சப்பானியப் பட்டாணிக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்பானியப் பட்டாணிக் குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ப. மைனர்
இருசொற் பெயரீடு
பரசு மைனர்
தெம்மினிக் & செல்ஜி, 1848
பரசு மைனர் பரவல் (நீலம்-பச்சை), பரசு மேஜர் (ஆரஞ்சு-சிவப்பு), * பரசு சைனெரசு (சாம்பல்)

சப்பானியப் பட்டாணிக் குருவி (Japanese tit-பரசு மைனர்), ஓரியண்டல் பட்டாணிக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இது கூரில் தீவுகள் உட்பட அமுர் ஆற்றுப் பகுதிக்கு அப்பால் சப்பான் மற்றும் உருசியா தூரக் கிழக்கில் இதேபோன்ற சாம்பற் சிட்டிற்கு மாற்றுப் பாசாரின் பறவையாகும். சமீப காலம் வரை, இந்த சிற்றினம் பெரும் பட்டாணிக் குருவி (பரசு மேஜர்) துணையினமாக வகைப்படுத்தப்பட்டது. ஆனால் ஆய்வுகள் உருசிய தூரக் கிழக்கில் இரண்டு சிற்றினங்களும் ஒன்றுக்கொன்று அல்லது அடிக்கடி கலப்பு இல்லாமல் இணைந்து வாழ்கின்றன என்று சுட்டிக்காட்டுகின்றன.[1]

மார்ச் 2016இல் தோஷிதகா சுசுகி மற்றும் பலரின் ஆய்வுக் காரணமாகச் செய்தித்தாள்களில் இந்த சிற்றினம் குறித்து தலைப்புச் செய்திகள் வெளிவந்தன.[2] இப்பறவை அழைப்புகளில் கலப்பு தொடரியல் பற்றிய சோதனை ஆதாரங்களை இவர்கள் கண்டறிந்ததாக நேச்சர் கம்யூனிகேசன் ஆய்விதழ் ஆய்வறிக்கை வெளியிட்டது. இது மனிதரல்லாத விலங்குகளில் இந்த வகை தொடரியலுக்கான முதல் சான்றைக் குறிக்கிறது.[2] வில்லோ பட்டாணிக் குருவி, சப்பானியப் பட்டாணிக் குருவியின் ஆட்சேர்ப்பு அழைப்பிற்குப் பதிலளிக்கும் என்பதை இவர்கள் நிரூபித்தனர். ஆனால் இது சரியான எச்சரிக்கை மற்றும் ஆட்சேர்ப்பு வரிசையில் சப்பானியப் பட்டாணிக் குருவியின் எச்சரிக்கை அழைப்பைப் பின்பற்றும் வரை மட்டுமே எனத் தெரிவித்தனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Päckert, M.; Martens, J.; Eck, S.; Nazarenko, A. A.; Valchuk, O. P.; Petri, B.; Veith, M. (2005). "The great tit (Parus major) – a misclassified ring species". Biological Journal of the Linnean Society 86 (2): 153. doi:10.1111/j.1095-8312.2005.00529.x. https://www.researchgate.net/publication/229514602. 
  2. 2.0 2.1 Suzuki, TN; et al. (2016), "Experimental evidence for compositional syntax in bird calls", Nature Communications, p. 10986, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1038/ncomms10986, PMC 4786783, PMID 26954097. {{citation}}: Missing or empty |url= (help)
  3. Mason, Betsy (15 February 2022). "Do birds have language? It depends on how you define it.". Knowable Magazine (Annual Reviews). doi:10.1146/knowable-021522-1. https://knowablemagazine.org/article/mind/2022/do-birds-have-language. பார்த்த நாள்: 22 February 2022. 

வெளி இணைப்புகள்[தொகு]