விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2016

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2016ஆம் ஆண்டுக்குரிய மாரத்தான் நிகழ்வு சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:16, 24 சூலை 2016 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன், வாழ்த்தா? போன ஆண்டு ஒருங்கிணைத்தது போலவே களமிறங்கி சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டுகிறோம் :)--இரவி (பேச்சு) 17:42, 24 சூலை 2016 (UTC)[பதிலளி]
ஒரு மகிழ்ச்சியான நிகழ்வும், இரண்டு துயர நிகழ்வுகளும் கடந்த 2 வார காலகட்டத்தில் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்ததால்... இம்முறை மாரத்தான் நிகழ்வை ஒருங்கிணைக்க இயலாத சூழலுள்ளது. எவ்வித வாக்குறுதியும் (commitment) இல்லாது பணியாற்ற விரும்புகிறேன்; புரிதலுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:53, 24 சூலை 2016 (UTC)[பதிலளி]
மா. செல்வசிவகுருநாதன், வருந்துகிறேன். இந்நிலையில் நீங்கள் இயன்ற அளவு பங்களிப்பதே போற்றுதலுக்குரியது. நன்றி. --இரவி (பேச்சு) 18:10, 24 சூலை 2016 (UTC)[பதிலளி]
அனைத்து தோழமைகளுக்கும் அன்புமுனுசாமியின் அன்பு வணக்கம், விக்கி மாரத்தான் (2016) எனும் இதுபோன்ற நிகழ்வில் முதன்முதலாக கலந்துகொள்ள இருக்கிறேன், எனது ஆக்கத்திற்கு, மூத்த பயனர்களான தாங்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்--அன்புமுனுசாமிஇந்தியா 02:45, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]
அன்புமுனுசாமிஇந்தியா, நீங்களே ஏற்கனவே மூத்த பயனர் தான் :) இணைந்து கலக்குங்கள். மற்ற பயனர்களுக்கும் வழிகாட்டி ஊக்குவியுங்கள். --இரவி (பேச்சு) 11:28, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]
இரவி அவர்களுக்கு, வணக்கம்+மகிழ்ச்சி=நன்றிகள்--விக்கியில் அடியேன் அறிந்தது அணுவளவு, அறியாதது அண்டமளவு, இருப்பினும்; தாங்களின் வழிகாட்டலின்படி பயணிக்க விழைகிறேன்.--அன்புமுனுசாமிஇந்தியா 16:40, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]


இலக்கு[தொகு]

இலக்காக கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைத் திருத்துவதையும் சேர்க்கலாம். காண்க: விக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் --AntanO 05:06, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--இரவி (பேச்சு) 11:43, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

நீக்கிய பக்கங்களை நிரப்பும் இலக்கு[தொகு]

@Ravidreams:இரவி அவர்களுக்கு வணக்கம், வரவிருக்கும் விக்கி மாரத்தான் 2016 நிகழ்வில், எனது கணக்கில் உள்ள நீக்கிய பக்கங்களை (24 பக்கங்கள்) வேறொரு தலைப்புகளைக் கொண்டு புதிய கட்டுரைகள் எழுத எண்ணமுள்ளது, அப்படியொரு வழியுள்ளதா? தாங்களின் ஆலோசனைக்கு காத்திருக்கிறேன். நன்றிகள்...----அன்புமுனுசாமி இந்தியா--மாலை, 07:00, 27 சூலை 2016.

அன்புமுனுசாமி, நீங்கள் குறிப்பிடுவது இங்குள்ள கட்டுரைகளா? அவை என்ன காரணத்துக்காக நீக்கப்பட்டன என்பதைக் கருத்தில் கொண்டு மீண்டும் முயலலாம். ஐயம் இருந்தால் அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் கேட்டு விட்டுத் தொடருங்கள். கலைக்களஞ்சியத்துக்கு முற்றிலும் பொருத்தமில்லாத தலைப்பு, உள்ளடக்கங்களைத் தவிர்ப்பதே நல்லது.--இரவி (பேச்சு) 06:12, 28 சூலை 2016 (UTC)[பதிலளி]

பயனர்களுக்கான அழைப்பு[தொகு]

@Ravidreams: அண்மையில் தமிழ் விக்கிக்கு வருகை தந்திராத நெடுங்காலப் பயனர்களுக்கும், தள அறிவிப்பினைக் கவனிக்கத் தவறிய சில பயனர்களுக்கும் அவர்களின் பேச்சுப் பக்கத்தில் அழைப்பினை விடுத்தேன். விவரத்தினை இங்கு அறியலாம். இந்த அழைப்பிற்கு பலனும் கிடைத்ததை உணர்ந்தேன். நான் கவனிக்கத் தவறிய பயனர்களுக்கு அவர்களின் பேச்சுப் பக்கத்தில் அழைப்பு விடுக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:42, 28 சூலை 2016 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன், நன்றி. நானும் முயல்கிறேன். --இரவி (பேச்சு) 06:13, 28 சூலை 2016 (UTC)[பதிலளி]
பட்டியல்

--AntanO 10:20, 29 சூலை 2016 (UTC)[பதிலளி]

பயனர்களின் தனிப்பட்ட திட்டம்[தொகு]

இந்த மாரத்தான் நிகழ்வுக்கான தமதுத் திட்டங்களை பயனர்கள் இங்கு பட்டியலிடலாம்: (ஒருங்கிணைந்துப் பணியாற்ற இப்பட்டியல் உதவக்கூடும்)

ஓட்டம் நிகழும்போது இடம்பெறும் உரையாடல்கள்[தொகு]

மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பாராட்டுகள்!

  • கருத்துகள் ஏதேனும் இருப்பின் இங்கு பதிவு செய்யுங்கள்.
  • உதவிகள் எதுவும் தேவையெனில் இங்கு கேளுங்கள்...

முதற்பக்கம்[தொகு]

முதற்பக்கக் கட்டுரைகள்[தொகு]

சற்று மேம்படுத்தினால் முதற்பக்கக் கட்டுரையாக இடம்பெறச் செய்யலாம்.

கவனிக்க
@5anan27, Drsrisenthil, கி.மூர்த்தி, Kanags, and Booradleyp1:

உ.தெ[தொகு]

இங்கு முன்மொழியலாம்.

--AntanO 01:43, 1 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]