அன்னூட் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹன்னூட் சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹன்னூட் சண்டை
பெல்ஜியம் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி

அழிக்கப்பட்ட இரு பிரெஞ்சு எஸ்.ஓ.எம்.யு.ஏ. எஸ்35 ரக கவச வண்டிகளை ஜெர்மானிய வீரர்கள் பார்வையிடுகிறார்கள்.
நாள் 12—14 மே 1940
இடம் ஹன்னூட், பெல்ஜியம்
கீழ்நிலை உத்தியளவில் பிரெஞ்சு வெற்றி[1][2]

மேல்நிலை உத்தியளவில் ஜெர்மானிய வெற்றி[3]

பிரிவினர்
பிரான்சு பிரான்சு
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
நெதர்லாந்து நெதர்லாந்து[4]
நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
பிரான்சு ரெனே பிரியூ
  • பிரான்சு கேப்ரியேல் பூகிரேய்ன்
  • பிரான்சு லாங்க்லாய்
நாட்சி ஜெர்மனி எரிக் ஹொயப்னர்
  • ஹோர்ஸ்ட் ஸ்டம்ஃப்
  • யொஹான் யொவாக்கீம் ஸ்டீவர்
பலம்
2 கவச டிவிசன்கள்
20,800 படை வீரர்கள்
600 கவச போரூர்திகள்[5][6]
2 பான்சர் (கவச)டிவிசன்கள்
25,927 படை வீரர்கள்
618 டாங்குகள்(some sources say 674)[7]
108 பீரங்கிகள் [5][8]
1,252 aircraft
இழப்புகள்
121 டாங்குகள்,[9]
60 மாண்டவர்
80 காயமடைந்தவர்
49 டாங்குகள் அழிக்கப்பட்டன
111 டாங்குகள் சேதமடைந்தன[10]

ஹன்னூட் சண்டை (Battle of Hannut) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. பெல்ஜியம் சண்டையின் ஒரு பகுதியான இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியத்தைத் தாக்கியதால் பிரெஞ்சு முதன்மைப் படைகளை ஆர்டென் காட்டுப் பகுதியிலிருந்து நகர்ந்து பெல்ஜியத்தை நோக்கி விரைந்தன.

மே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது இருமுனைத் தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மனியின் போர் உபாயத் திட்டமான “மஞ்சள் திட்ட” (ஜெர்மன்: Fall Gelb) த்தின்படி பெல்ஜியம் மீதான தாக்குதல் திசை திருப்பும் தாக்குதலாகும். இதன் மூலம் பிரான்சின் முதன்மைப் படைப்பிரிவுகளை பெல்ஜியத்திற்கு வரவழைக்க வேண்டும். அவை பெல்ஜியத்தை அடைந்த பின், அவற்றின் பின்பகுதியில் ஆர்டென் காடு வழியாக ஜெர்மானிய ஆர்மி குரூப் ஏ முக்கியத் தாக்குதல் நடத்த வேண்டுமென்று மஞ்சள் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரெஞ்சு முதலாம் ஆர்மியை பெல்ஜியத்துக்கு இழுக்க மே 12ம் தேதி இரண்டு ஜெர்மானிய கவச டிவிசன்கள் பெல்ஜியத்தின் ஹன்னூட் பகுதியைத் தாக்கின. அவற்றை எதிர்கொள்ள பிரெஞ்சு முதலாம் ஆர்மி விரைந்து வந்து எதிர்த் தாக்குதல் நடத்தியது. இச்சண்டையிலும் மே 15ம் தேதி நடந்த ஜெம்புளூ சண்டையிலும் பிரெஞ்சுப் படைகளே வெற்றி பெற்றன. இவ்விரண்டில் ஜெம்புளூ சண்டையே முக்கியமானது. ஹன்னூட் சண்டை ஜெம்புளூச் சண்டையின் துணைச் சண்டையே (screening action). இச்சண்டைகள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, ஆர்டென் காட்டில் நடந்த முக்கிய ஜெர்மானிய தாக்குதல் வெற்றி பெற்றது. அங்கு பிரெஞ்சு அரண் நிலையை உடைத்து முன்னேறிய ஜெர்மானியப் படைகள் பத்து நாட்களில் ஆங்கிலக் கால்வாயை அடைந்து விட்டன. இதனால் பெல்ஜியத்துக்கு விரைந்த நேச நாட்டுப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டன. ஹன்னூட்டிலும் ஜெம்புளூவிலும் பிரெஞ்சுப் படைகள் அடைந்த வெற்றி பயனில்லாமல் போனது.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Frieser 2005, ப. 246-48
  2. Healy 2008, p. 38.
  3. Gunsburg 1992, ப. 240
  4. contributed lightly armed infantry units retreating from Dutch territory. Also committed the Dutch Air Force on few, ineffective and costly missions.Gunsburg 1992, ப. 216
  5. 5.0 5.1 Gunsburg 1992, ப. 210
  6. Gunsburg gives these numbers: 2nd DLM: 400 officers, 10,000 men, 300 AFVs
    3rd DLM: some 400 officers,10,000 men, 300 AFVs
  7. Battistelli & Anderson 2007, ப. 75
  8. Gunsburg gives these numbers, including Befehlspanzer: 3rd Panzer Division: 400 officers, 13,187 men, 343 tanks, 48 artillery pieces,
    4th Panzer Division: 335 officers, 12,005 men, 331 tanks, 60 artillery pieces
  9. Gunsburg 1992, ப. 236
  10. Gunsburg 1992, ப. 237

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னூட்_சண்டை&oldid=2918916" இலிருந்து மீள்விக்கப்பட்டது