கெஸ்டெர்நிக் சண்டை

ஆள்கூறுகள்: 50°36′27″N 6°19′45″E / 50.60753°N 6.32915°E / 50.60753; 6.32915
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெஸ்டெர்நிக் சண்டை
பல்ஜ் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி
நாள் டிசம்பர் 14 – 16, 1944; ஜனவரி 30 – பெப்ரவரி 1, 1945
இடம் கெஸ்டெர்நிக் , ஜெர்மனி
அமெரிக்க வெற்றி
பிரிவினர்
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா செருமனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
எட்வின் பி. பார்க்கர் ஆய்கென் கோனிக்
பலம்
78வது அமெரிக்கத் தரைப்படை டிவிசன் 272வது மற்றும் 236வது வோல்க்ஸ்கிரேனிடியர் டிவிசன்கள்

கெஸ்டெர்நிக் சண்டை (Battle of Kesternich) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். கெஸ்டெர்நிக் பெல்ஜிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஜெர்மானிய கிராமம். இது 1944-45 காலகட்டத்தில் மூன்று முறை கைமாறியது.

கெஸ்டர்நிக் கிராமத்தில் 1944-45ல் இரு சண்டைகள் நடைபெற்றன. முதல் கெஸ்டர்நிக் சண்டை டிசம்பர் 1944ல் நடைபெற்றது. பல்ஜ் தாக்குதல் ஆரம்பிக்க இருநாட்களுக்கு முன்னால் (டிசம்பர் 14, 1944ல்) அமெரிக்க 78வது தரைப்படை டிவிசனின் படைப்பிரிவுகள் கெஸ்டெர்நிக் கிராமத்தைத் தாக்கின. இரு நாள் சண்டைக்குப் பிறகு கிராமம் அமெரிக்கர் வசமானது. இத்தாக்குதல் ஜெர்மானியர்களின் பல்ஜ் தாக்குதலுக்கான போர்த் திட்டத்துக்கு இடையூறாக இருந்ததால், உடனடியாக கெஸ்டர்நிக் கிராமத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் அவர்கள் இறங்கினர். டிசம்பர் 15ம் தேதி நடந்த பெரும் ஜெர்மானிய எதிர்த்தாக்குதலில் கிராமம் மீண்டும் ஜெர்மானியர் வசமானது. அடுத்த ஒரு வார காலத்துக்கு கிராமத்தைக் கைப்பற்ற இரு தரப்பினிடையே கடும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்புக்கும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டாலும், அமெரிக்கர்களால் கிராமத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

பல்ஜ் சண்டை நேச நாட்டு வெற்றியில் முடிவடைந்தபின் அமெரிக்கப்படைகள் மீண்டும் கெஸ்டர்நிக்கைக் கைப்பற்ற முயன்றன. ஜனவரி 30ம் தேதி தொடங்கிய அமெரிக்கத் தாக்குதல் மூன்று நாட்கள் நீடித்தது. பெப்ரவரி 2ம் தேதி ஜெர்மானியப் படைகள் முறியடிக்கப்பட்டு கிராமத்தை அமெரிக்கர்கள் கைப்பற்றினர். கெஸ்டர்நிக்குக்கான சண்டை பல்ஜ் சண்டையின் பகுதியாக மட்டுமல்லாமல் ஊர்ட்கென் காடு சண்டையின் பகுதியாகவும் கருதப்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெஸ்டெர்நிக்_சண்டை&oldid=2917248" இலிருந்து மீள்விக்கப்பட்டது