இலங்கை காவல்துறை அதிகாரிகள் படுகொலை, 1990

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை காவல்துறை அதிகாரிகள் படுகொலை, 1990
ஈழப் போர்
இடம்கிழக்கு மாகாணம், இலங்கை
நாள்11 சூன் 1990
தாக்குதலுக்கு
உள்ளானோர்
சரணடைந் இலங்கை காவல்துறை அதிகாரிகள்
தாக்குதல்
வகை
ஆயுதமேந்திய படுகொலை
ஆயுதம்துப்பாக்கிகள்
இறப்பு(கள்)600–774 காவல்துறை அதிகாரிகள்
10 போர்வீரர்கள்
தாக்கியோர்தமிழீழ விடுதலைப் புலிகள்

1990 ஆம் ஆண்டு சூன் மாதம் 11 ஆம் நாள் இலங்கை காவல்துறை அதிகாரிகள் பெருமளவில் திரள் கொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 600க்கும்[1] மேற்பட்ட இலங்கை காவல்துறை அதிகாரிகளைக் கொன்றதாக கூறப்படுகிறது. சில தரவுகள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 774 என மதிப்பிட்டுள்ளது.[2] இது 2001 செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் வரை உலகிலேயே மிகத் தீவிரமான நிகழ்வாக இது இருந்தது.

பின்னணி[தொகு]

இந்தியத் தலையீடு[தொகு]

இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி, இந்திய அமைதி காக்கும் படை 1987 சூலையில் இலங்கைக்கு வந்தது. இலங்கைப் பொதுமக்களிடையேயும் அரசியல்வாதிகளிடையேயும் அவர்கள் இருப்பது பொதுவாக விரும்பப்படவில்லை. 1989 சனவரியில், சனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் இரத்தக்களரியான பிரிவினைவாத போர்த்தொடர்களை நடத்தி வந்த புலிகளுடன் சமாதானத் திட்டத்தை உருவாக்க சனாதிபதி பிரேமதாச முதலில் எண்ணினார். பிரேமதாசவும் இலங்கையில் இந்தியப் படைகளின் தலையீடு குறித்து அதிருப்தியில் இருந்தார்.[3] 1989 சூன் மாதம் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் தலைமையை திருப்திபடுத்தும் முயற்சியில், பிரேமதாசா இந்திய அமைதிப் படைக்கு எதிராக போராடுவதற்காக (அவர்களின் வேண்டுகோளின்படி) பெரிய அளவிலான ஆயுதங்களை புலிகள் அமைப்புக்கு இரகசியமாக அளித்தார். மேலும் 1989 இன் பிற்பகுதியில், மக்களின் எதிர்மறையான கருத்து காரணமாக இந்திய அமைதிப் படையை வெளியேறுமாறு பிரேமதாசா கேட்டுக் கொண்டார். இந்திய பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் அதற்கு சம்மதித்து இந்தியப் படைகளை திரும்பப் பெற்றார்.

அமைதிப் பேச்சுவார்த்தையின் முறிவு[தொகு]

இதற்கிடையில், வெளிவிவகார அமைச்சர் அப்துல் காதர் சாகுல் அமீட் தலைமையிலான இலங்கை அரசின் தூதுக்குழு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆரம்ப கட்டங்களில் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நகர்வதாக தோன்றினாலும், வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைத்தல் மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தை ரத்து செய்தல் போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை. விடுதலைப் புலிகளின் பிரதான அரசியல் இராசதந்திரியும் பிரதான பேச்சுவார்த்தையாளருமான அன்ரன் பாலசிங்கம் "இது நாங்கள் உங்களுக்கு வழங்கும் கடைசி வாய்ப்பு. நீங்கள் இதைத் தவறவிட்டால், போர் தொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அரசாங்கத்தை எச்சரித்தினார். இலங்கை பாதுகாப்பு அமைச்சரான ரஞ்சன் விஜேரத்ன விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கைவிடுமாறு கூறியதை அடுத்து நிலைமை மோசமாகியது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட மறுத்ததால், அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பகை அதிகரிக்கத் தொடங்கியது.

முந்தைய நிகழ்வுகள்[தொகு]

இந்த நேரத்தில், இராணுவம் இராணுவ முகாம்களுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்து விடும் என்ற அச்சத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் 1990 மே மாத இறுதியில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. புலிகள் பதுங்கு குழிகளை அமைத்ததையும், அகழிகளைத் தோண்டியதையும், முகாம்களுக்கு அருகில் மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.[நம்பகமற்றது ]

தாண்டிக்குளம் நிகழ்வு[தொகு]

1990 சூன் 7 அன்று, வவுனியாவிலிருந்து முல்லைத்தீவுக்கு இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது விடுதலைப் புலிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு இராணுவ வீரர் இறந்தார், ஒன்பது பேர் காயமடைந்தனர்.[நம்பகமற்றது ]

படுகொலை[தொகு]

11 சூன் 1990 அன்று, காலை சுமார் 6:00 மணிக்கு மட்டக்களப்பு காவல் நிலையத்தை சுற்றி வளைத்த புலிகள் 3 காவல் அதிகாரிகளைக் கடத்திச் சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஆயுதம் ஏந்திய சுமார் 250 புலிகள் காவல் நிலையத்தை ஆக்கிரமித்தனர். பின்னர் சிங்களக் காவல் அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினருடன் வானூர்தி நிலையத்திற்கு அனுப்பிவைக்கபட்டனர். செயின்ட் மேரி தேவாலயத்திற்கு தமிழ் காவல்துறை அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பொறுப்பு அதிகாரியும், நான்கு காவலர்களும் கைது செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் காவல் நிலையத்திலிருந்து ரூ. 45 மில்லியன் ரொக்கம், தங்க நகைகள், 109 வகை 56 தாக்குதல் மரைகுழல் துப்பாக்கிகள்; 77 வகை 56 தாக்குதல் மரைகுழல் துப்பாக்கிகள்; 28 இலகுரக இயந்திர துப்பாக்கிகள்; 29 எல்1ஏ1 சுய-ஏற்ற மரைகுழல் துப்பாக்கிகள்; 65 சப்மஷைன் துப்பாக்கிகள்; 78 .303 துப்பாக்கிகள், 78 எஸ்.ஏ.ஆர் 80 துப்பாக்கிகள் போன்றவற்றைக் கைப்பற்றினர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் பிற்பகல் 2.30 மணிக்குள் காலி செய்ய வேண்டும் இல்லையால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று புலிகள் உத்தரவிட்டனர். சனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் வேண்டுகோளுக்கு இணங்க காவல் துறை அதிகாரிகளை சரணடையுமாறு பொலிஸ் மா அதிபர் ஏர்னஸ்ட் பெரேராவும் பணிப்புரை விடுத்தார்.[1][4] பாதுகாப்பான நடத்தை, பின்னர் விடுவிக்கப்படுவர் என்ற உறுதியின் பேரில் காவல் துறை அதிகாரிகள் தங்கள் ஆயுதங்களை கீழே வைத்தனர்.

பின்னர் சிங்கள அதிகாரிகள் இராணுவ அல்லது விமானப்படை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். தமிழ் அதிகாரிகள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கிடையில், புலிகள் 899 அதிகாரிகளை கடத்திச் சென்றனர். அதில் சுமார் 125 பேர் தப்பிக்க முடிந்தது. கைதிகள் விநாயகபுரம் திருக்கோணமலை காடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.[5] அதிகாரிகள் வந்தவுடன், புலிகள் அவர்களை வரிசையாக நிறுத்தி, அவர்களின் கைகளை பின்னால் கட்டி, சுட்டுக் கொன்றனர். மொத்தத்தில், இதில் 600 முதல் 774 காவல் அதிகாரிகள் இறந்தனர்.[2]

ஆனால் அனைத்து காவல் அதிகாரிகளும் புலிகளுக்கு இணங்கவில்லை. கல்முனை காவல் நிலைய பொறுப்பதிகாரியாக பணியாற்றிய ஏஎஸ்பி இவான் பொதேஜு சரணடைய மறுத்து 3:00 மணி முதல் புலிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டார். மாலை 6:00 மணி வரை அவர்கள் "கொல்லப்படாவிட்டால் [அவர்களிடம் சரணடைந்தால்] சித்திரவதை செய்யப்படுவோம்" என்று வலியுறுத்தி அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த நேரத்தில், அவர் நெருக்கமான வான் ஆதரவு மற்றும் பீரங்கி ஆதரவு ஆகியவற்றை மீண்டும் மீண்டும் கோரினார். ஆனால் அவை மறுக்கப்பட்டன. சுமார் 5:20 மணியளவில் ஐ.ஜி.பி தனிப்பட்ட முறையில் பொடேஜுவைத் தொடர்பு கொண்டு, துப்பாக்கிச் சூட்டை நிறுத்திவிட்டு சரணடையுமாறு உத்தரவிட்டார். அவர்கள் ஆயுதங்களை இறக்கி போட்டதும், புலிகள் அனைத்தையும் கைப்பறியதுடன், கொழும்பு காவல் தலைமையகத்துடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கபட்டன. பின்னர் விடுதலைப் புலிகள் அவர்களை திருக்கோவில் காடுகளுக்கு அழைத்துச் சென்று தூக்கிலிட்டனர்.[6]

கல்முனையில், விடுதலைப் புலிகள் இராணுவ வாகனத் தொடரணி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பத்து இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த 324 காவல் துறை அதிகாரிகள் சிங்களவர்களும், முஸ்லிம்களும் என தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் புலிகளால் திருக்கோவில் காடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆர். பிரேமதாச இரகசியமாக வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தியே இந்த காவல் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது பின்னர் தெரியவந்தது.

பின்விளைவுகள்[தொகு]

தடுப்புக்காவலில் இருந்த அதிகாரிகளை மீட்க இலங்கையின் தலைமை சமாதான பேச்சுவார்த்தையாளர் அமைச்சர் ஷாஹுல் ஹமீட் மேற்கொண்ட முயற்சிகள் வீணானது. இந்த படுகொலை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்துக்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்தது. 1990 சூன் 18 அன்று, பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன பாராளுமன்றத்தில் இருந்து "எல்லாம் முடிந்து விட்டது, போரைத் தவிர வேறு வழிகள் இல்லை" என்று அறிவித்தார்.[7] இது இரண்டாம் ஈழப் போரின் துவக்கமாக ஆனது.[8] தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களின் விளைவாக, கொக்குவில், மாங்குளம், கிளிநொச்சி, கொண்டாச்சி, சிலாவத்துறை உள்ளிட்ட முகாம்களை இராணுவம் கைவிட வேண்டியிருந்தது. இதில், காவல் நிலையங்கள் கைவிடப்பட்டதுடன், அரசாங்கம் பெருமளவு நிலப்பரப்பை இழந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான தரைப் பாதையையும் விடுதலைப் புலிகள் துண்டித்தனர். 1990 யூலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான பகுதிகளை விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுகுள் கொண்டுவந்தனர்.[3] இந்நிகழ்வுக்கு முன், விடுதலைப் புலிகளுக்கு மரபுவழி போர் திறன்கள் இருக்கவில்லை. முதலாம் ஈழப் போரின் போது, விடுதலைப் புலிகள் ஒரு கொரில்லா அமைப்பாகவே இருந்தனர்.[7]

இந்தப் படுகொலையின் போது, விடுதலைப் புலிகளின் தொடர்பாடல் நிபுணர் ஜூட் மற்றும் இரண்டு இராணுவப் பிரிவினர் அடங்கிய புலிகளின் சமாதானப் பிரதிநிதிகள் கொழும்பு ஹில்டனில் இருந்தனர். பின்னர் சிறப்பு அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் களுத்துறையில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டனர். சில நாட்களுக்குப் பின்னர் அவர்கள் விடுதலைப் புலிகளிடம் திரும்பி வந்து சேர்ந்தனர்.[7]

இந்தப் படுகொலையை அடுத்து, காவல்துறையினரால் கல் ஓயா பள்ளத்தாக்கில் கலவரம் தூண்டிவிடப்பட்டது. அதில் 26 தமிழர்கள் சிங்களக் கும்பலால் கொல்லப்பட்டனர்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Recalling the saddest day in Lankan Police history". Lanka Newspapers. 2011. Archived from the original on 2011-06-15. பார்க்கப்பட்ட நாள் 2011-06-12.
  2. 2.0 2.1 "Killing of 774 policemen". Rivira. 2011. Archived from the original on 15 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-06-12.
  3. 3.0 3.1 Rajasingham, K. T. (2002). "Sri Lanka: The Untold Story, Chapter 44: Eelam war – again". Archived from the original on 2002-09-17. பார்க்கப்பட்ட நாள் 2011-06-13.
  4. Staff (2011). "There are 600 plus (murdered) Police officers inside the one you see today". Archived from the original on 16 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-06-14.
  5. "June: The War Begins". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. UTHR. 2001. Archived from the original on 12 November 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-11-07.
  6. Seneviratne, SSP Tassie (2011). "'The Saddest Day in Police History'". Archived from the original on 15 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-06-14.
  7. 7.0 7.1 7.2 "Sri Lanka: The Untold Story, Chapter 44: Eelam war – again". Lanka Newspapers. 2011. Archived from the original on 2002-09-17. பார்க்கப்பட்ட நாள் 2011-06-12.
  8. Staff (2011). "Police honour slain comrades of 1990 massacre". Archived from the original on 13 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-06-14.
  9. "The East: Report from the Times of London JP Pogrom 1 by James Pringle". uthr.org. UTHR-J. பார்க்கப்பட்ட நாள் 8 August 2019.

வெளி இணைப்புகள்[தொகு]