கொக்காவில் சமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொக்காவில் சமர்
ஈழப் போர் பகுதி
நாள் 27 சூன் - 11 சூலை 1990
இடம் கொக்காவில், இலங்கை
விடுதலைப் புலிகள் வெற்றி
பிரிவினர்
இலங்கை ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
லெப்டினன்ட் சாலிய உபுல் அலதெனிய  
பலம்
54 [1][2] தெரியவில்லை
இழப்புகள்
48 கொல்லப்பட்டனர், 18 காயமுறனர்[3] தெரியவில்லை

கொக்காவில் சமர் (Battle of Kokavil) என்பது 1990 சூன் 27 முதல் சூலை 11 வரை இலங்கை, கொக்காவில்லில், நடந்த ஒரு சமராகும். கொக்காவிலில் உள்ள இலங்கை இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் 14 நாட்கள் முற்றுகையிடப்பட்டது. அந்த நேரத்தில் தளத்தில் நிலைகொண்டிருந்த 54 இலங்கை இராணுவ வீரர்களில், இரண்டு வீரர்களும், ஒரு சமையல்காரர் மட்டுமே போருக்குப் பிறகு உயிர் பிழைத்தனர். மற்றவர்கள் அனைவரும் புலிகளால் கொல்லப்பட்டனர்.

பின்னணி[தொகு]

இந்திய அமைதி காக்கும் படை திரும்பிய பின்னர் மீண்டும் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, இலங்கை உள்நாட்டுப் போரின் இரண்டாம் ஈழப்போர் 1990 சூனில் தொடங்கியது. 1990 ஆம் ஆண்டு சூன் மாத தொடக்கத்தில், மாங்குளம் பகுதியில் விடுதலைப் புலிப் போராளிகள் இலங்கை இராணுவத்தைத் தாக்கினர். இந்த ஆரம்ப தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன, ஆனால் சூன் 12 க்குள் மாங்குளம் மற்றும் கொக்காவில் ஆகிய இரண்டும் சூற்றிவளைக்கப்பட்டன. 1990ஆம் ஆண்டு சூன் மாதம் 11ஆம் நாள், 600க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அவர்களது காவல் நிலையங்களுடன் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். பின்னர், அவர்களை புலிகளிடம் சரணடையுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டது. பின்னர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[1]

ரூபவாகினி தொலைத்தொடர்பு நிலையம் மற்றும் அங்கு அமைந்துள்ள வசதிகளைப் பாதுகாப்பதற்காக கொக்காவிலில் இராணுவத்தினர் முகாமொன்றை உருவாக்கியிருந்தனர். அங்கு இலங்கை சிங்கப் படையணியின் ஏ நிறுவனம், 3வது (தன்னார்வ) பட்டாலியன் மாங்குளம் மற்றும் கொக்காவிலில் நிலைநிறுத்தப்பட்டன. அதே சமயம் கொக்காவிலில் எஞ்சியிருந்த இராணுவ வீரர்கள் 2வது (தன்னார்வ) பட்டாலியன், விஜயபாகு காலாட்படை படையணியில் இருந்து வந்தவர்கள்; இலங்கை சமிக்ஞைப் படை; இலங்கை இராணுவ சேவைப் படை; மற்றும் இலங்கை இராணுவ மருத்துவப் படை என 54 பேரை கொக்காவில்லில் நியமித்திருந்தனர்.[4] லெப்டினன்ட் சாலிய அலதெனியவின் தலைமையில் கொக்காவிலில் சிங்களம் படையினர் இருந்தனர். ஜூன் 16 அன்று போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, எனவே பேச்சுவார்த்தைகள் நடைபெறும் தறுவாயில் இருந்தன. சில நாட்களுக்குப் பிறகு, பதினாறு வீரர்களும், ஒரு அதிகாரியும், முகாமிலிருந்து விடுப்பில் சென்றனர். ஒரு அதிகாரியும், 53 வீரர்களும் முகாமில் எஞ்சி இருந்தனர். அவர்கள் ஒரு தன்னார்வ படையணியில் இருந்து வந்தவர்கள்.[1][5]

சமர்[தொகு]

ஜூன் 27 அன்று, விடுதலைப் புலிகள் முகாமை 14 நாட்களுக்கு சுற்றி வளைத்து, தொடர்ந்து முகாம் மீது தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். இலங்கைப் படைகளுக்கான மருந்து, உணவு, தண்ணீர் பற்றாகுறையாகவே இருந்தது. இதனால் உலங்கு வானூர்திகள் மூலம் பொருட்களை இறக்கிவிட வேண்டியிருந்தது, இருப்பினும், விடுதலைப் புலிகளின் கடும் துப்பாக்கிச் சூடு காரணமாக, முகாமுக்கு மிகமேலிருந்தே பொருட்களை இறக்கிவிட வேண்டியிருந்தது, இதனால் பெரும்பாலான பொருட்கள் முகாமின் சுற்றளவுக்கு வெளியே விழுந்தன.[1]

இறுதி தாக்குதல் சூலை 10 அன்று தொடங்கியது, புலிகள் முகாமைச் சுற்றி படைகளைக் கட்டியெழுப்பத் தொடங்கினர். அனைத்து வழிகளும் விடுதலைப் புலிகளால் அடைக்கபட்டிருந்ததால், முகாமில் இருந்த வீரர்களுக்கான துணைப்படைகள் மற்றும் மறுவிநியோகம் வரமுடியவில்லை. முகாமில் இருந்த இலங்கைப் படையினரிடம் 300 ரவைகள் மட்டுமே எஞ்சியிருந்தன, மேலும் 30 வீரர்கள் மட்டுமே உயிருடன் இருந்தனர், அவர்களில் பாதி பேர் படுகாயமடைந்திருந்தனர். இலங்கைப் படையின் கட்டளை அதிகாரி, லெப்டினன்ட் அலதெனியவுக்கு, வெளியேறுமாறு உத்தரவு வழங்கப்பட்டது, ஆனால் அவர் காயமடைந்தவர்களை விட்டுச் செல்ல விரும்பாததால் வெளியாற மறுத்துவிட்டார். சூலை 11 அன்று இரவு 11:45 மணிக்கு, புலிகள் இறுதியாக முகாமைக் கைப்பற்றினர்.[1] வன்னி தலைமையகத்திடம் லெப்டினன்ட் அலதெனியா பேசிய இறுதி வார்த்தைகள்,

கவலை வேண்டாம் ஐயா, நான் சாகும் வரை போராடுவேன்.[6]

பின்விளைவுகள்[தொகு]

இலங்கை இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் என 52 பேர் காணாமல் போனதாக இலங்கை இராணுவத்தால் அறிவிக்கப்பட்டனர். ஏனெனில் அவர்களுக்கு என்ன ஆனது என்று சரிபார்க்க இலங்கை இராணுவத்தால் அந்த இடத்தை அடைய முடியவில்லை 48 பேர் கொல்லப்பட்டதாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரி குறிப்பிட்டடார்.[3] புலிகள் தொலைத் தொடர்பு நிலையத்தையும் அதன் கோபுரத்தை அழித்தனர். லெப்டினன்ட் சாலிய அலாதெனிய மரணத்திற்குப் பின் கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார். மேலும் 1994 சூன் 21 அன்று அவரது துணிச்சலுக்காக பரம வீர விபூஷணாய விருது வழங்கப்பட்டது.[1] 3(V)SLSR இன் கோப்ரல் சிறிவர்தன மற்றும் 2(V)VIR இன் கோப்ரல் நிமால் சிறிவர்தன ஆகியோர் முகாமில் இருந்து தப்பித்து மாங்குளம் இராணுவ முகாமை அடைந்தனர். அத்துடன் தயானந்தா என்ற சமையல் பணியாளர், முகாம் கைப்பற்றபட்டபோது தப்பியோடினார்.

2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிளிநொச்சி போரின்போது (2008-2009) 57 ஆவது படைப் பிரிவின் படையினரால் கொக்காவில் மீண்டும் கைப்பற்றப்பட்டது. கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம், போரில் உயிரிழந்த 52 இலங்கை சிங்கப் படை வீரர்களுக்கான நினைவுச் சின்னத்துடன் புனரமைக்கப்பட்டது.[7]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "The Sunday Times Plus Section". Sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
  2. 3rd (Volunteer) Battalion of the Sri Lanka Sinha Regiment
  3. Humanitarian Operation Factual Analysis July 2006 – May 2009 (PDF). Ministry Of Defence Democratic Socialist Republic Of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
  4. A Soldier's Version.
  5. 3rd (Volunteer) Battalion of the Sri Lanka Sinha Regiment
  6. https://trinitycollege.lk/2021/11/14/dont-worry-sir-i-will-fight-till-i-die-capt-saliya-aladeniya/
  7. Kokavil Tower and War Memorial
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்காவில்_சமர்&oldid=3954746" இலிருந்து மீள்விக்கப்பட்டது