உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிரலால் மசூம்தார் நினைவு மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 22°39′23.76″N 88°21′30.16″E / 22.6566000°N 88.3583778°E / 22.6566000; 88.3583778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிரலால் மசூம்தார் நினைவு மகளிர் கல்லூரி
உருவாக்கம்1959
முதல்வர்முனைவர்.சோமா கோஷ்
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புமேற்கு வங்காள மாநில பல்கலைக்கழகம்
இணையதளம்கல்லூரியின் இணையதளம்
ஹிரலால் மசூம்தார் நினைவு மகளிர் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
ஹிரலால் மசூம்தார் நினைவு மகளிர் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
ஹிரலால் மசூம்தார் நினைவு மகளிர் கல்லூரி is located in இந்தியா
ஹிரலால் மசூம்தார் நினைவு மகளிர் கல்லூரி
ஹிரலால் மசூம்தார் நினைவு மகளிர் கல்லூரி (இந்தியா)

ஹிரலால் மசூம்தார் நினைவு மகளிர் கல்லூரி என்பது மேற்கு வங்காளத்தின் தட்சினேஸ்வரத்தில் 1959 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரி ஆகும்.[1] கலை, வணிகம் மற்றும் அறிவியல் ஆகிய பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை பெண் மாணவிகளுக்கு வழங்கும் இக்கல்லூரி, மேற்கு வங்காள மாநில பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2]


1959 ஆம் ஆண்டில் பிஸ்வரூப் சேவாஸ்ரம அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இக்கல்லூரி, சாதி மற்றும் மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தகுதியான மாணவர்களுக்கு இணக்கமான சூழ்நிலையில் பல்கலைக்கழக கல்வியை வழங்குவதற்கான முதன்மை நோக்கத்துடனும் பெண்களின் அதிகாரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

1959 ஆகஸ்ட் 10 ஆம் நாள் வங்காளம், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, சமஸ்கிருதம், அரசியல் அறிவியல் மற்றும் தத்துவம் ஆகிய துறைகளுடன் ஆரம்பிக்கபட்ட இக்கல்லூரியில் தற்போது 27 இளநிலை பட்டப்படிப்பு பிரிவுகளில் 1326 மாணவர்கள் வரை பயின்றுவருகின்றனர். [3]


30 முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களுடன் மொத்தம் 111 பேர் வரை பணியாற்றுகின்றனர். 2001 ஆம் ஆண்டில் மேற்கு வங்க அரசால் முழு சட்ட அங்கீகாரம் பெற்று தனியார் அறக்கட்டளை கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வந்துள்ளது. ஆரம்பத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த இக்கல்லூரி, 2008 ஆம் ஆண்டிலிருந்து பராசத்தில் உள்ள மேற்கு வங்க மாநில பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டது.

அங்கீகாரம்[தொகு]

இந்த மசூம்தார் நினைவு மகளிர் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (என்ஏஏசி) 2016 ஆம் ஆண்டில் பி + + தரத்தை பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 2011-11-16 at the வந்தவழி இயந்திரம்
  2. "Affiliated College of West Bengal State University". Archived from the original on 2012-10-29.
  3. "கல்லூரியின் வரலாறு".