உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய்பாத் சிங்கானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய்பாத் சிங்கானியா
இருப்பிடம்மும்பை
தேசியம்இந்தியா
பணிதொழிலதிபர்
அறியப்படுவது67 வயதில் சூடான காற்று பலூன் பயணத்தில் மிக உயரத்திற்கு பறந்து உலக சாதனை புரிந்தது.
பட்டம்மும்பை செரீப்
பதவிக்காலம்1 ஆண்டு
முன்னிருந்தவர்சதருதீன் தயா
பின்வந்தவர்இந்து சஹானி

விஜய்பாத் சிங்கானியா (Vijaypat Singhania) என்பவர் மும்பையின் முன்னாள் செரிப் மற்றும் ஆடை மற்றும் துணிகளுக்கான ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் 2005 திசம்பர் 19 முதல் 2006 திசம்பர் 18 வரை ரேமண்ட் குழுமத்தின் தலைவராக இருந்தார்.

விஜய்பாத் சிங்கானியா தனது 67 வது வயதில் ஒரு சாதனையாக. வெப்பக்காற்று அடைக்கப்பட்ட என்வலோப் என்ற பலூனில் 69 ஆயிரத்து 852 அடி உயரத்தில் பறந்து முந்தைய உலக சாதனையை முறியடித்தார்.[1] 1998 இல் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு சிறிய ரக விமானத்தில் தனியாக ஓட்டி உலக சாதனையை நிகழ்த்தினார். சிங்கானியாவுக்கு 5,000 மணிநேரங்கள் விமானம் செலுத்திய அனுபவம் கொண்டவர். மேலும், 1994 இல் நடந்த பந்தயத்தில் 24 நாளில் 34 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு விமானத்தை ஓட்டி தங்கப் பதக்கம் வென்றார். இவரது விமானம் ஓட்டும் திறமையைப் பாராட்டி, இந்திய விமானப் படையின் கவுரவ ஏர் கமாடோர் பதவியும் அளிக்கப்பட்டது. 2005 இல், அவருக்கு ராயல் ஏரோ கிளப்பின் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசின் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூஷண் பட்டம் வழங்கப்பட்டது.[2] 1988 இல் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு தனது சிறிய ரக விமானத்தில் தனியாகப் பறந்து வந்தார். அது குறித்து `அன் ஏஞ்சல் இன் தி காக்பிட்’ என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் ஐ.ஐ.எம் அகமதாபாத் நிர்வாக ஆளுநராக நா. ரா. நாராயணமூர்த்தியின் பரிந்துரையால் நியமிக்கப்பட்டார்.

நூற்பட்டியல்[தொகு]

  • Singhania, Vijaypat (2005). An Angel in the Cockpit: the true story of a death-defying flight across 5000 miles of land and sea. New Delhi: Roli. p. 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7436-427-7. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian sets balloon flight record". BBC. 2005-11-26. pp. 1. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4467766.stm. பார்த்த நாள்: 2009-03-06. 
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்பாத்_சிங்கானியா&oldid=3571989" இலிருந்து மீள்விக்கப்பட்டது