உள்ளடக்கத்துக்குச் செல்

எல். ரமணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லகந்துலா ரமணா
ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரமணா
தெலங்காணா சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
தெலங்காணாவில் தெலுங்கு தேசம் கட்சியின் முதல் தலைவர்
பதவியில்
30 செப்டம்பர் 2015 – 9 ஜூலை 2021
தேசியத் தலைவர்நா. சந்திரபாபு நாயுடு
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்பக்கனி நரசிம்முலு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 செப்டம்பர் 1961 (1961-09-04) (அகவை 62)
ஜக்டியால், கரீம்நகர், தெலங்காணா
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
(since 2021)
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி
(2021 வரை)
துணைவர்சந்தியா (8 ஆகஸ்ட் 1990)
வாழிடம்(s)ஜக்டியால், ஐதராபாத்து

எல் . ரமணா (L. Ramana) (பிறப்பு; 1961 செப்டம்பர் 4 , ஜக்டியால்) என்று பிரபலமாக அறியப்படும் லகந்துலா ரமணா (Lgandula Ramana)[1] தெலங்காணா மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் தற்போது கரீம்நகரில் பாரத் இராட்டிர சமிதி அரசியல்வாதியாவார்.[2]

சொந்த வாழ்க்கை[தொகு]

இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற இவர் சமூக சேவகராகவும் உள்ளார். சந்தியா என்பவரை 1990 ஆகஸ்ட் 8 அன்று திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் எல். மணிகண்டன் மருத்துவராகவும் இளைய மகன் எல். கார்த்திகேயன் துபாய் அமிட்டி பல்கலைக்கழகத்தில் இளம் வணிகவியல் பட்டதாரியாவார்.

வைகித்த பதவிகள்[தொகு]

  • 2009 முதல் 2014 வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார்.
  • ஆந்திரப் பிரதேச காதி கிராமத் தொழில் வாரியத் தலைவராக இருந்தார்.
  • பதினொராவது மக்களவை உறுப்பினராக 1996 முதல் 1998 வரை இருந்தார்.
  • 1994-96 வரை ஆந்திர சட்டப் பேரவையின் உறுப்பினராக இருந்தார். அப்போது கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._ரமணா&oldid=3823038" இலிருந்து மீள்விக்கப்பட்டது