விக்கிப்பீடியா பேச்சு:ஒத்த கட்டுரைகள்/கட்டுரைகளை ஒன்றிணைத்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: ஓர் ஐயம். முதன்மைப்படுத்த வேண்டிய கட்டுரையை எவ்விதம் தீர்மானிக்கவேண்டும்?

  1. முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரை
  2. தலைப்பு சரியாக / பொருத்தமாக இருக்கும் கட்டுரை
  3. மேற்கோள்கள், விக்கிப்பீடியாவிற்குரிய கட்டுரை வடிவமைப்பு, கூடுதல் தகவல்களைக் கொண்டிருக்கும் கட்டுரை.

இது குறித்து தங்களின் அனுபவப் பகிர்வினைத் தந்தால், வழிகாட்டல் குறிப்புகளை மேம்படுத்த உதவும்.

எனது செயல்முறை: முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரையை முதன்மைப்படுத்த வேண்டிய கட்டுரையாக நான் கருதுகிறேன். அப்போதுதான் வரலாறு, வரிசைக்கிரமமாக பதியும் என்பது எனது அனுமானம். அனைத்தையும் செய்துமுடித்த பிறகு, பொருத்தமான தலைப்பிற்கு நகர்த்திக்கொள்கிறேன். எடுத்துக்காட்டு: இப்போதிருக்கும் இந்துமதி கட்டுரை. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:14, 19 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரையை முதன்மைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. சரியான தலைப்பு எதுவென நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு தலைப்புகளுமே தவறென்றால், ஏதாவதொரு கட்டுரையை முதன்மைப்படுத்தி, பின்னர் சரியான தலைப்புக்கு மாற்றலாம். எவ்வாறு செய்தாலும், வரலாறுகள் அனைத்தும் பாதுகாக்கப்படும். ஒரு கட்டுரையிலுள்ள கூடுதல் தகவல்களை மற்றைய கட்டுரையில் சேர்ப்பதுதான் முக்கியம். இதுவே மிகவும் கடினமான பணி.--Kanags \உரையாடுக 06:44, 19 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

எவ்வாறு செய்தாலும் வரலாறுகள் வரிசைக்கிரமமாக (அதாவது நாட்கள் அடிப்படையில்) அமைந்து பாதுகாக்கப்படுமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:25, 19 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

ஆம்.--Kanags \உரையாடுக 07:38, 19 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

தங்களின் உதவிக்கு நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:11, 19 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]