விதி மதி உல்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விதி மதி உல்டா
இயக்கம்விஜய் பாலாஜி
தயாரிப்புரமீஸ் ராஜா
இசைஅஸ்வின் விநாயகமூர்த்தி
நடிப்புரமீஸ் ராஜா
ஜனனி ஐயர்
டேனியல் பாலாஜி

கருணாகரன்
சென்றாயன்
சித்ரா லஷ்மணன்

கு. ஞானசம்பந்தம்
ஒளிப்பதிவுமார்ட்டின் ஜோ
படத்தொகுப்புபுவன் சீனிவாசன்
கலையகம்ரைட் மீடியா ஒர்க்ஸ்
வெளியீடு05 சனவரி 2018
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விதி மதி உல்டா (Vithi Mathi Ulta) விஜய் பாலாஜி இயக்கத்தில், ரைட் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் தமிழ்த்திரைப்படம். கனவில் கெட்டதாகக் கண்டது உண்மையில் நடக்கக்கூடாது என்று நாயகன் களத்தில் இறங்கும் கதையே விதி மதி உல்டா.[1] இத்திரைப்படத்தில் ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில், மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவில், கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பில் 2018இல் தமிழில் வெளிவந்துள்ள முதல் திரைப்படம்.[2]

நடிப்பு[தொகு]

பின்வரும் நடிக நடிகையர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்[2]

கதை[தொகு]

ஈஎஸ்பி எனப்படும் வருங்காலத்தை உணர்தல் என்னும் தன்மையை அடிப்படையாகக் கொண்ட கதை.[3] ரமீஸ் ராஜாவின் கனவில் நடந்தவை அப்படியே நடப்பு வாழ்க்கையில் நடக்கத் தொடங்குகிறது. தன்னைப்பிறர் கடத்துவது, தன் காதலி கடத்தப்படுவது, அம்மா, அப்பா கொலை செய்யப்படுவது இவை அனைத்தையும் தெரிந்து கொண்ட கதைநாயகன் இவற்றையெல்லாம் தடுத்தாரா இல்லையா, என்ன நடந்தது என்பதே படத்தின் விறுவிறுப்பான கதை.[4]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விதி_மதி_உல்டா&oldid=3709449" இலிருந்து மீள்விக்கப்பட்டது