விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகுள் கட்டுரைகள் மதிப்பீட்டுப் பணித் திட்டம்[தொகு]

ஆகத்து 01, 2010 முதல் ஆகத்து 15, 2101 வரை.

குறிப்புகள்[தொகு]

இது வரை 1000+ கட்டுரைகளை கூகுள் உருவாக்கியுள்ளது. காலம் கருதி, இவற்றில் இருந்து 160 கட்டுரைகளை முதலில் மதிப்பிடுவோம். இவற்றில் 80 கட்டுரைகள் திருத்தப்படாதவை. திருத்தம் முடிந்ததாக கூகுள் பயனர்கள் அறிவித்த கட்டுரைகளில் இருந்து எஞ்சிய 80 கட்டுரைகள் மதிப்பிடப்படும். மற்றபடி, மதிப்பிட எடுத்துக் கொள்ளும் கட்டுரைகள் எழுந்தமானமாக இருக்கும்.

மதிப்பீட்டுப் பணித் தன்னார்வலர்கள்[தொகு]

மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட விரும்புவோர் தங்கள் பெயர்களை இங்கு தரலாம். ஆளுக்கு 10 கட்டுரைகள் என்று 16 பேர் ஈடுபடலாம். தன்னார்வலர்கள் முன்வருவதைப் பொறுத்து, ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய கட்டுரைகள் எண்ணிக்கையை மாற்றிக் கொள்ளலாம்.

  1. இரவி
  2. மயூரேசன்
  3. சோடாபாட்டில்
  4. மயூரநாதன்

மதிப்பீட்டுப் பணி வழிமுறைகள்[தொகு]

கட்டுரைத் தெரிவு[தொகு]

  • திருத்தப் பணிகள் முடிந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் திருத்தங்கள் முடிந்ததாக கூகுள் பங்களிப்பாளர்கள் அறிவித்து வருகிறார்கள். இப்பக்கங்களை ஒரு பகுப்புக்குள் கொண்டு வந்து முதல் 80 கட்டுரைகளை மதிப்பீட்டுக்கு எடுக்க வேண்டும்.
  • திருத்தப்பட்ட கட்டுரைகளைத் தவிர்த்து, பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் பக்கத்தில் இருந்து முதல் 80 கட்டுரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
  • கட்டுரைப் போட்டி பரிசுத் தெரிவு போல் இக்கட்டுரைகளை ஒரு கூகுள் விரி தாள் ஆவணத்தில் இட்டு மதிப்பிடலாம். அல்லது, விக்கியிலேயே செய்வதானால் இதற்கான வழிமுறைகளை ஆய வேண்டும். (சுந்தர், உதவ இயலுமா?)

மதிப்பிடும் முறை[தொகு]

ஐந்து நட்சத்திர தர மதிப்பீடு வழங்கும் முறையைப் பின்பற்றி, ஒவ்வொரு கட்டுரையையும் மொத்தம் ஐந்து மதிப்பெண்களுக்கு மதிப்பிடலாம். ஐந்து மதிப்பெண்ணுக்கும் மொத்தம் நான்கு பெரும் அடிப்படைகளில் மதிப்பிடலாம் எனப் பரிந்துரைக்கிறேன். வேறு அடிப்படைகள், மதிப்பெண் அளவுகளில் மாற்றம் வேண்டுமானால் தெரிவியுங்கள்.

  1. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், நிறுத்தற்குறிப் பிழைகள் இல்லாமை - 2 மதிப்பெண்கள் (0,1,2: மோசம், பரவாயில்லை, சிறப்பு)
  2. இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் தடையின்றி வாசிக்கத் தூண்டும் எழுத்து நடை - 1 மதிப்பெண்கள் (0,1,2: மோசம், பரவாயில்லை, சிறப்பு)
  3. மூலக் கட்டுரையின் பொருள் மாறாமல் துல்லியமாக மொழிபெயர்த்தல் - 1 மதிப்பெண் (0, 0.5, 1: மோசம், பரவாயில்லை, சிறப்பு)
  4. கலைச்சொல், நல்ல தமிழ் நடைப் பயன்பாடு. 100% தூய தமிழ் தேவை இல்லை. இருக்கிற நல்ல தமிழ்ச் சொற்களையாவது பயன்படுத்த வேண்டும் - 1 மதிப்பெண் (0, 0.5, 1: மோசம், பரவாயில்லை, சிறப்பு)

விக்கியர் அல்லாத மதிப்பீட்டாளர்கள்[தொகு]

மதிப்பீட்டுப் பணியில் நம்மையும் அறியாமல் நேரக்கூடிய சாய்வைத் தவிர்க்க ஒரு சில வெளியாள் மதிப்பீட்டாளர்களை அழைக்கலாம் என்று நினைக்கிறேன். மொத்தம் 160 கட்டுரைகளை ஆளுக்குப் பத்தாக மதிப்பிட வேண்டும். ஆகவே 16 மதிப்பீட்டாளர்களில் 4-8 பேர் வரை வெளியாள் மதிப்பீட்டாளர்களாக இருக்கலாம். வலைப்பதிவர்கள், எழுத்தாளர்கள், தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள், மாணவர்கள், முனைவர்கள் ஆகியோர் இந்த மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடலாம்--ரவி 16:57, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

பின்வருவோர் மதிப்பீட்டுப் பணியில் உதவ முன்வந்துள்ளார்கள்:

  • சங்கர் கணேசு - பொறியியல் கல்லூரி மாணவர், வலைப்பதிவர்.
  • மணி. மணிவண்ணன் - பொறியாளர், தமிழ் ஆர்வலர்.
  • இராம. கி - ஓய்வு பெற்ற பொறியாளர், தமிழ் ஆர்வலர்.
  • முகுந்த் - பொறியாளர், எ-கலப்பை மென்பொருள் உருவாக்குனர்.
  • குணசீலன் - முனைவர், கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர்.
  • துரை. மணிகண்டன் - முனைவர், கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர்.
  • சாத்தான் - தொழில்முறை மொழிபெயர்ப்பாளர், வலைப்பதிவர்.
  • காசி ஆறுமுகம் - பொறியாளர், வலைப்பதிவர், தமிழ்மணம் வலைப்பதிவுத் திரட்டி உருவாக்குனர்.
  • வெங்கட்ரமணன் - வலைப்பதிவர், வாசகர்.

விக்கி மதிப்பீட்டாளர்கள்[தொகு]

போதுமான தன்னார்வலர்கள் முன்வராததால் பின்வரும் தமிழ் விக்கிப்பீடியரை மதிப்பீட்டுப் பணியில் பங்கு பெற வேண்ட இருக்கிறேன். அவர்களின் நேரம் பொறுத்தும், பிற ஆர்வலர்கள் முன்வருகையைப் பொறுத்தும் மதிப்பீட்டாளர் குழு மாறலாம்.

  1. மயூரநாதன் (ஏற்றுக்கொள்கிறேன்)
  2. செல்வா
  3. நற்கீரன்
  4. கனக. சிறீதரன்
  5. சுந்தர் (ஒரு சில கட்டுரைகளை மதிப்பிட்டு வருகிறேன்)
  6. மயூரேசன் (ஒப்புக் கொண்டுள்ளார்)
  7. இரவி (ஒப்புக் கொண்டுள்ளேன்)
  8. சோடா பாட்டில் (ஒப்புக் கொண்டுள்ளார்)
  9. மணியன் (ஏற்றுக் கொள்கிறேன்)
  10. பரிதிமதி
  11. கார்த்திக் பாலா (ஏற்றுக்கொள்கிறேன்)
  12. குறும்பன் (ஒப்புக் கொண்டுள்ளார்)
  13. கோபி
  14. சிவக்குமார்
  15. பவுல்

--ரவி 17:06, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

மதிப்பீட்டைப் பாதிக்குமா??[தொகு]

நடுக்குவாதம், மூளைக் கட்டி, முதுமை மறதி ஆகிய கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளில் இலகுவான புரிதலைத் தரக் கூடிய வகையில் சில தகவல்களை இணைத்திருக்கிறேன். இது தங்களது மதிப்பீட்டைப் பாதிக்குமா எனத் தெரியவில்லை. தயவு செய்து அந்தக் கட்டுரைகள் மதிப்பீட்டுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பின் இதனையும் கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன். மேலும் முதுமை மறதி என்ற தலைப்பு Dementia என்ற நோய்க்கு பொருத்தமானதாக இல்லாமையால், பேச்சு:முதுமை மறதியில் அந்த தலைப்பை மாற்றலாமா எனக் கேட்டிருக்கிறேன்.--கலை 13:25, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

மூளைக்கட்டி கட்டுரையை நீங்கள் திருத்துமுன்னர் மதிப்பிட்டு விட்டேன், கலை. உங்கள் திருத்தங்களை மொழிபெயர்ப்பாளருக்குக் காட்ட வேண்டும். -- சுந்தர் \பேச்சு 16:13, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

மதிப்பீட்டுப் பணி முடிவுகள்[தொகு]

கூகுள் கட்டுரைகள் மதிப்பிடும் பணியின் முதற்கட்டம் முடிவடைந்துள்ளது. பல பங்களிப்பாளர்களும் பிற வேலைகளில் மும்முரமாக இருந்ததால் குறித்த தேதிக்குள்ளும் முழுமையாகவும் மதிப்பீட்டுப் பணி முடியவில்லை. அதற்கு வருந்துகிறேன். முதற்கட்டமாக, திருத்தம் முடிந்த 70 கூகுள் கட்டுரைகளுக்கான மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இவற்றில் 33 கட்டுரைகள் (47% கட்டுரைகள்) வெளியாள் நடுவர்களால் மதிப்பிடப்பட்டுள்ளன. எனவே, விக்கியர்கள் தாங்களே அறியாமல் கொண்டிருக்கக்கூடிய சாய்வு மதிப்பீட்டு முடிவைப் பாதிப்பதைத் தவிர்க்க முயன்றுள்ளோம். முதலில் மொத்தம் 5 மதிப்பெண்களுக்கு நான்கு பெரும் அடிப்படைகளில் மதிப்பிடலாம் என்று எண்ணினோம். எனினும், இந்த ஒவ்வொரு அடிப்படைக்கும் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் ஆளுக்கு ஆள் மாறும் என்பதால், மொத்த மதிப்பெண்ணாக அல்லாமல், ஒவ்வொரு அடிப்படைக்கும் தனித்தனியே விழுக்காட்டு மதிப்பெண்களாகத் தந்துள்ளோம்.

முடிவுகள் சுருக்கம்:

  • எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, நிறுத்தற்குறிப் பிழை இன்மை - 58.69%
  • வாசிக்க இலகுவாக இருக்கும் தன்மை - 50%
  • பொருள் மாறாமல் மொழிபெயர்க்கும் துல்லியம் - 52.94%
  • உரிய கலைச்சொல் பயன்பாடு - 51.47%

இன்னும் சிறப்பாக மொழிபெயர்த்திருக்க முடியும் என்பதே பொதுவான கருத்தாக உணரப்படுகிறது. திருத்தப்படாத கூகுள் கட்டுரைகளின் தரம் இன்னும் குறைவாக இருப்பதாகவே வரும் முடிவுகள் உணர்த்துகின்றன.

இம்மதிப்பீட்டை ஒட்டி நாம் எடுக்கும் முடிவுகளை ஒட்டியே, இத்திட்டத்தின் அடுத்த கட்டம் தொடர்வதும் நிறுத்துவதும் உள்ளது. கால தாமதப்படுத்துவது மொழிபெயர்ப்பு நிறுவன ஊழியர்களுக்கும் பாதகமாக அமையும். எனவே, இது குறித்து விரைந்து உரையாடி முடிவெடுக்க வேண்டுகிறேன். மற்றவர்களின் கருத்தை அறிந்த பிறகு எனது கருத்தை முன்வைக்கிறேன். நன்றி--இரவி 07:41, 25 ஆகஸ்ட் 2010 (UTC)

நல்ல தரமான மொழிபெயர்ப்புகளை வழங்குபவர்களைத் தொடர்ந்து பங்களிக்க அனுமதிக்கலாம். இப்பணியில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள் அல்லது துறை வல்லுனர்களை ஈடுபடுத்தலாம். எளிய நடை விக்கியில் இருந்து சில கட்டுரைகளை மொழிபெயர்க்கும்படி கோரலாம். அதனால் மொழிபெயர்ப்பு எளிதாகும், ஆனாலும் நடையில் மாற்றம் வருமா தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 08:30, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
ஆங்கில வசனங்களை அப்படியே மொழி பெயர்க்க முயல்கின்றார்கள். நீளமாக வசனங்கள் அமைந்து எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிகின்றது. இதைப் பல கட்டுரைகளிலும் கண்டேன். --ஜெ.மயூரேசன் 15:37, 25 ஆகஸ்ட் 2010 (UTC)

கருத்துக்கு நன்றி சுந்தர், மயூரேசன். இத்திட்டத்தில் உள்ள பிரச்சினைகளும் மாற்று வழிமுறைகளும் நாம் ஏற்கனவே பல முறை உரையாடியவை தான். தற்போது உடனடி முடிவு எடுக்க வேண்டிய விசயங்கள்:

  • ஏற்கனவே திருத்தி முடிக்கப்பட்ட கட்டுரைகளும் சராசரியாக 50% அளவே நிறைவளிப்பதாக இருக்கின்றன. இக்கட்டுரைகள் மாதிரித் தெரிவுகளே என்பதால் திருத்தப்பட்ட நூற்றுக் கணக்கான கட்டுரைகளும் இதே நிலையிலேயே இருக்கலாம். மொழிபெயர்ப்பாளர்கள் தொழில்முறையில் இயங்குவதால் நிறைவு அளிக்கும் வரை திருத்திக் கொண்டே இருப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். எத்தனை முறை தான் திருத்துவது என்று நேரடியாகவே சில மொழிபெயர்ப்பார்கள் கேட்கிறார்கள். பெரும்பாலான கட்டுரைகளில் விக்கி சமூகம் ஈடுபாடு காட்டாததையும் காண முடிகிறது. எனவே, இக்கட்டுரைகளின் தரம் தொடர்ந்து மேம்படாமல் வாய்ப்பு உண்டு. குறிப்பாக, வாசிப்புத் தன்மை குறைவாக உள்ள கட்டுரைகளை முழுமையாக திருத்தி எழுதினால் ஒழிய அவற்றின் தரத்தைக் கூட்ட முடியாது. இந்த மொழிநடைப் பிரச்சினைகள் போக, கட்டுரையில் உள்ள பிற விக்கிப் பிரச்சினைகள், தகவல் சரி பார்ப்பு, இற்றைப்படுத்தல், ஆங்கில விக்கியில் இருந்து வரும் பிழைகள் என்று கருத்தில் கொண்டால் கட்டுரையின் தரம் நிறைவளிப்பதாக இல்லை. நானும் தொழில்முறையில் இயங்குபவன் என்ற முறையில், 50% நிறைவளிக்கும் சேவையை எந்த வாடிக்கையாளரும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். தமிழ் விக்கி ஒரு கலைக்களஞ்சியம் என்பதைக் கருத்தில் கொண்டு தரத்தில் சிறிதளவும் சமரசம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

கூகுள் கட்டுரைகளின் அளவு, எண்ணிக்கை சற்று மயக்கமூட்டுவதாக இருந்தாலும் தொலைநோக்கில் இப்படி தரம் குறைந்த கட்டுரைகள் பெருகுவது பாதகமான விளைவேயே தரும். இது போன்ற நான்கு தப்பும் தவறுமான கட்டுரைகளைப் பார்ப்பவர்கள் தமிழ் விக்கி முழுதுமே இப்படித் தான் என்று முடிவெடுத்து விலகிச் சென்றால் (அப்படி முடிவெடுப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மாந்த இயல்பு), விக்கி சமூகத் தன்னார்வலர்களின் உழைப்பும் வீணாகும். பள்ளி மாணவர்களிடம் விக்கியைக் கொண்டு செல்ல நினைக்கும் நிலையில் அதற்கு உகந்த கூடிய தரத்துடன் நமது தளத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் --இரவி 08:25, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

1) ஆங்கில தொடர் வாக்கியங்களை அப்படியே தமிழுக்கு கொண்டு வர முயல்வதால் தான் பெரும் பிரச்சனை. ஆங்கிலத்தில் உள்ள வாக்கிய எண்ணிக்கை அப்படியே தமிழிலும் வரும்படி எழுதுகிறார்கள். பல இடங்களில் அர்த்தமே தலைகீழாக மாறிவிடுகிறது.
2) பாப் கல்சர் (ஆங்கில சினிமா, தொலைக்காட்சித்தொடர்கள், பாடகர்கள்) கட்டுரைகளில் பல விஷயங்கள் மொழிபெயர்ப்பாளார்களுக்கு புரியவில்லை என்பதால் அபத்தமாக லிடரல் ட்ரான்ஸ்லேஷன் நடக்கிறது.
3) பிழையுள்ள கட்டுரைகளைத் திருத்துவதற்கு அயர்ச்சியாக உள்ளது. இதற்கு பதில் ஒரு கட்டுரையை புதிதாக உருவாக்குவது எளிது. ஒவ்வொரு வரியாகப் படித்து, ஆங்கில விக்கியுடன் க்ராஸ் செக் செய்து சரி செய்வது இரட்டிப்பு வேலையாக உள்ளது. கூகுள் கட்டுரைகள் நம் வேலைப்பளுவை அதிகப்படுத்தத் தான் செய்யும். “எத்தனை முறை திருத்துவது” என்று கேட்கும் தொழில் முறை மொழிபெயர்ப்பாளர்களால் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.
4) இரு பெரும் பிரச்சனைகள் ஒன்றோடு ஒன்று இணைகின்றன 1) கூகுள் டூல் கிட் சரியில்லை என்பது 2)மொழிபெயர்ப்பாளர்களது பிழைகள். இரண்டும் சேர்வதால் நாம் எவ்வளவு முட்டி மோதினாலும் தரமான கட்டுரைகளை உருவாக்க முடியாது
என்ன செய்யவேண்டும்?
1) இப்பொழுதுள்ள வெர்ஷனில் குகிள் டூல் கிட்டால் படிக்கக் கூடிய கட்டுரைகளை தர முடியாது. அதனால் ஏகப்பட்ட உழைப்பும் நேரமும் வீணாகிறது. கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் தமிழ் விக்கிக்கு ஒரு நெட் நெகடிவ். திட்டத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டும். :ஏற்கனவே பதிவேற்றிய +திருத்திய கட்டுரைகள் இருக்கட்டும். தரத்தைப் பற்றிய எச்சரிக்கை வார்ப்புருவை மேலே இட்டு விடலாம். திருத்தாத கட்டுரைகளை குறுங்கட்டுரைகளாக்க்கி விடவேண்டும்.
டூல் கிட் செம்மைபடுத்தப்பட்டு பீட்டா ரிலீஸ் ஆகும் வரை, த.விக்கியில் சோதனை ஓட்டம் செய்யக் கூடாது. let them get their translation memory somewhere else.

--சோடாபாட்டில் 09:43, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

மொழிபெயர்ப்பாளர்களுக்கு மொழிபெயர்க்கும் விஷயங்கள் பற்றி சரிவர புரியவில்லை என்பதற்கு இப்போது லேட்டஸ்டாக “திருத்தம் முடிந்ததாக” அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டுரையைப் பாருங்கள். இப்படி செய்து விட்டு “எத்தனை முறை” திருத்துவது என்று கேட்பவர்களை என்ன செய்ய?--சோடாபாட்டில் 17:05, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

எனது கருத்து - மகேசுவரி[தொகு]

தரத்தில் பிரச்சனை என்றால் யாராலும் ஏற்றுக்கொள்வது இயலாததே. நாமும் நம்மாலான சிறிய மாற்றங்களைச் செய்யலாம். மதிப்பிடப்பட்டக் கட்டுரைகளில் உள்ள பிழைகளை மதிப்பிடும் போதே மாற்றியிருந்தால் அந்த கட்டுரைகளிலிலிருந்து விக்கிப்பயனர்களின் நடையை அறிந்திருக்கலாம் என்பது எனது கருத்து. நாமும் அதை மொழிப்பெயர்ப்பாளர்கள் பின்பற்றும்படி செய்யலாம். இந்த கட்டுரைகளை எழுதியது தமிழர்களே என்று நினைக்கும் போது மன வருத்தத்தை அளிக்கத்தான் செய்கிறது.

இந்தத் திட்டத்தில் அறிந்த சில பிரச்சனைகளும் எனது கருத்தும்

  • கூகுள் மொழிப்பெயர்ப்புக் கருவிகளால் வந்த சிவப்பு இணைப்பு பிரச்சனை: இது ஒரு பிரச்சனையே இல்லை. சிவப்பு இணைப்பு என்பது பயனருக்கு அந்தக் கட்டுரை விக்கியில் இல்லை உருவாக்குங்கள் என்று சொல்லும் ஒரு வழியாகும். இதை யாராலும் மறுக்க முடியாது. சுந்தர் மற்றும் ரவி கூறியவாறு அப்படி ஒரு முழு வார்த்தை இல்லை எனும்போது( எ.கா. இலக்கண மாற்றத்தின் காரணமாக தமிழ் -> தமிழில் என மாறும்போது) தமிழில் இது பிரச்சனையை அளிக்கவே செய்கிறது; இது முதலில் எங்களுக்கு விக்கியிலுள்ள | பற்றித் தெரியாததால் நேர்ந்தது. பிறகு சுந்தர் எடுத்துக்கொண்ட தனிப்பட்ட முயற்சியின் காரணமாக அதை ஏற்கனவே உள்ள கட்டுரைகளிலிருந்து அகற்ற முடிந்தது. சில மொழிபெயர்ப்பாளர்களும் | கொண்டு கைமுறையாகத் திருத்தி இந்த பிரச்சனையில் உதவினார்கள் என்பதை மறுக்கஇயலாது. கருவியிலுள்ள இந்தப் பிரச்சனையானது இப்பொழுது சரிசெய்யப்பட்டுவிட்டதால் இனி இப்பிரச்சனை எழ வாய்ப்பில்லை.
  • வார்ப்புரு பிரச்சனையும் வார்ப்புரு உருவாக்கியதன் காரணமும்: வார்ப்புருவையும் சிவப்பு இணைப்பையும் சரிசெய்தால் மொழிப்பெயர்ப்பாளர்கள் வேறு பிரச்சனையைப் பற்றி நினையாமல் அதில் உள்ள இலக்கண மற்றும் கருத்து வெளிப்பாட்டிலுள்ள பிரச்சனையை சரிசெய்வதில் தங்களது நேரத்தை செலவிடலாம் என்பதற்காக மட்டுமே. விக்கியை குப்பையாக்குவதற்காக அல்ல. அந்த வார்ப்புருக்களின் பெயர்களைத் தமிழில் எழுதவேண்டும் என்று அறியாதிருந்தது ஒரு பிழையே. அதன் நோக்கம் விக்கப்பயனர்கள் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட ஆர்வத்தினால் அந்தத் தகவலையும் தமிழில் தரலாம் என்பதே.


  • கட்டுரைத் தேர்வு: தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைப் பற்றிய பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. சுந்தரிடம் ஏற்கனவே விளக்கியது போல இவை கூகுள் தேடலில் இந்தியாவிலிருந்து வந்தத் தேடல் வினவல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்திய பயனர்கள் பார்க்க விரும்பும் தகவல்களை இணையத்தில் முடிந்த மட்டும் இந்திய மொழிகளில் தருவதே இதன் நோக்கம். இனி ஏற்கனவே அறிவித்த படி எல்லா கட்டுரைகளையும் கூகுள் விக்கியிடம் முன்வைக்கும். அதில், கட்டுரையின் ஆங்கிலத் தலைப்பு, வார்த்தைகளின் எண்ணிக்கை, ஏற்கனவே இது தமிழ் விக்கியில் உள்ளதா போன்ற தகவல்களைக் கொண்டிருக்கும்.
  • தமிழ் விக்கி மதிப்பீட்டாளர்கள் கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கலாம் மேலும் அதற்கான தலைப்பையும் பரிந்துரைக்கலாம். விக்கிப்பயனரும் தங்களுக்கு வேண்டிய கட்டுரைகளை முன்வைக்கலாம். இதன் மூலம் தேவையற்றதாக விக்கிப் பயனர் நினைக்கும் கட்டுரை தமிழில் வர வாய்ப்பில்லை.
  • முதலில் கட்டுரைகள் மாதம் ஒருமுறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால், கட்டுரையில் சில வேறுபாட்டைக் காணமுடிந்தது. வாரம் ஒருமுறை மொழிபெயர்ப்பாளரின் தகுதியை அறிந்து அதற்கேற்ப அவர்களுக்கு தருவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனை எழ வாய்ப்பில்லை. மேலும் மொழிபெயர்ப்பாளர்களின் தகவல் மற்றும் மொழிபெயர்ப்பு செய்தவுடன் அதற்கான இணைப்பு வழங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் விக்கிப்பயனர் எல்லா தகவல்களையும் ஒரே தாளில் காணலாம். மேலும் இந்த மொழிபெயர்ப்பாளர் சரியில்லை என்று அவர்களின் ஒரு சில கட்டுரைகளிலிருந்து சொல்ல ஏதுவாக இருக்கும். அதன் படி நாங்களும் அவர்களை மாற்ற ஏற்பாடு செய்யலாம்.
  • ஏற்கனவே ரவியிடம் தொலைப்பேசியில் தெரிவித்தது போல இப்போது மதிப்பிட்ட கட்டுரையிலிருந்து சில நல்ல மொழிபெயர்ப்பாளர்களைத் தெரிவித்தால் அவர்களை மதிப்பீட்டாளர்களாக்கி கட்டுரையின் தரத்தை உறுதிசெய்யலாம்.
  • வாரம் ஒரு முறை என்பதால் எனக்கும் அதிக நேரத்தை விக்கியில் செலவிடமுடியும். என்னாலான சில திருத்தங்களையும் நான் செய்து வருகிறேன். புதிய கட்டுரைகளைத் தொடங்கினாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பழைய கட்டுரைகளைத் தொடர்ந்து திருத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
  • எல்லோரும் எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை. விக்கிப்பயனருமே பலவற்றில் பிற விக்கிப்பயனர்களின் கருத்தை ஏற்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பலரின் கருத்திலிருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது நன்றே. இது முற்றிலும் எனது கருத்தே! அன்னப்பறவையைப் போல எனது கருத்தில் உள்ள நல்லதை எடுத்து தவறு ஏதும் இருப்பின் அதை விடுக்குமாறு வேண்டுகிறேன்.
  • நான் ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் பயின்றவள் என்பதால் கணினியில் பட்டம் பெற்ற போதிலும் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இப்பணியில் உள்ளேன் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். சில கூகிள் பொறியாளர்களும் இக்கட்டுரைகளைப் பார்வையிட ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

- நன்றி --Maheswari 05:46, 27 ஆகஸ்ட் 2010 (UTC)


விளக்கங்களுக்கு நன்றி, மகேசுவரி. கூகுள் திட்டத்தின் தொடக்கத்தில் இருந்து பல விதங்களில் தொடர்ந்து முன்னேற்றங்கள் கண்டுள்ளோம் என்பது உண்மையே. உங்களைப் போன்று தனிப்பட்ட ஆர்வத்தில் ஈடுபடவர்களுக்கு இம்முன்னேற்றத்தில் பெரும் பங்கு உண்டு. தாங்கள் கூறியுள்ள வழிமுறைகள் யாவும் திட்டத்தின் அடுத்த கட்டத்தில் உருவாகும் புதிய கட்டுரைகளை இன்னும் மேம்படச் செய்வதற்கான வழிமுறைகள்; பெரும்பாலும் மென்பொருள், அணுகுமுறை, செயல்பாட்டு அடிப்படை விசயங்கள். ஆனால், இம்மதிப்பீட்டுப் பணியில் மொழிபெயர்ப்புத் தரத்தை மட்டுமே அளந்துள்ளோம். தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களால் 50% தரமே தர முடியும் என்பது நிறைவளிக்கவில்லை. இருக்கிற கட்டுரைகளிலேயே ஒரு நிறைவான தரத்தை எட்டினாலே, அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான நம்பிக்கை பிறக்கும். கூகுள் கட்டுரைகளில் உள்ள பிழைகளைத் திருத்தினால், மொழிபெயர்ப்புப் பணியின் உண்மையான தரத்தை மதிப்பிட முடியாது என்பதாலேயே திருத்தங்களைத் தவிர்த்து வந்தேன். தவிர, சில கட்டுரைகளை அடியோடு மாற்றி எழுத வேண்டி இருப்பது அயர்ச்சி அளிக்கிறது. விக்கிப் பயனர்களின் நடையை அறிய அவர்கள் எழுதும் பிற கட்டுரைகள், விக்கிப்பீடியா சிறப்புக் கட்டுரைகளைக் காணலாம். --இரவி 06:18, 27 ஆகஸ்ட் 2010 (UTC)
நான் மதிப்பிட்ட அளவில் கூகுள் மொழிபெயர்ப்பு பல குறைகளைக் கொண்டுள்ளதாக உள்ளது. மகேசுவரி கூற்றுக்கள் இன்னும் மேம்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பினை வளர்த்தாலும் இன்றையநிலையில் சோடாபாட்டில் எடுத்துக்காட்டியபடி கூகுள் டூல்கிட்டின் குறைகள்,மொழிபெயர்ப்பாளரின் துறைசார் கல்வியின்மை,ஆங்கிலத்தைச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கும் கட்டாயம் போன்ற காரணங்களால் தரம் குறைந்த கட்டுரைகளை தமிழ் விக்கியில் நிறைப்பதை ஏற்கவியலாது.இவ்வளவுக்கும் பிறகும் 50% தரம் எட்டியுள்ளது ஆர்வமிக்க மொழிபெயர்ப்பாளர்களின் முயற்சியால் என்பதை உணர்ந்து பாராட்ட விழைந்தாலும் அதுவே தரம் குறைந்த கட்டுரைகளை பதிவேற்ற முகாந்தரமாகாது.மேலும் பல கட்டுரைகள் இன்னும் திருத்தப்படாது உள்ளன.ஆகவே தற்போது இந்தத் திட்டத்தை நிறுத்துவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.--மணியன் 18:38, 27 ஆகஸ்ட் 2010 (UTC)


ஒரு கட்டுரையை, துறை சார் கட்டுரையை மொழி பெயர்ப்பது என்பது மிகச் சிரமமான வேலை. இது வரைக்கு தமிழ் விக்கிப்பீடியப் பயனர்கள் யாரும் முழுமையான மொழிபெயர்ப்பில் ஈடுபட்டதில்லை. இதனால் மொழிபெயர்ப்புத் தரத்தை ஒப்பிடுவதற்கான அடுக்கோடு (baseline/benchmarks) இல்லை. பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகளில், ஆங்கில விக்கிப்பீடியாவில் சிறப்புக் கட்டுரைகளாக தெரியப்பட்டவையை மொழிபெயர்த்திருந்தால் எமக்குக் கூடிய பயன் கிடைத்திருக்கும். அவர்கள் தமது செயலாக்கத்தை மேம்படுத்த நாம் போதிய பின்னூட்டல்களை வழங்கு வருகிறோம் என்றே நினைக்கிறேன். எனினும் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. --Natkeeran 03:27, 28 ஆகஸ்ட் 2010 (UTC)
நற்கீரன், துறைசார் கூடத் அவசியமில்லை. ஆனால் கொஞ்சமாவது எழுதும் துறை பற்றி பரிச்சயமிருக்க வேண்டுமல்லவா? டின்டோ பிராஸ் என்ற கட்டுரையைப் பாருங்கள். இது ஒரு போர்னோ பட இயக்குனர் பற்றியானது. இதைப் பற்றி எழுதுவோர் கொஞ்சமாவது ஆங்கிலப்படங்களைப் பற்றி அறிந்திருந்தால் பிரச்சனை கிடையாது. டூல்கிட் ஆங்கில தொடரின் வரிசையில் தழிழ் சொற்களை தருகிறது. அப்போது எப்படி அர்த்தம் மாறுகிறது என்பதை அவர்களால் புரிந்து திருத்த முடிய வேண்டும். மேற் சொன்ன கட்டுரையில் ஆங்கில விக்கியில் ஒரு படம் ”அமேரிக்காவில் மிக அதிக வசூல் செய்த இத்தாலியப் படம்” என்று உள்ளது. ஆனால் கூகுள் மொழிபெயர்ப்போ “அமெரிக்காவில் பெரும்பான்மையான வரவேற்பைக் கொண்டிராத” என்று உள்ளது. “ post-production" என்பதை "தயாரிப்புகளுக்கு முந்தைய பணிகள்” என்று மாற்றியுள்ளார்கள். பேச்சுப் பக்கத்தில் மேலும் பல எ.க களைக் கூறியுள்ளேன். இதிலிருந்து எனக்கு தெரிவது இது:
1)டூல்கிட் மூலத் தொடரில் உள்ள ஆங்கில வார்த்தைகளை அதே வரிசையில் தமிழில் மாற்றுகிறது. அதை மாற்றி தமிழ் வாக்கியமாக்கும் வேலை மொழி பெயர்ப்பாளருடையது. Giovanni Brass.. better known as Tinto Brass என்ற மூலம் ஜியோவன்னி பிராஸ்... என்று அனைவராலும் நன்கு அறியப்படும் டின்டோ பிராஸ் என்று தலைகீழாக மொழிபெயர்ப்பாகியுள்ளது. டூல்கிட் பண்ணிய வேலை இது - மொழிபெயர்ப்பாளார் இதை மறுமுறை படித்து பார்த்தால் தான் டூல்கிட் செய்த தவறை திருத்த முடியும்.
2) வாக்கியங்களை பிரித்து சிறு வாக்கியங்களை அமைப்பதும் அவர் வேலை தான். மொழிபெயர்ப்பாளர் மூலத்தை ஓரளவு படித்து விஷயத்தை உள்வாங்கி கூகுள் மொழிபெயர்ப்பை மாற்ற வேண்டும். இங்கு தான் துறைசார் அறிவின் தேவை ஏற்படுகிறது. கூகுள் டூல்கிட் செய்யும் தவறுகளை இனங்காண வேண்டுமல்லவா?. "highest grossing film", "pre production", recut", "cameo" போன்ற பதங்கள் மொழிபெயர்ப்பாளருக்கு பரிச்சயமானவையாக இருந்திருந்தால் மேற்சொன்ன கட்டுரையில் தகவல் பிழைகள் வந்திரா.
3) இவ்வாறு கூகுள் மொழிபெயர்ப்பானது “தகவல் பிழைகளை” புதிதாக உருவாக்குகிறது. புதிதாக கூகுள் கட்டுரையைப் படிப்பவர் ஆங்கில மூலத்தைப் படிக்காமல் இப்படி பிழைகள் உள்ளன என்பதை உணரமுடியாது. நாமும் க்ராஸ் செக் செய்தாலொழிய இது தெரியவர வாய்ப்பில்லை. பொதுவாக விக்கியின் மீது வைக்கப்படும் மிகக் கடுமையான குற்றச்சாட்டு - பிழைகளும் நம்பகமின்மையும். தகவல் பிழைகளுள்ள பெரிய கட்டுரைகளை விட பிழையில்லாத குறுங்கட்டுரைகள் எவ்வளவோ மேல். கூகுளால் தகவல் பிழைகள் உண்டாகுகின்றன எனத் தெரிந்தும் ஏன் நாம் மீண்டும் அதை அனுமதிக்கிறோம்? (நான் எழுத்துப்பிழைகளைப் பற்றியோ formatting பிழைகளைப் பற்றியோ கவலைப்படவில்லை, அவை இதனளவுக்கு பெரிய பிரச்சனையல்ல)
4) டூல்கிட் இன்னும் செம்மைப்பட வேண்டும். அதற்குமுன் அதை general release போல த.வியில் பயன்படுத்தக் கூடாது. அல்ல டூல்கிட்டின் பிழைகளை திருத்தும் அளவுக்கு மொழிபெயர்ப்பாளர் கெட்டிக்காரராக இருக்க வேண்டும். இரண்டுமே இல்லாத போது ஒரு defective product தான் மிஞ்சுகிறது. அடிப்படைப் பிழைகளை சரி செய்யாமல் இத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்தால் என்ன ஆகும்? - நூறு கட்டுரைகளைத் திருத்தவே திணறும் நாம், ஆயிரம் கட்டுரைகளைத் திருத்தவே மாட்டோம். இப்படியே பத்தாயிரம் வந்தால் என்னாகும்? அதில் உள்ள தகவல் பிழைகள் அப்படியே தங்கிவிடும். harsh feedback இல்லாத காரணத்தால், டூல்கிட்டிலும் முன்னேற்றம் இருக்காது.
5) நாம் வேண்டாமென்று சொன்னால் கூகுள் தமிழ் டூல்கிட் உருவாவது ஒன்று நிற்கப் போவதில்லை. சில வருடங்களில் கூகுள் ட்ரான்ஸ்லேட்டில் தமிழ் வரத்தான் போகிறது (வணிக் நோக்கு, கூகுளின் தொலை நோக்கு திட்டம் ஆகியவற்றால்). அப்படி பீட்டா/ஜெனரல் ரிலீஸ் ஆன மென்பொருளை வேண்டுமானால் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். டெஸ்டிங் ஸ்டேஜில், போதிய அளவு translation memory இல்லாத ஒரு ப்ராடக்டை நெரே த.விக்கியில் இறக்கியுள்ளார்கள். இது நமக்கும் நல்லதல்ல - அவர்களுக்கும் நல்லதல்ல--சோடாபாட்டில் 04:25, 28 ஆகஸ்ட் 2010 (UTC)


சோடாபோட்டில், உங்கள் கருத்துக்களுடன் பெரிய மாறுபாடு இல்லை. "ஜியோவன்னி பிராஸ் (1996 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி பிறந்தார்), என்று அனைவராலும் நன்கு அறியப்படும் டின்டோ பிராஸ் ஒரு இத்தாலிய திரைப்பட இயக்குநர்." என்று மொழி பெயர்த்தது பிழையா? --Natkeeran 04:37, 28 ஆகஸ்ட் 2010 (UTC)
ஆம் நற்கீரன். ”ஜியோவன்னி பிராஸ்” என்பது இயற்பெயர். ”டின்டோ பிராஸ்” என்பது தொழிற்பெயர். இங்கே மாற்றியலலவா வந்துள்ளது. “X is better known as Y" க்கு பதிலாக “Y is better known as X" என்றாகியுள்ளதே (ஆங்கில சொல்வரிசையை அப்படியே மொழி பெயர்த்ததால்)--சோடாபாட்டில் 06:16, 28 ஆகஸ்ட் 2010 (UTC)


நல்ல அவதானிப்பு. ஒப்பீட்டளவில் அந்தக் கட்டுரை நன்றாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. --Natkeeran 17:16, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

எனது நிலைப்பாடு - கார்த்திக்[தொகு]

தற்போது சுமார் ஒரு வருட காலமாக நாம் இந்த கூகுள் கட்டுரைகளுடன் போராடி வருகிறோம். புள்ளி விவரங்களை பார்த்தால் அனைத்து தர அளவீட்டு அடிப்படையிலும் சுமார் 50 சதவீத கட்டுரைகளே மொழி பெயர்ப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக ரவி குறிப்பிட்டுள்ளார். இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம், இத்தர அளவீடுகளை இணைத்துப் பார்த்தல், சரியாக மொழிபெயர்ப்படாத கட்டுரைகளில் இலக்கண பிழைகளும், சரியான கலைசொற்களும் இல்லாமல் இருத்தல், வாசிக்கத் தூண்டும் எழுத்து நடை இல்லாமை என பல சிக்கல்கள் இருக்கலாம்! இப்படி சீர்தூக்கி பார்த்தால் இதில் ஒரு கட்டுரைகள் கூட தேராது என்பது உண்மை! மேலும் மொழிபெயர்பாளர்கள் இயற்றியுள்ள கட்டுரைகளில் ஒரு குறைந்த அளவிலான கட்டுரையே இங்கு திருத்தப்பட்டு இருக்கிறது அதிலும் பல சிக்கல்கள். இக்கட்டுரைகளினால் த.விக்கு எவ்வித பயனும் இல்லை மற்றும் இதை யாரும் படிக்க மாட்டார்கள் (படிக்கவே முடியாது!) என்பது என்னுடைய கருத்து. வெறும் எண்ணிக்கைகளுக்கு வேண்டுமெனில் இவை உதவலாம். மேலும் இக்கட்டுரைகளை திருத்த விக்கி பயனர் யாரும் ஆர்வம் காட்டவில்லை! என்னுடைய சொந்த அனுபவத்தில் சுந்தரவன காடுகள் கட்டுரையை உரை திருத்த முயன்று தோற்றேன்! மொழிபெயர்பாளர்கள் என்ன எழுதியுள்ளார் என முதலில் புரிந்துகொள்ள வேண்டும், பின் எழும் பல நூறு ஐயங்களை களைய ஆங்கில கட்டுரையை படிக்கவேண்டும். அதன் பின் தமிழ் காட்டுரையை ஒவ்வொரு வரியாக மாற்ற வேண்டும். ஒரு கட்டுரையை திருத்தும் நேரத்தில் இரண்டு மூன்று புதிய கட்டுரைகளை எழுதிவிடலாம்.

நாம் தமிழிற்கு நம்மால் முடிந்து பங்களிப்பாகவும் மற்றும் நம்மிள் அனைவருக்கு தமிழில் எழுத படிக்க விருப்பம் இருப்பதாலேயே நமக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்களில் தவிக்கு பங்களிக்கிறோம். தவி இருப்பதும் தமிழில் கட்டுரைகள் இயற்றி மற்றவர்களை சொன்றடைய மட்டுமேயின்றி மொழி பெயர்ப்பாளர்களுக்கு பணி கொடுக்க அன்று! நாம் மொழி பெயர்ப்பு கட்டுரைகளுக்கு தர அளவை கொஞ்சம் கொஞ்சமாக சற்று உயர்த்தினால், இனிமேல் கட்டுரைகளே எழுத முடியாது என்ற நிலைக்கு மொழி பெயர்ப்பாளர்கள் வந்தால், ஏற்கனவே இயற்றப்பட்டுள்ள கட்டுரைகளை யார் சரி செய்வது? கூகுளா? மற்றும் இக்கட்டுரைகளின் தரமேம்பாட்டிற்காக பலரும் தங்களின் நேரத்தை செலவிட்டுள்ளார்களே (குறிப்பாக ரவி இதில் பல மணி நேரங்களை செலவிட்டுள்ளார்), இவர்களின் இந்நேரத்திற்கான பலன் என்ன? மொழி பெயர்ப்பாளர்களின் வாழ்வியல் சிக்கலை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அதற்காக தவி தரம் குறைவதை பார்த்துகொண்டு இருக்க இயலாது.

தற்போது ஏற்பட்டுள்ள நம் அனுபவ அடிப்படையில் இம்மொழி பெயர்ப்பு முறை நாம் நினைக்கு தரத்தை தற்போது அளிக்க இயலாது என்னது நன்கு புலனாகியுள்ளது. அதனால் உடனே இம்மொழி பெயர்ப்பை நிறுத்த வேண்டும் என்பது என் நிலை! வெறும் ஆயிரம் படிக்க இயலா கட்டுரைகளுடன் இருக்கட்டும், அவை பத்தாயிரம் ஆக வேண்டாம்.--கார்த்திக் 05:05, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

கருத்து - மயூரநாதன்[தொகு]

மகேஸ்வரியின் நீண்ட விளக்கம் பார்த்தேன். இவ்விடயத்தில் தனிப்பட்ட கவனம் எடுத்து தமிழ் விக்கியின் நன்மைக்காகவும் உழைக்கும் அவருக்கு முதலில் எனது நன்றிகள். சிவப்பு இணைப்புக்கள், வார்ப்புருப் பிரச்சினை என்பனவெல்லாம் முக்கியமாக தொழில்நுட்பப் பிரச்சினைகள் இவற்றைச் சரி செய்து கொள்வது இலகு. இப்போது ஓரளவுக்குச் சரிசெய்யப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் கட்டுரைத் தேர்வு போன்ற விடயங்கள் அவ்வாறான பிரச்சினை அல்ல. இது தமிழில் அறிவுத் தேவை குறித்த கூகிளின் புரிந்துகொள்ளும் தன்மை தொடர்பானது. இந்தியாவில் இருந்து வரும் தேடல் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே தலைப்புக்கள் தெரிவு செய்யப்படுவது ஒரு பிழையான முறை. இந்தியாவில் ஆங்கிலத்தில் தேடுவனவெல்லாம் தமிழ் மக்களின் தேவைகளுக்குப் பொருந்துவன என்று சொல்ல முடியாது. அத்துடன் விக்கிப்பீடியா ஒரு பொழுதுபோக்குவதற்கான சாதனமோ அல்லது வணிக நோக்கத்துக்காக மக்களைக் கவரும் நோக்கில் கட்டுரைகளை வழங்கும் இடமோ அல்ல. இது தமிழ் மக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான தகவல்களைக் கொடுக்கவேண்டிய ஒன்று. எனவே தமிழருக்கு என்னென்ன தலைப்புக்களில் கட்டுரைகள் தேவை என்பதை ஆலோசித்துத்தான் தலைப்புக்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து ரவியும், சுந்தரும் கூகிளிடம் தெரிவித்திருக்கிறார்கள். நானும் மைக்கேல், ஜெனிபர் ஆகியோரை விக்கிமேனியா மாநாட்டில் சந்தித்தபோது விளக்கிக் கூறினேன். அவர்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் தோன்றியது. கட்டுரைகள் நமக்குப் பழக்கமான தலைப்பில் இருந்தால் அவற்றைத் திருத்துவதற்கும் ஆர்வம் ஏற்படும். சம்பந்தமில்லாத தலைப்புக்களில் கட்டுரைகள் இருந்தால் அதைத் திருத்துவதற்கு யார் அக்கறைப்படப் போகிறார்கள். எல்லா விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் என ஒரு பட்டியல் விக்கியில் உள்ளது. அதில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டுரைகள் தமிழில் இல்லை. கூகிள் அவற்றை ஏன் மொழிபெயர்க்கக்கூடாது?

கூகிள் மொழிபெயர்ப்பியில் இப்போது முழுப் பத்தியையுமே ஒன்றாகப் பார்க்கும் வசதி உள்ளது எனவே சொல்லுச் சொல்லாக மொழிபெயர்க்க வேண்டும் என்ற பிரச்சினை இல்லை என்று மைக்கேல் கூறினார். எனவே அண்மையில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளில் இது தொடர்பிலான பிழைகள் இருந்தால் அது மொழிபெயர்ப்பாளர்களையே சாரும்.

பயனர் சோடாபாட்டில் எழுதியிருப்பதுபோல் தகவல் பிழைகள் பெருமளவு இருக்கின்றன. இவை மொழிபெயர்ப்பியின் குறைபாடுகளுக்கும் அப்பாற்பட்டு மொழிபெயர்ப்பாளர்கள் விடயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால் ஏற்படும் பிழைகள் என்றுதான் கூறவேண்டும். விடயத்தை விளங்கிக்கொண்டு அதற்கேற்ப சரியான சொற்களைத்தெரிந்து பயன்படுத்தாமை போன்ற குறைகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

திட்டத்தை முற்றாக நிறுத்தச்சொல்லாமல், முறையான மொழிபெயர்ப்புக்களைத் தருவதோடு நல்லமுறையில் ஒத்துழைக்கும் மொழிபெயர்ப்பாளர்களை மட்டும் வைத்துத் திட்டத்தைத் தொடருமாறு கேட்கலாம். நாம் விதித்த காலக்கெடுவுக்குள் கட்டுரைகளைத் திருத்த ஆர்வம் காட்டாத மொழிபெயர்ப்பாளர்களை நீக்கிவிடுமாறும் கோரமுடியும்.

கூகிள் நிறுவனத்தினர் நமது கோரிக்கைகளுக்கு இணங்கி, நமக்குத் தேவையான தலைப்புக்களைத் தெரிவு செய்வதுடன், நல்ல மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழிபெயர்ப்பும் செய்ய உடன்பட்டால் திட்டத்தைத் தொடரலாம். அப்படியில்லாமல் தொடர அனுமதித்தால் திருத்தவே முடியாத அளவுக்கு நிலைமை போய்விடும். அவ்வாறான நிலைமையில் திட்டத்தை நிறுத்தச்சொல்வது தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. --மயூரநாதன் 07:55, 28 ஆகஸ்ட் 2010 (UTC)


எனது நிலைப்பாடு-அராபத்[தொகு]

  • கூகுள் மொழிபெயர்ப்பு திட்டம் தனது குறைகளை திருத்திக்கொள்ள நிறைய அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் அதன் தரத்தில் சொல்லிக்கொள்ளும் அளவில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே எனது கருத்து. மகேசுவரி போன்ற ஆர்வம் காட்டும் சில மொழிபெயர்பாளர்களுக்காக மட்டுமே இந்த திட்டத்தை தொடர முடியாது.
  • நற்கீரன், தவகல் பிழை பற்றி விவாதித்திருந்தீர்கள். இங்கே பாருங்கள் 'The word girl first appeared during the Middle Ages between 1250 and 1300 CE and came from the Anglo-Saxon words gerle' என்பதை 'இளம் பெண் அல்லது சிறுமி என்ற வார்த்தை கெர்லே என்ற ஆங்கிலோ-சாக்சன் வார்த்தையிலிருந்து வந்தது' என்பது போல் மொழிபெயர்த்திருக்கின்றார்கள். தமிழ் பதம் சிறுமிக்கும் ஆங்கிலோ-சாக்சன் கெர்லேக்கும் என்ன சம்பந்தம்?
  • இந்த திட்டத்திற்கு மற்றவர்கள் ஆதரவளிக்கும் முன் தமிழ் விக்கிப்பீடியா அன்மையில் 24000 கட்டுரைகளை தாண்டியதை நினைவில் கொள்ளவும். வளர்ந்து வரும் தமிழ் விக்கியில் இது போன்ற தரமற்ற கட்டுரைகள் (வெறும் எண்ணிக்கைக்காக மட்டும்) இருப்பது தேவைதானா?
  • கூகுள் கட்டுரைகளை போலவே அதைப் பற்றிய விவாதங்களும் அயர்ச்சியை தருகின்றன. எத்தனை முறைதான் நாம் தவறுகளை சுட்டிக்காட்டுவது, அதை திருத்துவதர்க்கு கால அவகாசம் கொடுப்பது? இதற்கு கொடுக்கும் உழைப்பை வேறு நல்ல திட்டங்களுக்கு கொடுக்கலாம். இதில் எத்தனை முறைதான் திருத்துவது என மொழிபெயர்ப்பாளர்கள் கேட்பது நல்ல நகைச்சுவை!
  • எனவே இந்த திட்டத்தை முழுவதுமாக நிறுத்துவதே சரி என்பதே எனது நிலைப்பாடு. இல்லை குறைந்தபட்சம் அவர்கள் இதுவரை எழுதிய அனைத்து கட்டுரைகளையுமே திருத்திவிட்டு வரட்டும். பின்பு திட்டத்தை தொடருவது பற்றி முடிவு செய்யலாம்.--அராபத்* عرفات 09:57, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

குறும்பன் கருத்து[தொகு]

மிகப்பெரும்பாலான கூகுள் மொழிபெயர்ப்பு கட்டுரைகளை படிக்கும் போது அயற்சி தான் ஏற்படுகிறது. மேலும் படிக்கவே தோன்ற மாட்டிக்குது. சோடாபாட்டில் சொன்ன மாதிரி தற்போதுள்ள கூகுள் தமிழ் டூல் கிட்டால் பயன் இல்லை. தவி-யை ஏன் சோதனை களமாக பயன்படுத்த வேண்டும்? இது வரை எழுதியுள்ளதை அவர்கள் திருத்த வேண்டும் அது வரை புதிய கட்டுரைகள் வேண்டாம். --குறும்பன் 14:55, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

கூகுள் மொழிபெயர்ப்பு கட்டுரைகளை படிப்பது தண்டனை மாதிரி ஆகிவிட்டது. இது என் கூற்று மட்டுமல்ல தமிழில் ஆர்வம் உள்ள சிலரின் கூற்றும். --குறும்பன் 14:57, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

அடுத்தகட்ட நடவடிக்கை[தொகு]

நீண்டநேரம் இதை விவாதித்து விட்டோம். அடுத்து நாம் செய்யக்கூடியவை

  • 1)திட்டத்தை முற்றிலும் நிறுத்தி விடலாம்
  • 2)திட்டம் தொடரலாம் - புதிய கட்டுரைகளை உருவாக்க அனுமதிக்கலாம்; திருத்தங்களும் நடைபெற வேண்டும் (அனைத்து மொழிபெயர்ப்பாளர்களும்).
  • 3)திட்டம் தொடரலாம் - புதிய கட்டுரைகளை உருவாக்க அனுமதிக்கலாம்; திருத்தங்களும் நடைபெற வேண்டும் (நல்ல மொழிப்பாளர்கள் என்று த.விக்கி சமூகத்தால் இனங்காணப்பட்டவர்கள் மட்டும் பங்குபெற அனுமதிக்கப்படவேண்டும்)
  • 4)திட்டம் தொடரலாம் - ஆனால் புதிய கட்டுரைகள் கூடாது. திருத்தப்பட்ட கட்டுரைகளை மீண்டுமொரு முறை திருத்த வேண்டும். தரம் 80-90 % வரும்வரை (அனைத்து மொழிபெயர்ப்பாளர்களும்)
  • 5)திட்டம் தொடரலாம் - ஆனால் புதிய கட்டுரைகள் கூடாது. திருத்தம் மட்டுமே தொடரலாம். (நல்ல மொழிப்பாளர்கள் மட்டும்)

நான், மயூரநாதன், மணியன், அராபத், குறும்பன், கார்த்திக் தேர்வு 1 / 3 ஆம் கட்சியில் இருக்கிறோம் என்று மேல் உள்ள கருத்துகள் காட்டுகின்றன. எனினும் தெளிவாக வாக்கெடுத்து விடுவோம். இந்த ஐந்தில் உங்கள் விருப்பத் தேர்வை கீழே இடுங்களேன்.--சோடாபாட்டில் 09:53, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

எனது வாக்கு - 3:திட்டம் தொடரலாம் - புதிய கட்டுரைகளை உருவாக்க அனுமதிக்கலாம்; திருத்தங்களும் நடைபெற வேண்டும் (நல்ல மொழிப்பாளர்கள் என்று த.விக்கி சமூகத்தால் இனங்காணப்பட்டவர்கள் மட்டும் பங்குபெற அனுமதிக்கப்படவேண்டும்)--மணியன் 11:51, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
3. ஆனால் தொடர்ந்து அந்தக் கணக்குகளில் தரம் முன்னேறுகிறதா எனப் பார்க்க வேண்டும். புதிய கட்டுரைகள் இதே தரத்தில் தொடர்ந்தால் எவ்விதப் பயனும் இல்லை. அதனால் அடுத்த அனுமதியை இரு திங்கள்களுக்கு மட்டும் என வரையறுத்து, தரத்தைப் பொருத்துத் தொடர அனுமதிக்கலாம். வேறு பரிந்துரைகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும் (கட்டுரை நீளத்தைக் குறைத்தல், சில துறைகளை விடுத்தல், தமிழாசிரியர்களையும் துறை வல்லுனர்களையும் இப்பணியில் ஈடுபடுத்துதல் போன்றவை.). -- சுந்தர் \பேச்சு 12:45, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
3. ஆனால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைக்கப்பட வேண்டும். ஏற்கனவே நம்மால் சமாளிக்க முடியாத ஆயிரம் உள்ளன. எனவே அடுத்த கட்ட தரஆய்வுக்கு 25 புதிய கட்டுரைகளுக்கு மேல் வரக்கூடாது. தலைப்புகள் நாம் தேர்ந்தெடுத்ததாக இருக்க வேண்டும். அதே போல் திருத்த வேண்டிய கட்டுரைகளின் தரமும் எண்ணிக்கையும் இலக்கும் கடுமையாக உயர்த்தப்பட வேண்டும். --சோடாபாட்டில் 13:01, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
5. திட்டம் தொடரலாம் - ஆனால் புதிய கட்டுரைகள் கூடாது. திருத்தம் மட்டுமே தொடரலாம். (நல்ல மொழிப்பாளர்கள் மட்டும்). திருத்தப்பட்ட கட்டுரைகளை மீண்டுமொரு முறை திருத்த வேண்டும். எதை எழுதுவாங்கன்னு தெரியலை, நாம எழுதறது வீணாப்போயிடக்கூடாது பாருங்க.. தமிழ்நாடு தொடர்பாக ஒரு கட்டுரையும் வராது என்பது மட்டும் தெரியும் (புகுபதிய மறந்துவிட்டேன்) --குறும்பன் 14:09, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
3. With emphasis on improving already created articles. --Natkeeran 14:25, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
3. நல்ல மொழிபெயர்பாளர்களை கொண்டு திட்டத்தை தொடரலாம். ஆனால் புதிதாக உருவாக்கப்படும் கட்டுரைகளை முதலில் தனி பெயர்வெளிகளில் பதிந்து, திருத்தங்கள் சரி பார்க்கப்பட்ட பின் தனிக்கட்டுரையாக்கலாம். மேலும் கட்டுரை உருவாக்கமும் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்க வேண்டும். --அராபத்* عرفات 15:28, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
3. திட்டத்தைத் தொடரலாம். ஆனால், சரியாக மொழிபெயர்க்காத, ஒத்துழைப்புத் தராத மொழிபெயர்ப்பாளர்களை நீக்கவேண்டும். நல்ல திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே மொழிபெயர்க்க வேண்டும். தலைப்புத் தெரிவு தொடர்பாக தவி சமூகத்தின் கருத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும். --மயூரநாதன் 17:05, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
3. திட்டம் தொடரவேண்டும். நிச்சயமாக பொறுப்பாகப் பங்களிக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஆயிரம் தடவை கூவினாலும் அசண்டை செய்யாத பயனர்களை நிறுத்த வேண்டும். கூகிள் இதில் தனது மொழிமாற்றியை வளர்க்க முயல்கின்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் இத் திட்டம் மூலம் திறமையான கட்டுரைகள் எழுதப்படும்போது விக்கியுமே வளருகின்றது. எனவே 3ம் தெரிவே எனது தெரிவு --ஜெ.மயூரேசன் 03:20, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
திட்டம் தொடரப்படக்கூடாது. இவ்வளவு நாட்களாக முன்னேற்றம் ஏற்படவில்லையெனில் இனிமேல் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு!--கார்த்திக் 07:10, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

4. திருத்தப்பட்ட கட்டுரைகளை மீண்டுமொரு முறை திருத்த வேண்டும். தரம் 80-90 % வரும்வரை (அனைத்து மொழிபெயர்ப்பாளர்களும்). இந்தத் தரத்தை எட்டாவிட்டால் திட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், திட்டத்தை ஆதரிக்கும் பங்களிப்பாளர்கள் இந்தத் தரத்தை எட்ட தாங்கள் பங்களிக்க உறுதி அளிக்க வேண்டும். பங்களிக்காமல் ஆதரவு அளிப்பதில் ஒரு பயனும் இல்லை--இரவி 14:07, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

ரவியின் கருத்துகள்[தொகு]

தொடர்ந்து பல்வேறு அலைச்சல்களில் இருப்பதால் பல்வேறு முக்கிய விக்கிப் பணிகளில் ஈடுபட முடியாமல் இருப்பதற்கு வருந்துகிறேன். தற்போது இத்திட்டத்துக்கான ஒருங்கிணைப்பில் ஈடுபாடு காட்டும் சோடா பாட்டிலுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கூகுள் திட்டம் குறித்து வெளிப்படையாகச் சில கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். இது காறும் இதன் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டதால் நடுநிலை காக்க வேண்டியும் திட்டத்துக்குத் தகுந்த காலம் தர வேண்டியும் பொறுமை காத்தேன்.

  • நாம் அனைவரும் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதில் நம்முடைய எந்த நலனையும் முன்வைப்பதில்லை. அதனாலே விக்கியின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு இயன்ற அளவு சிறப்பான பங்களிப்புகளை வழங்க இயல்கிறது. விக்கியர் வேறு நிறுவனங்களுடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்டாலும், அது இந்த தன்னலமற்ற செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இருப்பதே விக்கியின் நலனைக் காக்கும். தனக்கென இலாபம் இல்லாமல் வணிக நிறுவனங்கள் கூட்டு வைக்கா என்றாலும், குறைந்தபட்சம் விக்கியின் நலனுக்குப் பாதகம் இல்லாமல் இருப்பதையாவது நாம் உறுதி செய்ய வேண்டும்.

கூகுள் திட்டத்தில் ஈடுபடும் மகேசுவரி போன்ற அந்நிறுவன ஊழியர்கள் கூட தங்கள் சொந்த ஈடுபாட்டின் பேரில் நல்ல பங்களிப்புகளை வழங்குகிறார்கள். அதே போல் சில மொழிபெயர்ப்பாளர்களும் சொந்த ஈடுபாட்டில் எழுதும் கட்டுரைகள் தரமாக உள்ளன. எனவே, இத்திட்டத்தில் ஏற்படும் குறைபாட்டுக்கு கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் ஏற்படும் இடையூறுகளும் கூகுள் வைத்துள்ள திட்ட இலக்குகளும் மொழிபெயர்ப்பு நிறுவனங்களின் நடைமுறைச் சிக்கல்களுமே காரணம் ஆகும். இதற்காக விக்கியின் நலனை பலியிட முடியாது.

விக்கியுடன் கூட்டு வைத்துள்ள மற்றவர்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்ளும் போது, நாம் மட்டும் தெரிந்தே விட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பது மிகப் பெரிய பிழையாகும். நம்மால் 100% சிறப்பான கலைக்களஞ்சியத் தரத்தை முயன்று எட்ட முடியாதது வேறு. ஆனால், தெரிந்தே தரத்தில் சமரசம் செய்வது மிகவும் தவறான செயற்பாடாகும். கூகுள் எத்தனையோ வெளி நிறுவனங்களுடன் உறவு வைத்துள்ளது. 50% மட்டுமே தரமான ஒரு பொருளை கூகுளுக்குத் தந்தால் கூகுள் ஏற்றுக் கொள்ளுமா? இல்லை, நாம் தான் நம்முடைய சொந்த வாழ்க்கையில் தெரிந்தே இது போல் சமரசம் செய்வோமா? 100%க்கு மிஞ்சிய தரம் என்று சமரசம் இல்லாமல் உழைத்தால் தான் 80% தரமாவது வரும். 50% கூட போதும் என்று நினைத்தால் மிகவும் தரம் குறைந்த ஒரு சராசரி தளத்தையே உருவாக்குவோம்.

  • மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் தரத்துக்கான அடிப்படை அளவீடு, மாதிரிக் கட்டுரைகள் இல்லை என்று நற்கீரன் கூறி இருந்தார். இது தவறு. தமிழ் விக்கியின் பல கட்டுரைகள் ஆங்கில விக்கியில் இருந்து நமது பங்களிப்பாளர்கள் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்தவை தான். நமக்குத் தேவை தரமான கட்டுரைகள் தானே தவிர, ஒருவர் என்ன கட்டுப்பாடுகளுக்கு இடையே மொழிபெயர்க்கிறார் என்பதற்காக அவருக்குச் சிறப்புச் சலுகைகள் தர முடியாது.
  • தரமாக எழுதும் மொழிபெயர்ப்பாளர்களை மட்டும் தொடர அனுமதிப்பது பரவாயில்லை தான். ஆனால், இந்த அளவு கூகுள் தனது கட்டுப்பாட்டை விட்டுத் தரும் என்று சொல்ல இயலாது. இந்தத் தரமான மொழிபெயர்ப்பாளர்களை இனங்காண தனி மதிப்பீடு செய்ய இன்னும் 2 வார கால அவகாசமாவது வேண்டும். அதனை நாம் யாராவது பொறுப்பெடுத்து செய்ய முன்வர வேண்டும். இத்தகைய மொழிபெயர்ப்பாளர்களின் தரத்தைத் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். அதே வேளை குறைந்த எண்ணிக்கை மொழிபெயர்ப்பாளர்களால் இருக்கிற கட்டுரைகளைத் திருத்துவதில் உள்ள பணிச்சுமையையும், கூகுள் திட்ட இலக்குக்கு ஏற்ப புதிய கட்டுரைகளை எழுதுவதில் உள்ள பணிச்சுமையையும் எதிர்நோக்க முடியாது. இப்படி எதிர்நோக்குவதால் அவர்கள் பணித்திறன் குறையலாம். இல்லை, இன்னும் புதிய மொழிபெயர்ப்பாளர்களை பணியில் அமர்த்தினால், திரும்ப நாம் எல்லாவற்றையும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.
  • கூகுள் திட்ட அணுகுமுறையைப் புரிந்து கொண்ட வரையில் திட்டத்தில் மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை, வேகம் ஆகியவற்றை மிகவும் குறைக்கவோ, பொறுமையாகச் செய்யவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது. தாறுமாறாக ஓடினாலும் அதன் வேகத்தில் ஓடினால் மட்டும் இத்திட்டம் ஓடும். இல்லாவிட்டால், மொழிபெயர்ப்பு ஊழியர்களுக்குப் போதிய ஊதியம் அளிக்க முடியாமை, தொடர் வேலை அளிக்க முடியாமை, மொழிபெயர்ப்புக் கருவி முன்னேற்றத்துக்கு வைத்துள்ள இலக்குகள் ஆகியவற்றை எட்ட முடியாமல் போகும். மூன்று மொழிபெயர்ப்பு நிறுவனங்களில் ஒன்றில் மட்டுமே முழு நேர ஊழியர்கள் இத்திட்டத்தில் பணியாற்றுகிறார்கள். மற்ற இரு நிறுவனங்களில் பெரும்பாலும் பகுதி நேர விருப்ப ஊழியர்களே. ( part time / freelancers ) இப்படிப் பகுதி நேர ஊழியர்களை ஈடுபடுத்துவது தரத்தை உறுதிப்படுத்த உதவாது.
  • வங்காள விக்கியர் தொடக்கத்திலேயே இத்திட்டத்தைத் தடை செய்து விட்டனர். சுவாகிலி விக்கியில் இத்திட்டம் குறித்துப் புலம்புகிறார்கள். ஏன் இந்தத் திட்டத்தை அனுமதித்தீர்கள் என்றே பல விக்கியரும் கேட்கின்றனர். மொழிபெயர்ப்பு நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் இது வருவாய் பிரச்சினை. கூகுளுக்கோ அதன் பல திட்டங்களில் இதுவும் ஒன்று. இது வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் பெரிய இழப்பில்லை. அல்லது, வெற்றிகரமாக இத்திட்டத்தைச் செயற்படுத்த வேறு களங்கள் உள்ளன. என்னதான் இந்திய மொழிகளுக்குப் பங்களிக்கிறோம் என்று அவர்கள் சொன்னாலும் மேற்கண்ட நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட உள்ளார்ந்த ஈடுபாடு கிடையாது. ஆனால், தமிழ் விக்கிப்பீடியர்களுக்கோ இது ஒரு சமூகக் குறிக்கோள் ஆகும். இதற்காக ஏற்னகவே ஏழு ஆண்டுகளாக உழைத்து வருவோரின் அரும் உழைப்பை எண்ணிப் பார்க்க வேண்டும். இது போல் இன்னும் பலர் பங்களித்து இயல்பான முறையிலேயே தமிழ் விக்கியை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு. வலுவான கட்டடத்தைக் கட்ட ஒவ்வொரு செங்கல்லும் உறுதியாக இருக்க வேண்டும். வேகமாக கட்டுகிறோம் என்று மணல் திண்டுகளை வைத்துக் கட்டி நன்றாக உழைக்கும் மற்றவர்களின் உழைப்பை வீணாக்க முடியாது. தமிழ் விக்கி வெற்றி பெற அதன் ஒவ்வொரு கட்டுரையும் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும்.

தற்போது திட்டம் தொடர வேண்டும் எனச் சொல்லும் பலரும் கூகுள் கட்டுரைகளைத் திருத்துவது கிடையாது. திருத்த நினைத்தாலும் முடியாத அளவுக்கு மோசமாக உள்ளன. எனவே, நம்மால் மாற்ற முடியாத ஒன்றை வெறுமனே ஆதரவு கொடுத்து வளர்ப்பது சரி இல்லை. ஒரு கட்டத்துக்கு மேல் கூகுள் அதன் நோக்கத்துக்காக நம்மைப் பயன்படுத்துவதாகவும் திட்டத்தை நம் மேல் திணிப்பதாகவும் உணர்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஓராண்டாக இதனை உரையாடி உரையாடிக் களைத்து விட்டது. இத்திட்டதை நாம் நினைத்தபடி சீராக்கும் கட்டுப்பாடும் நம்மிடம் இல்லை. அதற்கான மனித வளமும் இல்லை. ஒரு வேளை கூகுள் தமிழாக்கப் பொறி சிறப்பான செயல்பாட்டுக்கு வந்து, அவர்கள் எத்தனைக் கட்டுரைகளைத் தந்தாலும் அவற்றைத் திருத்திச் சீராக்கும் அளவுக்கு நமக்குப் பங்களிப்பாளர் வலு இருந்தால், அந்நிலையில் இத்திட்டத்தைத் தொடரப் பார்க்கலாம்.

இத்திட்டத்தை உடனடியாக நிறுத்தக் கோரினால் இருக்கிற ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் திருத்தாமல் விடவே வாய்ப்புண்டு. இருக்கிற 1000 கட்டுரைகளையும் கூகுள் மீண்டும் திருத்த வேண்டும். அவற்றை மீள மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றின் தரம் 80%-90% அளவு வந்தால் மட்டுமே இத்திட்டத்தைத் தொடர வேண்டும். தமிழ் விக்கியில் சில நூறு கட்டுரைகள் இருந்த நிலையில் இருந்து 1000 கட்டுரைகளை எட்டிய போது மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. திட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி வருகிறோம். இதற்கு மேலும் தெரிந்தே தரத்தில் சமரசம் செய்ய இயலாது. நேரடியாக திட்டத்தை ஒருங்கிணைத்த முறையில், இத்திட்டம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது. தற்போதுள்ள நிலைமையோடு திட்டத்தை நிறுத்தினால், சீராக்கினால் நன்று. இல்லாவிட்டால், தமிழ் விக்கியின் தரம் சீராக்க முடியாத அளவுக்குப் பழுதாகி விடும் என்று உண்மையிலேயே கவலைப்படுகிறேன். எச்சரிக்கிறேன். --இரவி 14:04, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

செய்யக் கூடியன[தொகு]

வாக்கெடுப்பு + கருத்துகள் கொண்டு நான் பின்வரும் திட்டத்தை முன் வைக்கிறேன்.

  1. கூகுள் புதிய கட்டுரைகளை மொழிபெயர்க்கலாம். ஆனால் பயனர்வெளியில் மட்டுமே உருவாக்க வேண்டும். விக்கி சமூகத்திற்கு திருப்தி ஏற்பட்டலொழிய புதிய கட்டுரைகள் பொதுவெளிக்குப் போகக் கூடாது.
  2. அடுத்த கட்டத்துக்கு 25 புதிய கட்டுரைகள் மட்டுமே உருவாக்க வேண்டும். அதுவும் விக்கி சமூகம் தேர்ந்தெடுக்கும் தலைப்புகள் மட்டுமே.
  3. திருத்தங்கள் தொடர வேண்டும். அடுத்த ____ மாத காலத்துக்குள் 1000 கட்டுரைகளும் சரி செய்யப்பட வேண்டும் (நம் திருப்திக்கு, அவர்கள் திருப்திக்கு அல்ல). எட்ட வேண்டிய தர அளவு 80%.
  4. நல்ல மொழிப்பெயர்ப்பாளர்களை நாம் இனங்காண வேண்டும். அவர்களைக் கொண்டு மட்டுமே திருத்தங்கள் + புதிய கட்டுரைகள் செய்யப்பட வேண்டும்.
  5. இந்த விதிகளுக்கு கூகுள் உட்பட்டால் திட்டம் தொடரலாம். இல்லையெனில் நிறுத்தி விடலாம். ரவி தெரிவித்த தகவலகளின் படி அவர்களது நிறுவன அமைப்பு இதற்கு ஒத்து வரவில்லையெனில் ஒதுங்கிக் கொள்வது நலம்.

மேற்கூறிய விதிகளுக்கு கூகுள் ஒத்துக்கொண்டால் நாம் செய்ய வேண்டியன

  • 25 புதிய கட்டுரைத் தலைப்புகளை இனங்காணுதல். (ஆங்கில விக்கியின் Featured Articles பட்டியலில் இருந்து)
  • நல்ல மொழிபெயர்ப்பாளர்களை இனங்காணுதல்
  • அடுத்த தர ஆய்வுக்காண தேதியை முடிவு செய்தல்

கூகுள் ஒத்துக் கொள்ளவில்லையெனில் செய்ய வேண்டியன

  • கூகுள் கட்டுரைகளில் மிக மோசமாக உள்ளவற்றை குறுங்கட்டுரைகளாக்குதல்
  • எஞ்சியவற்றை செப்பனிடுதல் (வார்ப்புரு, விக்கிப்படுத்துதல் முதலியன)

என்ன சொல்லுகிறீர்கள்? --சோடாபாட்டில் 14:41, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

சோடா பாட்டில், அனைவரின் கருத்தைகளையும் நன்றாகத் தொகுத்து உள்ளீர்கள். ஆனால், நான் அறிந்தவரையில், கூகுள் இக்கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக் கொள்ளாது. கூகுள் ஒப்புக்கொண்டாலும் மொழிபெயர்ப்பு நிறுவனங்களால் புதிய கட்டுரைகள் மூலமான தொடர்வருவாய் இல்லாமல் தாக்குப் பிடிக்க முடியாது. பங்களிப்பாளர்களின் கருத்தைக் குவிக்க, பின் வரும் சுருக்கமான கருத்தெடுப்பை முன்வைக்கிறேன். இதன் முடிவுகளை மட்டும் கூகுளுக்குத் தெரிவிக்கலாம்.

1. திட்டத்தை உடனடியாக அடியோடு நிறுத்தவும். ( Completely stop)

2. திட்டத்தைக் கவனமாகத் தொடரவும் (நீங்கள் குறிப்பிட்டுள்ள பல வழிமுறைகள் இதில் வரும்) (Continue with caution)

3. இருக்கிற 1000 கட்டுரைகளையும் 80%க்கு மேற்பட்ட தரம் வருமாறு திருத்திய பிறகு வழிமுறை 2ல் குறிப்பிட்டபடி திட்டத்தைத் தொடரவும். (Correct and continu with caution). வேண்டிய காலம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மூன்று தெரிவுகளின் கீழான வாக்கெடுப்பு ஓரளவு பங்களிப்பாளர் கருத்துகளைக் குவிக்க உதவும். இரண்டாம் வழிமுறையை ஆதரிப்போரிடம் இருந்து கட்டுரைகள் 80% தரத்தை எட்டுவதற்கான வழிமுறைகளையும், உறுதிமொழிகளையும் எதிர்பார்ப்பேன். ஒன்று கூகுள் திருத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆதரிப்போர் பொறுப்பெடுத்துத் திருத்த வேண்டும். --இரவி 14:52, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

2க்கு வாக்களிக்கிறேன். நான் மேலே சொன்ன விதிகள் Caution பகுதிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். கூகுளால் 80% தரத்தை எட்ட முடியவில்லையெனில் 1000 கட்டுரைகளையும் குறுங்கட்டுரைகளாக மாற்றுவதில் பெரும்பங்கை நானே ஏற்பதாக உறுதியளிக்கிறேன்.--சோடாபாட்டில் 15:08, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
2ம் 3ல் வருவதால் என் வாக்கு 3க்கு.--குறும்பன் 02:26, 1 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
எனது வாக்கு 3க்கு--மணியன் 02:40, 1 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
பல கட்டுரைகளில் வசனங்கள் புரிந்து கொள்ள முடியாமல், வாசிப்பதற்கே அயற்சியைத் தருவதாலும், மேலும் மொழிபெயர்ப்பின்போது, சொல்லப்பட்டிருக்கும் பொருளை புரிந்துகொண்டு மொழி பெயர்க்காமல், சொல்லுக்கு சொல் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் பிழையான அர்த்தத்துடன் காணப்படுவதாலும் எனது வாக்கு 3க்கு.--கலை 21:50, 2 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

2, 3 ஆகிய இரண்டு தெரிவுகளுக்கும் விக்கி சமூகத்தின் சம அளவிலான ஆதரவு உண்டு என்பதை உணர முடிகிறது. இரண்டு தெரிவுகளில் எதைப்பின்பற்றினாலும் நமக்கு நல்லது தான். எனவே, விக்கி சமூகத்தின் இணக்கச் செயல்பாட்டைப் பிளக்காமல், இந்த இரு தெரிவுகளையுமே கூகுள் முன் வைக்கலாம். கூகுள் எதைத் தெரிவு செய்கிறதோ அதற்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடரலாம். சோடா பாட்டில் மேலும் விவரங்களை முன்வைத்து, கூகுளுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தையும் இறுதி செய்தால் மிகவும் உதவியாக இருக்கும் :) இந்த இரு அணுகுமுறைகளின் மீதான கருத்தாடலுக்கும் மூன்று நாட்கள் காலம் தந்து செப்டம்பர் 5 அன்று நமது கடிதத்தைக் கூகுளுக்கு அனுப்பி வைக்கலாம்--இரவி 05:22, 1 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

என் கருத்துகள்- செல்வா[தொகு]

நான் மிகுந்த காலத்தாழ்ச்சியுடன் கருத்தளிப்பதற்கு வருந்துகிறேன். எல்லோரும் கூறிய கருத்துகளையும் பொறுமையாகப் படித்தும் பார்த்தேன். மிகச்சிறப்பாகவும் (எடுத்துக்காட்டுகளுடன்), மிகச்சரியாகவும் எல்லோரும் கருத்தளித்துள்ளார்கள். பயனர் சோடாபாட்டில் மிகவும் சரியாகவும் விரிவாகவும் சொல்லியுள்ளார். இப்படியே ஒவ்வொருவரும். பலரும் கூறும் கருத்துப்பிழைகள், மொழிபெயர்ப்புக் குழப்பங்கள், நாம் சீர் செய்யலாம் என்றாலும் அதற்கு எடுக்கும் அளவுக்கு அதிகமான நேர உழைப்பு (இதில் நாமே ஒரு கட்டுரையை எழுதிவிடலாம்) என்று மிகவும் சீரியதான குறைபாடுகள். மொழிபெயர்ப்பாளர்கள், நம்மோடு ஒத்துழைத்து திருத்த முற்பட்டால், மிக விரைவாக அவர்களும் பயன்பெறுவார்கள், நாமும் பயன்பெறுவோம். அவர்கள் அக்கறை எடுத்து பங்குகொள்ளாததே இத்திட்டம் வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. மிகப்பல நல்ல தலைப்புகளில் பயனுடைய கட்டுரைகள் எழுதியுள்ளார்கள், ஆனால் அவற்றின் நிறைவு தெரியாத அளவுக்கு குறைகள் மலிந்து உள்ளன. இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு மாறாக, குறைந்த எண்ணிக்கையில் கட்டுரைகளைத் (ஒவ்வொரு கட்டுரையும் 20-30 கிலோபைட்டுக்கு மிகாமல் இருக்குமாறு) தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு அவர்கள் செய்து, அவை 80% ஒப்புதலைப் பெற்ற பின்னர் அவர்கள் இத் திட்டத்தை விரிவு படுத்தலாம், என்பது கருத்து. முதலில் தரம், குறிக்கோள், குறைகள் இவை எதனையும் சரிவர புரிந்துகொள்ளாமல், தேர்ந்து கொள்ளாமல், வசவச என்று நிறைய கட்டுரைகளையும், நெடிய கட்டுரைகளையும், வேண்டாத தலைப்புகளிலும் எழுதுவது கூகுள் நிறுவனம் இதைப்பற்றி சரிவர இக்கோணங்களில் எண்ணவில்லை என்பதைக் காட்டுகின்றது. இத்தரம், ஏற்புத்தரம் முதலியவற்றை புரிந்து கொள்ள சிறிய அளவில் திட்டமிட்டு அவர்கள் முதலில் செய்தால் நல்லது. கூகுள் மொழிபெயர்ப்புகளை நான் பெரிதும் வரவேற்கிறேன், ஆனால் அவர்கள் ஒருங்கிணைந்து மேம்பாடு, ஏற்புத்தரம் பற்றி ஏதும் ஒத்துழைக்க வரவில்லை என்றால், தடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. திருத்தம் என்றால் என்ன என்று மொழிபெயர்ப்பாளர்கள் முதலில் உணரவேண்டும். திருத்தம் என்றால் கட்டுரையை முதலில் இருந்து ஆக்குவதைப்போல 2-3 மடங்கு நேரம் எடுக்குமாறு அமைந்தால் அது திருத்தம் அல்ல. ஆங்கிலத்தில் உள்ள மூலக்கட்டுரைக்குச் சென்றுதான் பல இடங்களில் என்ன சொல்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று இருந்தால், அது மொழிபெயர்ப்பும் இல்லை. அடிப்படைத் தகவல பிழைகள் மொழிபெயர்ப்பால் ஏற்பட்டால் அது இன்னும் கொடுமை. ஆகவே என் தேர்வு 2 (ஆனால் புதிய கட்டுரைகளை, தேர்வு பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே இடுதல் வேண்டும்). --செல்வா 19:29, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

கூகுளுக்கு எழுதும் கடிதம்[தொகு]

கூகுளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய கடிதத்தின் வரைவைக் கீழே தருகிறேன். வேண்டிய திருத்தங்கள் செய்தால் செப்டம்பர் 9 அன்று அனுப்பி வைக்கலாம்:

Hi,

We recently ran a sample evaluation of the articles created in the Google's Wikipedia translation project.

Jury:

We randomly picked 69 articles which were declared as "corrected" by the professional translators working in this project. 33 articles (47%) were evaluated by seven well known non-wikipedians in Tamil Internet sphere. These evaluators have different backgrounds in terms of age, profession and reading habits. The rest of the articles were evaluated by the Tamil Wikipedia community. We invited external evaluators to have a non-wiki community point of view on this project as ultimately the project has to serve the readers of Wikipedia.

Results:

The articles were evaluated on following four broad aspects:

1. Error free punctuation, grammar and spelling - 58.69%

2. Readability - 50%

3. Accuracy in translation meaning - 52.94%

4. Use of proper terminology - 51.47%

The jury was asked to award round percentage of marks like 0%, 50% and 100% marks to avoid huge differences in subjectivity.

Detailed results with notes can be found here.

Community's view:

The Tamil Wikipedia community is unanimous that articles having only 50% quality are not good enough to be placed in a live encyclopedia. Achieving at least around 80% quality would be welcome.

To move ahead in the project, the community would like to suggest two plans to be considered by the Google Team:


Plan A: Continue the project with careful execution:

This will involve

  • Allowing only select translators with good performance to continue creating new articles
  • Limiting the speed of new article creation
  • Suggesting titles to be translated from featured articles in English Wikipedia. Titles not just based on the search query metrics.
  • Creating new articles in userspace and moving them to mainspace only when they achieve 80% quality
  • Continuing to correct existing articles until they achieve 80% quality
  • Doing a second and final round of article evaluation.

Plan B: Correct and Continue:

This will involve correcting the existing articles to achieve 80% quality and only then planning about creating new articles.

While both plans are good for maintaining quality, either of them may be more suitable for Google and the vendors involved. So,we would like to know your opinion on this and based on that we will make further arrangements

Thanks,

Tamil Wikipedians

கருத்து[தொகு]

சரியான தொகுப்பு இரவி. 'Plan A' ல் புதிதாக உருவாக்கப்படும் கட்டுரைகள் முதலில் தனி பெயர்வெளிகளில் பதியப்பட்டு, திருத்தங்கள் முடிந்த பின்னரே பொதுவெளிக்கு நகர்த்தப்படும் என்பதையும் சேர்க்கலாம் என நினைக்கிறேன். மற்றவர்கள் கருத்து கூறவும்.--அராபத்* عرفات 15:20, 6 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

சேர்த்துள்ளேன்.--சோடாபாட்டில் 15:29, 6 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  • இவ்வளவு விரைவில் கூகுளுக்கு மடல் எழுதப் போகிறோம் என்று நான் எதிர்பார்க்கவில்லை. Plan A, Plan B என்று இரு பரிந்துரைகள் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்பது என் கருத்து. ஏற்கெனவே உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் தரம் உயர்த்தப்படாமல் மேலும் புதியவற்றை உருவாக்குவது நல்லதல்ல. எனவே Plan B மட்டுமே கொடுத்துவிட்டு, தொடர் ஒத்துழைப்புப் பற்றி அதன் பிறகு உரையாடுவோம் என்று கூகுளுக்குத் திட்டவட்டமாகத் தெரிவிப்பதே நல்லது. --பவுல்-Paul 15:51, 6 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  • கருத்தொற்றுமை உரையாடல்களை முன்னின்று நடத்திய சோடாபாட்டிலுக்கு நானும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பவுல், மொழிபெயர்ப்பு நிறுவன ஊழியர்கள் நமது முடிவை எதிர்பார்த்து பணிவாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். எனவே, நமது முடிவைத் தாமதியாமல் தெரிவிப்பது நன்றி. நானும், இரண்டாம் திட்டத்துக்கே வாக்களித்தேன். ஆனால், இரண்டு முடிவுகளுமே கூகுளுக்குச் சிரமமாக இருக்கக்கூடிய நிலையில் அதுவா இதுவா என்று மேலும் உரையாடலை வளர்த்து தமிழ் விக்கி சமூகத்தின் இணக்கப்பாட்டைக் குலைக்க வேண்டாமே என நினைக்கிறேன். தமிழ் விக்கியின் அனைத்துச் செயற்பாடுகளிலும் நாம் ஒற்றுமையாக இருப்பதே நமது வலுவாக இருக்கும்--இரவி 10:07, 7 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  • கூகுளுக்குக் கடிதத்தை அனுப்பி உள்ளோம். கூகுள் பொறுப்பாளர்கள் பலரும் விடுமுறையில் இருப்பதால் சில நாட்கள் கழித்தே அவர்களின் கருத்தை அறிய இயலும். --இரவி 05:46, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
:-)--சோடாபாட்டில் 06:46, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

செப்டம்பர் 24, 2010 கூகுளுடன் சந்திப்பு[தொகு]

வரும் வெள்ளி, செப்டம்பர் 24, 2010 அன்று கூகுளுடன் ஒரு சந்திப்புக்கு அழைத்துள்ளார்கள். கூகுளின் பெங்களூர் அலுவலகத்தில் பகல் 1 - 2 வரை நடக்கும். நான் கலந்து கொள்கிறேன். சுந்தரும் இயன்றால் கலந்து கொள்வார். ஆர்வம் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் எவரும் வர விரும்பினால் முன்கூட்டியே அவர்களுக்குத் தெரியப்படுத்தி விடலாம்--இரவி 10:47, 22 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

நேரில் வர இயலாது. (வீட்டை விட்டு நகரமுடியாத நிலை). Conference செய்ய முடிந்தால் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். --சோடாபாட்டில் 10:52, 22 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

சந்திப்பின் விளைவுகள்[தொகு]

இந்த சந்திப்பில் இரவியும், அராபத்தும், நேரடியாகக் கலந்து கொண்டனர். நான் தொலைபேசி மூலம் கலந்து கொண்டேன். விக்கி சமூகத்தின் முடிவுகளையும் எண்ணங்களையும் தெளிவாக கூகுள் செயலதிகாரிகளுடம் சொல்லி விட்டோம். நாம் மேலே முடிவு செய்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு திட்டத்தைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளனர். சந்திப்பில் எடுத்த முடிவுகள் பின்வருமாறு

1) திட்டம் இரு வழிகளில் தொடரும்

2)முதல் வழி: புதிய கட்டுரைகள். அடுத்த கட்டத்துக்கு புதிய கட்டுரைகள் 25 மட்டுமே உருவாக்கப்படும். அவை மொழிபெயர்ப்பாளர்களின் பயனர் வெளியில் பதிவேற்றப்படும். நாமதை மதிப்பீடு செய்து நமக்கு ஏற்புடையதாக இருந்தால் பொதுவெளிக்கு அவை நகர்த்தப்படும். கட்டுரைத் தலைப்புகள் நாம் தெரிவு செய்து தரவேண்டும் (கூகுளும் ஒரு பட்டியலை நமக்கு அளிக்கும், அதிலிருந்தும் நாம் தேர்வு செய்யலாம், அல்லது நாமாக தலைப்புகளைச் சேர்க்கலாம். ஆங்கில விக்கியிலுள்ள் த.விக்கிக்கு பொருத்தமான FA/GA கட்டுரைகளைத் தேர்வு செய்து தருவதாகக் கூறியிருக்கிறோம்)

3) இரண்டாம் வழி: கட்டுரை திருத்தம். முதல் கட்டமாக ஐந்து மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு ஆளுக்கு ஐந்து கட்டுரைகளை திருத்தச் சொல்வதாக கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது. நாம் மேலே மதிப்பீடு செய்த கட்டுரைகளில் மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கிய 25 கட்டுரைகளை முதல் கட்டமாக திருத்த சொல்லியிருக்கிறோம். இத்திருத்தங்களைக் கண்காணித்து, மொழிபெயர்ப்பாளர்களை வழிநடத்துவது விக்கி சமூகத்தின் பொறுப்பு.

4) மேற்சொன்ன இரண்டிற்கும் இப்பொதுள்ள மொழிபெயர்ப்பாளர்களுள் சிறந்தவர்கள் என்று நாம் அடையாளம் காட்டுபவர்கள் மட்டுமெ ஈடுபடுத்தப்படுவர். அடுத்த இரு வாரங்களுள் நமக்கு ஏற்புடைய மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியலை நாம் கூகுளுக்கு அளிக்க வேண்டும்.

5) மேற்சொன்ன இரு வழிகளிலும், விக்கி சமூகம் திருப்தி அடைந்தால் திட்டம் விரிவுபடுத்தப்படும். எப்போது, எத்தனை போன்ற கேள்விகளுக்கு அடுத்த கட்ட மதிப்பீட்டின் இறுதியில் முடிவெடுக்கப்படும்.

நாம் உடனே செய்ய வேண்டியது: 1) மொழிபெயர்ப்பாளர்களை இனங்காணுவது 2) 25 புதிய கட்டுரைகளுக்கான தலைப்புப் பட்டியலை தயார் செய்ய வேண்டியது. --சோடாபாட்டில் 11:56, 24 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

பி.கு: இரவி, அராபத் - மேற்சொன்னதில் பிழைகள்/மாற்றங்கள் இருப்பின் மாற்றி விடுங்கள்--சோடாபாட்டில் 11:56, 24 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

Pls don't delay na 2409:4072:8E99:7A93:A828:3948:1E71:6A6D 09:37, 8 பெப்ரவரி 2023 (UTC)