விளைநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகின் விளைநிலங்கள்

விளைநிலம் என்பது பயிர் விளைவிக்கக்கூடிய நிலமாகும்.[1] 2008 நிலவரப்படி, உலகின் மொத்த விளைநிலம் 13,805,153 km² ஆகும்.[2]

நீர்ப்பாசனம், காடழிப்பு, பாலைவனமாதல், பெருநகரங்களின் விரிவாக்கம் போன்ற மாந்தச் செயற்பாடுகள், தட்பவெப்ப மாறுபாடுகள் காரணாமாக, வட்டார அளவிலும் சரி, உலக அளவிலும் சரி விளைநிலங்களின் அளவு மாறிக் கொண்டே இருக்கிறது. ஆய்வாளர்கள் இந்த மாற்றங்களின் காரணமாக உணவு உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களை ஆய்ந்து வருகிறார்கள்.[3][4]

நிலவரலாற்றுக் காலத்தில் ஆறுகளும் கடல்களும் விட்டுச் சென்ற படுகைகள் உள்ள நிலங்களே நல்ல விளைச்சல் தரக்கூடிய நிலங்களாக உள்ளன. எனினும் நவீன உலகில், வெள்ளக்கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் முன்பு போல் ஆற்று வெள்ளம் பாய்ந்து வளமான மண்ணை விட்டுச் செல்வதில்லை.

சான்றுகள்[தொகு]

  1. Sullivan (2003). Economics: Principles in Action. Upper Saddle River, New Jersey 07458: Prentice Hall. p. 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-063085-3. Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2021-02-26. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)CS1 maint: location (link)
  2. "FAO Resources page". FAO.org. 2010.
  3. "y4683e06". Fao.org. Archived from the original on 8 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 30 September 2010.
  4. "CAPSA Flash Detail". Uncapsa.org. பார்க்கப்பட்ட நாள் 30 September 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளைநிலம்&oldid=3571918" இலிருந்து மீள்விக்கப்பட்டது