துணையினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரியல் வகைப்பாடு

துணையினங்கள் (இலத்தீன் : Subspecies)என்பது உயிரியல் வகைப்பாட்டியலின் மிகச்சிறிய அலகு ஆகும். இதனை உயிரியல் வகைப்பாட்டில், "subsp." என்றும், சில நேரங்களில் அதற்கு மாற்றாக "ssp." என்றும் குறிப்பர். இது பெயரீட்டுத் தரநிலையில், இனம் என்பதன் கீழ்நிலையின் துணை அலகாகப் பயன்படுகிறது. இருப்பினும், இதனை தனித்துப் பொருள் காண்பது கூடாது. இதோடு தொடர்புடைய, உயிரியல் இனத்தைக் கொண்டே, அடையாளமிடப் படவேண்டும் . இதில் காலத்தால் அழிந்த அற்றுவிட்ட இனமும் அடங்கும். பன்னாட்டு விலங்கியல் பெயரீட்டு குறியாக்கம்(International Code of Zoological Nomenclature (ICZN) ) முறைமைப் படி, இனத்திற்கு கீழ், இது இன்றியமையாதது ஆகும்.[1] தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை முறைமைப்படியும், பிற நுண்ணுயிரிகளின் முறைமைப்படியும் இந்த அலகு, கட்டாயமில்லாமல் பயன்படுத்தப்படுகிறது.[2] இந்த பெயரிடலால், ஒரு கலப்பின உயிரினத்தை உருவாக்குதல் எளிதாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. International Code of Zoological Nomenclature. "ICZN Glossary". International Commission on Zoological Nomenclature.
  2. McNeill, J.; Barrie, F.R.; Buck, W.R.; Demoulin, V.; Greuter, W.; Hawksworth, D.L.; Herendeen, P.S.; Knapp, S.; Marhold, K.; Prado, J.; Prud'homme Van Reine, W.F.; Smith, G.F.; Wiersema, J.H.; Turland, N.J. (2012). International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code) adopted by the Eighteenth International Botanical Congress Melbourne, Australia, July 2011. Vol. Regnum Vegetabile 154. A.R.G. Gantner Verlag KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-87429-425-6. Archived from the original on 2013-11-04. பார்க்கப்பட்ட நாள் 2017-02-10.
  3. Peter J. Russell, Paul E. Hertz, Beverly McMillan (2011). "21-Speciation". Biology: The Dynamic Science. Brooks/Cole California. p. 456.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணையினம்&oldid=3539529" இலிருந்து மீள்விக்கப்பட்டது