நன்றி நண்பர் செல்வா....... விக்கியின் தரத்துக்கு எழுத முயற்சிக்கிறேன்.சில நாட்களாகலாம்,,தொடர்ந்து எனது முகனூலில் பேசவும் அன்புக்கு நன்றிகள் பல...டாக்டர் பாலசுப்ரமணியன்
சிவகுரு அவர்களுக்கு நன்றி. பரணில் ஏற்றுதல் தொடர்பான பதமொன்று சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட உரையாடற்பகுதி பரணில் ஏற்றப்படுதல் பொருத்தப்பாடற்றதும், வேண்டுமென்றே செய்யப்பட்டதும் என்று கொள்ளத் தோன்றுகின்றது!Sitralega (பேச்சு)
இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:37, 26 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
தெரியப்படுத்தியமைக்கு நன்றி, நட்கீரன். பணி அழுத்தத்தாலும், குடும்பச் சூழ்நிலை காரணமாகவும் 'ஆய்வுக்கட்டுரை' எழுதும் அளவிற்கு நேரமும், திறனும் எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை; இறைவனின் அருள் இருந்தால்... அடுத்த ஆண்டு கண்டிப்பாக செய்கிறேன்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:43, 28 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 15:09, 5 மார்ச் 2013 (UTC)
வலைவாசலின் முதற்பக்கம் எப்போது அமைக்கவிருக்கிறீர்கள்?--Kanags\உரையாடுக 11:07, 23 ஏப்ரல் 2013 (UTC)
முக்கிய துணைப் பக்கங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. அனைத்தையும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்; முதற்பக்கத்தின் வடிவமைப்பை இறுதி செய்யவேண்டும். இவ்வார முடிவுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:39, 23 ஏப்ரல் 2013 (UTC)
வணக்கம், சிவகுரு. தொடர்ந்தும் முனைப்புடனு் செயல்பட்டு வரும் நீங்கள், நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் பயன் மிக்கதாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் விருப்பத்தை அறிந்தால், நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:03, 2 மே 2013 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.
உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
கருத்துகளுக்கு நன்றி சிவகுரு. செங்கை ஐயா வலைவாசல் உருவாக்க உதவி செய்தால் முயலலாம் எனச் சொல்லியிருந்தார். உங்களைப் போல ஆளாளுக்கு ஒரு வலைவாசல் உருவாக்கியுள்ளீர்களே சரி நாமும் முயற்சி செய்வோமே எனச் செய்தது தான் (கத்துகுட்டி வேலை). எனக்கு இன்னுமே இவ்வாறான வேலைகள் புரியவில்லை:).... கண்டிப்பாக அனைவரின் கூட்டு முயற்சி இருந்தால் இலக்கிய வலைவாசல் பொலிவு பெறும். மீண்டும் நன்றிகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:03, 5 மே 2013 (UTC)[பதிலளி]
//பொதுவான இலக்கிய வலைவாசல் என்றால்... தமிழிலக்கியம், இந்திய இலக்கியம் மற்றும் உலக இலக்கியம் என மனதினுள் மூன்றாகப் பிரித்து இப்பக்கத்தின் வடிவமைப்பினைத் தீர்மானிக்கலாம்.//
பொதுவாக இலக்கிய வலைவாசல் தான் வடிவமைக்க நினைத்தேன். தாங்கள் கூறியபடி அமைப்பினும் சரி அல்லது தமிழிலக்கியத்திற்கென தனியாக இருப்பினும் எனக்கொன்றும் மாற்று கருத்து இல்லை. செம்மைப்படுத்தி உதவுங்கள். அவ்வப்போது எனகான பணியைக் கூறினால் நானும் இணைந்து கொள்கிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:31, 6 மே 2013 (UTC)[பதிலளி]
எனில் தமிழிலக்கிய வலைவாசலே அமைக்கலாம். தேவையானவற்றை செய்யுங்கள். உதவக் காத்திருக்கிறேன். வரும் நாட்களில் கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதில் கருத்தைச் செலுத்துகிறேன்.
சிவகுரு நண்பரே, தங்களது ஆலோசனைப் படி தஞ்சை கோவிலையும், பகவத் கீதையையும் இணைத்துள்ளேன். மேலும் தீபாவளி கட்டுரையை மேம்படுத்தி அதையும் இட்டுள்ளேன். வேறு கட்டுரைகள் ஏதேனும் சிறப்பு கட்டுரையாக இட தகுதி பெற்றவை என்றால் பரிந்துரை செய்யுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:15, 8 மே 2013 (UTC)[பதிலளி]
எந்த ஒரு விக்கிப்பயனருக்கு விக்கிப்பீடியாவின் தள அறிவிப்பில் நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பு நடக்கிறது என்ற அறிவிப்பு இடாமல் 16க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுகிறதோ அவர் தான் செல்வசிவகுருநாதன்.
வணக்கம், இலக்கிய வலைசாலுக்குத் தகுந்த ஈழத்து இலக்கியம் பற்றிய கட்டுரைகளைத் தேடி வருகிறேன். சிறந்த கட்டுரைகளாக ஒன்றிரண்டு கட்டுரைகளே உள்ளன. அவற்றைத் தருகிறேன். மேலும் தேடிப் பார்க்க வேண்டும். நன்றி.--Kanags\உரையாடுக22:42, 18 மே 2013 (UTC)[பதிலளி]
வணக்கம் சிவகுரு. வலைவாசல்: இலக்கியத்தில் மிகவும் பொறுமையாக திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும். இவ்வளவு முன்னேற்பாடுகள் இதில் இருகிறதென்பது எனக்கு இப்பொழுதே தெரியவருகிறது. இதில் இடம்பெறும் பகுதிகள் தானியக்கமாகக் காட்சிக்கு வருமா? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:44, 20 மே 2013 (UTC)[பதிலளி]
வணக்கம்,
. 26-5-13நடைபெற உள்ள விக்கியர் சந்திப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
நன்றி.
அருண் தாணுமாலயன்
ஐயா, தங்களைப் போன்ற அறிஞர்கள் இத்தகைய சந்திப்புகளில் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கியும், தங்கள் ஐயங்களைத் தீர்த்தும் கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் கலந்துகொள்வோர் என்ற வரிசையில் தங்கள் பெயரையும் சேருங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில்
பேரன்புடையீர்,
வணக்கம்.அண்மையில்,டாட்டா நினைவு மையம், கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையம் போன்ற சிறு தொகுப்பிற்கு படங்களை இணைக்க முயன்றேன்.முடியவில்லை.எங்கு தவறு என்று தெரியவில்லை.படிப்படியாக செய்ய வேண்டுவதை விளக்கினால் நலமாக இருக்கும். நன்றி உடையவனாக இருப்பேன்.
சிவகுரு, மலேசிய வானொலிப் பேட்டி குறித்த குழப்பத்துக்கு வருந்துகிறேன். பயனர் செல்வாவே அப்பேட்டியை அளித்துள்ளார். அது குறித்த விளக்கத்தையும் முத்துக்கிருசுணனின் பேச்சுப் பக்கத்தில் இட்டுள்ளார். நன்றி.--இரவி (பேச்சு) 06:31, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
அன்பு செல்வா! படம் இணைத்தமைக்கு நன்றி தங்களின் வேண்டுகோளில் ஒன்று அசுவமேத யாகம் உடனடியாக விக்கியாக்க தரமுயற்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, இக்கட்டுரையில் உள்ளவற்றை முழுமையாக மாற்ற நேரிடும் செய்யலாமா? ஆடிக் கிருத்திகை தகவல்கள் சேகரிக்கத் தொடங்கியவுடன் செய்துவிடுகிறேன்.--Yokishivam (பேச்சு) 11:10, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]
மீண்டும் நன்றிகள்! நான் அரசுத் துறை விருதுகளை மாவட்ட நில அளவை அலுவலரிடம் 2010ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் "சிறந்த உழைப்பாளர்" விருதும்,2011 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் குடியரசு தின விழாவில் "சிறந்த உழைப்பாளர்" விருதும், கிடைத்த போது எனக்கு ஏற்பட்ட உவகையும், உள்ள பூரிப்பும் மீண்டும் ஓய்வுக்குப் பிறகு (இருதய அறுவை சிகிச்சையினால் விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன்) கிடைத்திருப்பதில் மகிழ்கிறேன். நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 16:23, 15 சூன் 2013 (UTC) அசுவமேத யாகம் உடனடியாக விக்கியாக்க தரமுயற்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, இக்கட்டுரையில் உள்ளவற்றை முழுமையாக மாற்ற நேரிடும் செய்யலாமா? தங்களின் ஆலோசனை ?? அன்புடன்--Yokishivam (பேச்சு) 16:23, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]