1971 கோலாலம்பூர் வெள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1971 கோலாலம்பூர் வெள்ளம் (1971 Kuala Lumpur floods) மலேசியாவில் 1971 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு பேரழிவு நிகழ்வாகும். கடுமையான பருவ மழையின் விளைவாக இவ்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.[1] இதனால் கிளாங்கு, பாட்டு, மற்றும் கோம்பாக் நதிகளில் அபாய அளவைத்தாண்டி வெள்ளம் பெருகியது.[2] 32 பேர் இப்பேரழிவினால் கொல்லப்பட்டனர். 180,000 பேர் பாதிக்கப்பட்டனர்.[3][4] மலேசியப் பிரதமர் துன் அப்துல் இரசாக் மேற்கு மலேசியாவில் தேசிய பேரிடர் நிலையை அறிவித்தார்.[4]

1926 ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம் என 1971 கோலாலம்பூர் வெள்ளம் கருதப்பட்டது.[5] இவ்வெள்ளத்தின் விளைவாக கோலாலம்பூர் வெள்ளத் தணிப்புத் திட்டம் அமைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Monsoon rains flood Malaysia, toll heavy". The Bulletin. 4 January 1971 இம் மூலத்தில் இருந்து 25 May 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120525140906/http://news.google.com/newspapers?id=9Y4SAAAAIBAJ&sjid=JfcDAAAAIBAJ&pg=4490,3063588&dq=. பார்த்த நாள்: 17 June 2009. 
  2. Jansen, Robert B. (1988). Advanced dam engineering for design, construction, and rehabilitation. Springer. p. 517. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-442-24397-9.
  3. 3.0 3.1 Fernandez, C. (7 December 1988). "Need to manage our water better". New Straits Times. https://news.google.com/newspapers?id=RLsTAAAAIBAJ&sjid=iJADAAAAIBAJ&pg=4906,1654697&dq=. பார்த்த நாள்: 17 June 2009. 
  4. 4.0 4.1 "Kuala Lumpur". The Sydney Morning Herald. 7 January 1971. https://news.google.com/newspapers?id=VFEVAAAAIBAJ&sjid=beUDAAAAIBAJ&pg=5513,1908878&dq=. பார்த்த நாள்: 17 June 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Floods wreak havoc, but Man's to blame". New Straits Times. 13 September 1988. https://news.google.com/newspapers?id=grgTAAAAIBAJ&sjid=S5ADAAAAIBAJ&pg=6621,3147763&dq=. பார்த்த நாள்: 17 June 2009. 

மேலும் வாசிக்க[தொகு]

  • Chronicles of Malaysia (1957-2007)
"https://ta.wikipedia.org/w/index.php?title=1971_கோலாலம்பூர்_வெள்ளம்&oldid=3620927" இலிருந்து மீள்விக்கப்பட்டது