இந்திய வெளிர் முள்ளெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியவெளிர்முள்ளெலி[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Erinaceomorpha
குடும்பம்:
Erinaceidae
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. micropus
இருசொற் பெயரீடு
Paraechinus micropus
(பிளைத் [note 2], 1846)

இந்திய வெளிர் முள்ளெலி (Indian Hedgehog, விலங்கியல் இருசொற்பெயர் - Paraechinus micropus) என்றழைக்கப்படும் இம்முள்ளெலி இனம், பெரும்பாலும் வடஇந்தியாவின் பாலைவனப் பகுதியில் மட்டும் காணப்படுகிறது.

வாழிடம்[தொகு]

இந்தியாவும், பாகிசுதானும் இம்முள்ளெலிகளின் தாயகம் ஆகும். வட அமெரிக்காவில் காணப்படும் ரக்கூன் போன்று, இதன் முகம் அமைந்துள்ளது. இவ்விலங்கு நீர் வளத்திற்கு அருகே, தாவர வளமுள்ள மலை, சமவெளி போன்ற இடங்களில் வாழும் இயல்புடையது ஆகும்.

வளரியல்பு[தொகு]

மண்ணில் குழிபறிக்கும் குணம் உடைய இவ்விலங்கு, சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும் இயல்புடையது ஆகும். இதன் உடலின் நீளம் ~15 செ.மீ. இருக்கிறது. அவ்வுடலின் எடை ~200 - 350 கிலோகிராம் அளவுடையதாக இருக்கிறது.

இவ்வுயிரினம் தாவர உணவுகளுடன், தவளை, தேரை, பாம்பு, தேள் போன்றவைகளையும் உண்ணும் பழக்கம் உடையனவாக இருக்கிறது. உணவு இல்லாத போது, குளிர்கால ஒடுக்கம் மூலம் தனது வளர்சிதை மாற்றங்களைக் குறைத்துக் கொண்டு, நீண்ட நாள் உயிர் வாழும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றது.

குறிப்புகள்[தொகு]

  1. Erinaceinae - முள்ளெலிகள்
  2. Edward Blyth - பிளைத்

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்திய வெளிர் முள்ளெலி - Paraechinus micropus - அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder. ed. Mammal Species of the World (3 ). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பக். 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3. 
  2. Insectivore Specialist Group (1996). Hemiechinus micropus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது மே 12 2006. அன்று அதன் தரவுதளத்தில், இவ்வினத்திதற்கு குறைந்த அழிவாய்ப்பு இருப்பதற்கானக் காரணம் சேர்க்கப்பட்டது.

இதர இணைய இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_வெளிர்_முள்ளெலி&oldid=3233842" இலிருந்து மீள்விக்கப்பட்டது