உள்ளடக்கத்துக்குச் செல்

சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை
Map
சிவப்பு நிறத்தில் சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலையின் வரைபடம்
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு மும்பை பெருநகரப் பகுதி வளர்ச்சி ஆணையம்
நீளம்:2.2 km (1.4 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
12 பிப்ரவரி 2014 – present
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:மேற்கு விரைவு நெடுஞ்சாலை
கிழக்கு முடிவு:சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரா
முக்கிய நகரங்கள்:மும்பை
நெடுஞ்சாலை அமைப்பு

சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை (Sahar Elevated Access Road, சுருக்கமாக SEAR), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை மாநகரத்தில் அமைந்த கட்டுப்படுத்தப்பட்ட 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அணுகல் விரைவுச் சாலையாகும்.[1] இது மேற்கில் மேற்கு விரைவு நெடுஞ்சாலையை, வில்லே பார்லேயின் அனுமன் நகர் சந்திப்பில் சந்திக்கிறது. மேலும் இது கிழக்கில் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் இணைக்கிறது.[2][3] 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நான்கு வழிச்சாலையில், பாதசாரிகளுக்கு நடைமேடைகளும், பாலத்தின் கீழ் சுரங்கங்களும் கூடியது.[4]

சிக்னல் இல்லாத, இடது பக்கம் 3, வலது பக்கம் 3 என ஆறு வழித்தடங்கள் கொண்ட சாகர் உயர்த்தப்பட்ட 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அணுகல் சாலை[5], மேற்கு மும்பையின் வில்லே பார்லே பகுதியில் உள்ள அனுமன் நகர் சந்திப்பில் துவங்கி, சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் T2 முனையத்தில் முடிவடைகிறது,[2]

இந்த மேம்பால அணுகல் சாலையானது சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு செல்லும் நேரம் வெகுவாக குறைக்கிறது.[3][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mumbai airport's new world-class terminal". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2014-01-11 இம் மூலத்தில் இருந்து 2014-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140123230150/http://www.hindustantimes.com/india-news/mumbai/mumbai-airport-s-new-world-class-terminal/article1-1171631.aspx. 
  2. 2.0 2.1 "Sahar elevated road 'ready' after delays". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2014-01-08 இம் மூலத்தில் இருந்து 2014-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140120013047/http://articles.timesofindia.indiatimes.com/2014-01-08/mumbai/45990249_1_road-corridor-new-airport-terminal-weh. 
  3. 3.0 3.1 "Mumbai: Sahar elevated road corridor may open next month". The Economic Times. Press Trust of India. 2014-01-09. http://articles.economictimes.indiatimes.com/2014-01-09/news/46030345_1_road-corridor-elevated-corridor-sahar. 
  4. "Four ways to a faster commute". Hindustan Times. 13 February 2013 இம் மூலத்தில் இருந்து 13 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130213154235/http://www.hindustantimes.com/India-news/Mumbai/Four-ways-to-a-faster-commute/Article1-1010870.aspx. 
  5. "Rev up on Sahar elevated road only in Feb!". Free Press Journal இம் மூலத்தில் இருந்து 2 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202095044/http://freepressjournal.in/rev-up-on-sahar-elevated-road-only-in-feb/. 
  6. "Mumbai: Soon, zoom to Terminal 2 via elevated road". DNA. 2014-01-08. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.