விக்கிப்பீடியா பேச்சு:பரப்புரைக் கையேடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பரப்புரையில் ஈடுபடுவோருக்கான குறிப்புகள், கருத்துகளை இந்தப் பக்கத்தில் வழங்கலாம். அவற்றைத் தொகுத்து திட்டப் பக்கத்தில் இடுவோம்.

(ஆலமரத்தடி உரையாடல் தொடர்ச்சி)

ஆங்கிலம், இந்தி, மராட்டி போன்ற மொழிகளில் உள்ள கட்டுரை எண்ணிக்கையை வலியுறுத்தாதீர்கள். சராசரி பைட்டு அளவில் தமிழ் உலக மொழிகளில் 10-ஆவதாக உள்ளது (கடைசியாக கிடைக்கும் ஏப்பிரல் 2010 -இன் தரவுப்படி). இதைவிளக்குவது கடினம், ஆனால் தமிழில் ஓருவரிக் கட்டுரைகள் எழுதுவதை தவிர்க்க முயல்கின்றோம், சராசரி கட்டுரை அளவில் உலக மொழிகளில் 10-ஆவதாக இருக்கின்றோம். மொத்த பைட்டு அளவில் உலகத்தில் 32-ஆவதாக இருக்கின்றோம் என்பனவற்றைக் கூற வேண்டும். அதே போல பதிவு செய்த பயனர்கள் என்பது வேறு பங்களிப்பாளர்கள் என்பது வேறு. இதனையும் தெளிவாகக் கூறுதல் வேண்டும். ஆங்கிலத்தில்ம் கூட பதிவு செய்தவர்கள் 19,174,242 பேர் ஆனால் பங்களிப்பவர்கள் 124,793 பேர் (153 பேரில் ஒருவரே பங்களிக்கின்றார்கள்). தமிழிலும் 52,450 பேர் பதிவு செய்திருந்தாலும், 290 பேர் பங்களிக்கின்றார்கள். இது 180 இல் ஒருவர். இவை எல்லாம் இக்குபிக்கான நுணுக்கமான குறிப்புகள்தான், ஆனால் கட்டுரை எண்ணிக்கையை மட்டும் கூறி நாம் 59 ஆவது இடத்தில் இருக்கின்றோம் என்பது சரியான கருத்தை எடுத்துச் செல்லாது. அதே போல 52,000 பேர் பதிவு செய்திருக்கின்றார்கள் என்பதும் சரியான கருத்தை வெளிப்படுத்தாது. 290 இதுவரை ஆர்வமாகப் பங்களிக்கின்றார்கள் என்பது பயனுடைய கருத்து. பல புகழ் பெற்ற நாளிதழ்களும் கூட இந்த வெறும் "கட்டுரை" எண்ணிக்கையை மட்டுமே வலியுறுத்துகின்றர். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்த நாமாவது சராசரி கட்டுரையின் அளவு, சிறிதேனும் விளக்கம் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை (0.5 கி.பை, 2 கி.பை) ஆகியவற்றைக் கூற வேண்டும். இவற்றில் நாம் அவ்வளவு பின் தங்கி இல்லை (0.5 பைட்டில் 23-ஆவதாகவும் 2 கி.பை அளவில் நாம் உலக மொழிகளில் 27 ஆவதாகவும் இருக்கின்றோம்)--செல்வா (பேச்சு) 17:24, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:22, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]


இதே போல் ஒரு பக்கம் உள்ளது. பார்க்க விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தல். அதை இற்றை செய்வது நன்று. தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவை நாம் தொடர்ச்சியாக இற்றை செய்ய வேண்டும். அதே போன்ரு முதற் பக்க உள்டக்கத்தை தானியக்கமாக பல ஊடகங்களில் (முகநூல், கீச்சு, பின்னப்) பகிர முடிந்தால் அதுவும் நல்லது. --Natkeeran (பேச்சு) 13:28, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]