202745
Corium 26266872 0 46079 20190908144259
Uranium dioxide 3467050 0 16538 20190908143245
Radioanalytical chemistry 23568658 0 11599 20190908053215
Atomic nucleus 19916559 0 30281 20190908053039
Semi-empirical mass formula 1085343 0 25190 20190908011616
Nuclear reaction 460322 0 20783 20190907183702
Nuclear fallout effects on an ecosystem 60167773 0 10201 20190907070646
Actinide chemistry 43180070 0 12465 20190907061755
Criticality 41966834 0 2587 20190907061435
Charge radius 28048752 0 10773 20190907053615
Nuclear transmutation 27739443 0 24200 20190907053528
Photofission 26732647 0 3269 20190907053252
Fission product yield 11688824 0 36186 20190907044649
Helion 9952055 0 1721 20190907044147
Mass excess 8262357 0 4122 20190907043644
Actinide concept 6151908 0 7467 20190907042856
Behavior of nuclear fuel during a reactor accident 5685017 0 48062 20190907042629
Radium and radon in the environment 5321285 0 20086 20190907042452
Actinides in the environment 5106060 0 11951 20190907042352
Solvated electron 4459356 0 13004 20190907042055
Nuclear explosion 4380587 0 8559 20190907042030
Fission products 4364523 0 19561 20190907042024
Cosmogenic nuclide 4154187 0 8048 20190907041917
Nitrogen rule 4004777 0 3846 20190907041829
Biological half-life 3206099 0 14933 20190907041359
Radiation chemistry 3100521 0 17985 20190907041320
Nuclear binding energy 3043836 0 47728 20190907041258
Fluoride volatility 2576183 0 12306 20190907040944
Nuclear fuel 2046416 0 45120 20190907040533
Radiochemistry 2035588 0 16044 20190907040529
Nuclear magnetic resonance spectroscopy 1908527 0 41216 20190907040426
PUREX 1859146 0 9621 20190907040402
Chemical shift 1228638 0 24901 20190907035829
Gas centrifuge 1032998 0 14441 20190907035623
Mass number 659068 0 8337 20190907035232
Coulomb barrier 421121 0 3212 20190907034921
Nuclear chemistry 242001 0 35647 20190907034636
Electron capture 82381 0 11809 20190907034203
Nuclear fallout 53683 0 72454 20190907034125
Radionuclide 37245 0 29723 20190907034101
Nuclear fission 22054 0 76163 20190907034035
Nuclear fusion 21544 0 70914 20190907034033
Ternary fission 32098871 0 6173 20190904164717
Post Irradiation Examination 10810905 0 5144 20190904164717
FLiNaK 2478755 0 3423 20190818181825
Decay product 74390 0 3028 20190727230215
Fuel element failure 1834678 0 2545 20190720065328
Growth and decay problem 52156282 0 3745 20190627233327
Cold fission 19464175 0 4807 20190623084307
Commonly used gamma-emitting isotopes 3085316 0 4626 20190601142446
Common beta emitters 3093672 0 4177 20190510225547

புதுபிக்கத்தக்க ஆற்றல்

Title Page ID Namespace Size (bytes) Last change
Community Choice Aggregation 11958464 0 54818 20190910200352
Home energy upgrades from public utilities 58853436 0 27901 20190910151732
Thermal energy storage 2465250 0 35697 20190909194451
Solar power 13690575 0 121618 20190909165340
Renewable energy debate 27248938 0 94103 20190909100134
Seaweed fuel 53716476 0 262 20190908161950
Novar Wind Farm 59690221 0 5198 20190908150106
Mission Innovation 48689859 0 6845 20190908145427
Agency for Renewable Resources 35934993 0 7148 20190908144709
Biomass Energy Centre 32748130 0 4715 20190908144542
State Agency on Alternative and Renewable Energy Sources 31859002 0 12246 20190908144514
Energy in Common 30601152 0 11176 20190908144435
Copper indium gallium selenide 3147788 0 3627 20190908143221
Wind power 277289 0 173541 20190908142849
Passive solar building design 67029 0 73252 20190908142820
Bioenergy Europe 51388 0 4319 20190908142814
Güssing 539678 0 12888 20190908090649
Wildpoldsried 10236016 0 3445 20190908084920
China Shipbuilding Industry Corporation 8656111 0 10641 20190908070332
Crosswind kite power 39562189 0 33899 20190908053357
Copper in renewable energy 37904380 0 66093 20190908053347
Variable renewable energy 34578727 0 106813 20190908053332
Market transformation 29293797 0 4189 20190908053257
100% renewable energy 18160509 0 86280 20190908053142
Floating solar 54497950 0 12387 20190908053104
Village Homes 8193519 0 3565 20190908053053
Sludge incineration 29472173 0 2323 20190908053044
Carbon fee and dividend 29080477 0 28817 20190908053043
Cogeneration 763555 0 57482 20190908035544
Energy storage 24130 0 98596 20190907184805
Anaerobic digestion 1545608 0 86118 20190907173153
Landfill gas utilization 25249780 0 25957 20190907111352
Ravina Project Toronto 59176027 0 3688 20190907070350
Global Wind Atlas 58606900 0 6797 20190907070208
United Nations Framework Classification for Resources 58229069 0 9081 20190907070053
Amplus Energy Solutions 57832784 0 8880 20190907065935
Local flexibility markets 57701741 0 30530 20190907065909
Drakoo wave energy converter 57151017 0 2406 20190907065653
Town Mill 56900155 0 5037 20190907065558
Kitepower 55141765 0 11664 20190907064939
Power-to-heat 53937260 0 2851 20190907064639
Glidden Doman 53141433 0 25703 20190907064406
SIMEC Atlantis Energy 52537408 0 7003 20190907064226
Aditya 50628066 0 19874 20190907063712
Programme for Economic Advancement and Community Empowerment 50305640 0 13916 20190907063616
Energy forecasting 48682799 0 9542 20190907063222
Waves4Power 48405028 0 1183 20190907063133
E-diesel 46556787 0 26421 20190907062608
Biosphere Technology 45584729 0 5351 20190907062433
Nigeria Renewable Energy Master Plan 43460990 0 2347 20190907061848
Renewable Energy 43422966 0 1989 20190907061841
Tethys 43107372 0 21052 20190907061738
Army Energy Initiatives Task Force 42498195 0 3499 20190907061607
The Third Industrial Revolution 40169371 0 3022 20190907060849
Grid balancing 39435562 0 1893 20190907060629
Energy hierarchy 38637693 0 15036 20190907060405
Gristmill 30875067 0 19831 20190907054239
RETScreen 28296423 0 23624 20190907053702
Energy park 26202513 0 2418 20190907053141
GREEN Cell Shipping 24054799 0 7322 20190907052551
Nuclear power proposed as renewable energy 23210252 0 21917 20190907052322
Waste heat recovery unit 21546940 0 9102 20190907051751
Biomass briquettes 19334164 0 20464 20190907051119
Renewable Energy Sources and Climate Change Mitigation 17376728 0 7611 20190907050508
Deep water source cooling 17122264 0 12531 20190907050428
Home Power 17066992 0 4914 20190907050421
Human power 15525260 0 12787 20190907045950
Algae fuel 14205946 0 141861 20190907045540
Biomass 7906908 0 38705 20190907043536
Solar power by country 6328047 0 75715 20190907042945
Solar air conditioning 5837003 0 25952 20190907042724
Microbial fuel cell 5452870 0 44208 20190907042525
Renewable natural gas 4481763 0 14598 20190907042103
Off-the-grid 2923194 0 19346 20190907041210
Carbon offset 2322153 0 67398 20190907040749
Micro combined heat and power 2019941 0 59419 20190907040521
Renewable Energy Certificate 1956416 0 20685 20190907040449
Solar cooker 1530612 0 27145 20190907040111
Solar thermal collector 772868 0 53487 20190907035347
Solar water heating 533423 0 72683 20190907035058
Solar thermal energy 413092 0 72776 20190907034911
Carbon neutrality 351661 0 51535 20190907034817
Tidal power 325060 0 47245 20190907034753
Small hydro 246533 0 15796 20190907034641
Biogas 54838 0 63981 20190907034128
Biomimetics 45784 0 58569 20190907034115
Renewable energy 25784 0 146830 20190907034042
Renewable energy and mining 44626230 0 73 20190831065025
Renewable energy sculpture 17895738 0 2441 20190827080459
Energy 28341744 0 3581 20190824170952
Green Illusions 49891925 0 2529 20190714001700
Energy Globe Award 11298808 0 4332 20190517213535
National Clean Energy Business Plan Competition 47122678 0 2704 20190503222743
National Solar Conference and World Renewable Energy Forum 2012 33325603 0 1951 20190203052618

ஸ்ரீ (✉) 20:13, 10 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

ஆசிய மாதம், 2019

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:10, 3 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!

குறுக்கு வழி:
WP:TIGER2

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்

வணக்கம், கட்டுரைகளில் மேற்கோள்கள் பகுதியின் கீழ் {{reflist}} என்ற வார்ப்புருவையும் தவறாமல் சேர்த்து விடுங்கள். உருவாக்கப்படும் கட்டுரையின் வளர்ச்சிக்கு இது மிக முக்கியமானது.--Kanags \உரையாடுக 21:59, 15 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:09, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

இந்தப் பக்கத்தில் உள்ள தலைப்புகள் உதவக்கூடும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:39, 15 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

ஆங்கிலக் கட்டுரையைத் தமிழாக்கம் செய்ய வேண்டுதல்

--Basalt எனும் ஆங்கிலக் கட்டுரையை தமிழ் விக்கி பீடியாவில் எழுத உதவுங்கள். இக்கட்டுரை மெசொப்பொத்தேமியா தொடர்பான பல கட்டுரைகளுக்கு தேவையாக உள்ளது. நன்றி---எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:24, 26 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

WAM 2019 Postcard

Dear Participants and Organizers,

Congratulations!

It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (பேச்சு) 08:16, 3 சனவரி 2020 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 4 சனவரி 2020 (UTC)[பதிலளி]

முதல் பக்க அறிமுகம்

விக்கிப்பீடியா முதல் பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகத்தில் உங்களைப் பற்றிய அறிமுகம் கண்டேன். மனம் நிறைந்த வாழ்த்துகள். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:00, 14 சனவரி 2020 (UTC)[பதிலளி]

பதக்கம்

ஊக்குவிப்பாளர் பதக்கம்
வேங்கைத் திட்டம் 2.0 வில் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் சோர்வடைந்திருந்த சமயத்தில் ஊக்கம் அளித்ததற்காக இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துகள் வாழ்க வளமுடன், --ஸ்ரீ (✉) 17:24, 15 சனவரி 2020 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_Mahalingam_VNR&oldid=2894885" இலிருந்து மீள்விக்கப்பட்டது