விக்கிப்பீடியா பேச்சு:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Sridhar G: வணக்கம். 2023 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தை நடத்தியபோது, விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023/தலைப்புகள் எனும் பக்கத்தை உருவாக்கித் தந்தீர்கள். இதேப் பக்கத்தை 2024 ஆம் ஆண்டிற்கும் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், துப்புரவு / செம்மையாக்கப்பட வேண்டிய கட்டுரைகளைப் பார்வையிடுதல் சற்று கடினமாக (அல்லது) சலிப்பூட்டுவதாக இருப்பதாக உணர்கிறேன். செய்து முடித்ததை அட்டவணைகளில் ஆயிற்று என இற்றை செய்வதும் பயனர்களுக்கு சற்றுக் கடினமாக இருக்கும். புதிதாக பட்டியலிருந்தால் திட்டத்தின் செயல்திறனை அளக்கவும் எளிதாக இருக்கும். விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024/தலைப்புகள் எனும் பக்கத்தில் 729 கட்டுரைகளின் பட்டியலை புதிதாக உருவாக்கலாமா? உங்களின் எண்ணத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:50, 24 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

தாராளமாக உருவாக்கலாம்.-- ஸ்ரீதர். ஞா (✉) 08:23, 24 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

@Sridhar G: உருவாக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சுமார் 10 அட்டவணைகளில் பிரித்து, பட்டியல்படுத்துவதற்கு பரிந்துரைக்கிறேன். கையாள எளிதாக இருக்கும் என நம்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:37, 24 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று பைட்டுகள் வாரியாக பட்டியலிட்டுள்ளேன். கையாள எளிதாக இருக்கும் என்பதற்காக விரிக்கும் வகையில் உள்ளன. விக்கிப்பீடியா நடைமுறைகள் தெரிந்தவர்களே துப்புரவு செய்வார்கள் என்பதால் இவ்வாறு செய்துள்ளேன். வேறு மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? -- ஸ்ரீதர். ஞா (✉) 11:43, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Page ID, Namespace இவற்றை இப்போது நீக்க இயலுமா? Last change என்பதனை நிலை என்பதாக இப்போது மாற்ற இயலுமா? இதற்குரிய Cellsஐ பயனர்கள் நிரப்புமாறு வெற்றாகவே விட்டுவிடலாம். (நடப்பு ஆண்டில் உள்ள அட்டவணை போன்று) - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:24, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

வணக்கம், இதனை இரு தினங்களுக்குள் செய்து முடிக்கிறேன்.நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 14:09, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று பயனர் என்பதனையும் இணைத்துள்ளேன். பயனர்கள் வாரியாக கணக்கிட உதவியாக இருக்கும்.வேறு மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 02:15, 30 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

பணியை நிறைவு செய்வதற்கான பரிந்துரை[தொகு]

இன்றைய நாளில், இன்னமும் 352 கட்டுரைகள் கவனிக்கப்பட வேண்டியுள்ளன. பெரும்பாலான கட்டுரைகளின் மீது உரையாடல் நடத்தி, அவற்றை துப்புரவு அல்லது செம்மைப்படுத்துதல் செய்யவேண்டியது உள்ளது. இப்பணியை விரைந்து முடித்திட, 2 பரிந்துரைகளை முன்வைக்கின்றேன். பயனர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்டம் நோக்கி நகரலாம்.

  1. தொடர்பங்களிப்பாளர்கள் எளிதில் பயணிக்கும் வகையில் ஒரு நகரைத் தெரிவு செய்து, 10 பேர் ஒன்றுகூடி ஒரு நாள் செம்மைப்படுத்துதல் பணியைச் செய்யலாம். காலையில் பயனர்கள் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள அறைகள், அமர்ந்து பணியாற்ற ஒரு அறை, Wi-Fi வசதி இவற்றை ஒரு கல்வி நிலையம் / ஒரு நிறுவனம் தந்து உதவினால் குறைந்த செலவில் இந்நிகழ்வை நடத்த இயலும். (அல்லது)
  2. சிறப்பு மாதமாக கருதப்படும் சூலை மாதத்தில், சிறப்பு மாரத்தான் நிகழ்வு ஒன்றினை நடத்தலாம். 'கூகுள் மீட்' வாயிலாக உரையாடிக் கொள்ளலாம்.

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:43, 16 மே 2024 (UTC)[பதிலளி]

இந்த இரண்டிலுமே எனக்கு உடன்பாடு தான். மற்ற பயனர்களின் கருத்துகளுக்காகக் காத்திருப்போம். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:40, 16 மே 2024 (UTC)[பதிலளி]
மாரத்தான் நிகழ்வு நடத்தலாம். --சா. அருணாசலம் (உரையாடல்) 09:10, 19 மே 2024 (UTC)[பதிலளி]
மாரத்தான் நிகழ்வு நடத்தலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 06:23, 21 மே 2024 (UTC)[பதிலளி]

முன்மொழிவு[தொகு]

ஆலமரத்தடி அறிவிப்பில், ஆதரவு தெரிவித்த @சா அருணாசலம், Sridhar G, Arularasan. G, கி.மூர்த்தி, TNSE Mahalingam VNR, and Balu1967: ஆகியோருக்கு நன்றி. இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ள ஆதரவு, இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் இவற்றின் அடிப்படையில், முன்மொழிவு ஒன்றை விளக்குகிறேன்.

  1. ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்தப் பணிக்கான சிறப்பு மாதம் சூலை மாதம் ஆகும். எனவே சூலை 6 அன்று (சனிக்கிழமை) நேரடி தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றை சென்னை நகரில் நடத்தலாம். தமிழ்நாட்டில் வாழும் பயனர்கள் 10 பேர் ஒன்றுகூடி இப்பணியைச் செய்யும் வகையில் திட்டமிடலாம்.
  2. நேரடியாகக் கலந்துகொள்ள இயலாதவர்கள் இணையம் வழியே இணைந்து இந்தத் தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
  3. சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள AU-KBC RESEARCH CENTRE அலுவலகத்தில் தொடர்-தொகுப்பு நிகழ்வை நடத்த அவர்களிடம் அனுமதி கேட்கலாம்.
  4. தேவைப்படும் நிதி உதவியை சி.ஐ.எஸ் அமைப்பிடம் கோரலாம்.

இந்த முன்மொழிவின் மீது தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் தமது கருத்துக்கள் / பரிந்துரைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:26, 21 மே 2024 (UTC)[பதிலளி]

விருப்பம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:30, 21 மே 2024 (UTC)[பதிலளி]
விருப்பம். -- பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 10:15, 22 மே 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்: நீங்கள் விரும்பியபடி சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி வளாகத்தில் நடத்த அனுமதி வாங்கிவிட்டேன். நிதி உதவியை உறுதி செய்துவிட்டு மேற்கொண்டு திட்டமிடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 00:39, 23 மே 2024 (UTC)[பதிலளி]

@சா அருணாசலம், Sridhar G, Arularasan. G, கி.மூர்த்தி, TNSE Mahalingam VNR, Balu1967, சத்திரத்தான், and Neechalkaran: மேற்கொண்டு இங்கு உரையாடுவோம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:40, 23 மே 2024 (UTC)[பதிலளி]