இந்திய வெளிர் முள்ளெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய முள்ளெலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபோடைபா
குடும்பம்:
எரினாசெயிடே
துணைக்குடும்பம்:
பேரினம்:
பாராஎக்கினிசு
இனம்:
பா. மைக்ரோபசு
இருசொற் பெயரீடு
பாராஎக்கினிசு மைக்ரோபசு
(பிளைத், 1846)
இந்திய முள்ளெலி பரம்பல்

இந்திய முள்ளெலி (Indian Hedgehog, பாராஎக்கினிசு மைக்ரோபசு) என்றழைக்கப்படும் முள்ளெலி சிற்றினம், பெரும்பாலும் வடஇந்தியாவின் பாலைவனப் பகுதியில் காணப்பட்டாலும் இவை பிற இடங்களிலும் வாழ்கிறது.[2]

வாழிடம்[தொகு]

இந்தியாவும், பாகிசுதானும் இம்முள்ளெலிகளின் தாயகம் ஆகும்.[2] வட அமெரிக்காவில் காணப்படும் ரக்கூன் போன்று, இதன் முகம் அமைந்துள்ளது. இவ்விலங்கு நீர் வளத்திற்கு அருகே, தாவர வளமுள்ள மலை, சமவெளி போன்ற இடங்களில் வாழும் இயல்புடையது ஆகும்.

வளரியல்பு[தொகு]

மண்ணில் குழிபறிக்கும் குணம் உடைய இவ்விலங்கு, சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும் இயல்புடையது ஆகும். இதன் உடலின் நீளம் ~15 செ.மீ. இருக்கிறது. அவ்வுடலின் எடை ~200 - 350 கிலோகிராம் அளவுடையதாக இருக்கிறது.

இவ்வுயிரினம் தாவர உணவுகளுடன், தவளை, தேரை, பாம்பு, தேள் போன்றவைகளையும் உண்ணும் பழக்கம் உடையனவாக இருக்கிறது. உணவு இல்லாத போது, குளிர்கால ஒடுக்கம் மூலம் தனது வளர்சிதை மாற்றங்களைக் குறைத்துக் கொண்டு, நீண்ட நாள் உயிர் வாழும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Molur, S. (2016). "Paraechinus micropus". IUCN Red List of Threatened Species 2016: e.T40609A22326424. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T40609A22326424.en. https://www.iucnredlist.org/species/40609/22326424. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_வெளிர்_முள்ளெலி&oldid=3953889" இலிருந்து மீள்விக்கப்பட்டது