வினோபா பாவே பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினோபா பாவே பல்கலைக்கழகம்
Vinoba Bhave University
முந்தைய பெயர்கள்
ராஞ்சி பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைJeewanam Satya Sodhanam
வாழ்க்கை என்பது சத்தியத்தின் கருவி
வகைபொது
உருவாக்கம்1992 (32 ஆண்டுகளுக்கு முன்னர்) (1992)
நிறுவுனர்லாலு பிரசாத் யாதவ்
வேந்தர்ஜார்க்கண்ட் ஆளுநர்
துணை வேந்தர்முகுல் நாராயணன் தியோ
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையதளம்vbu.ac.in

வினோபா பாவே பல்கலைக்கழகம் (Vinoba Bhave University) என்பது இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் ஹசாரிபாக் என்ற இடத்தில் அமைந்துள்ள மாநில பல்கலைக்கழகம் ஆகும். இது மாநில தலைநகரான ராஞ்சியிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது.[1] இந்தப் பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை மட்டங்களில் படிப்புகளை வழங்குகிறது. 25 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை நிர்வகிக்கிறது. மேலும் எழுபது இளங்கலை நிறுவனங்கள் மற்றும் மாநிலத்திலுள்ள தொழிற்கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. ராஞ்சி பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து இப்பல்கலைக்கழகம் 1992 செப்டம்பர் 17 அன்று உருவானது.

சார்க்கண்ட் ஆளுநர் ரமேசு பைசு இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார். இப்பல்கலைக்கழகம் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் சங்கத்தில் உறுப்பினராக உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுஇப் பல்கலைக்கழகத்தை அங்கீகரித்து 1956 பல்கலைக்கழக மானிய ஆணையச் சட்டத்தின் 12 பி பிரிவின் கீழ் பதிவு செய்தது.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About VBU « विनोबा भावे विश्वविद्यालय, हजारीबाग". vbu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
  2. "UGC Act-1956" (PDF). mhrd.gov.in/. Secretary, University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.

 

வெளி இணைப்புகள்[தொகு]