விக்கிப்பீடியா பேச்சு:அகர வரிசையில் கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞான பீட விருது என்பது போன்ற ஞகர வரிசையில் உள்ள சொற்களுக்குப் பட்டியல் உள்ளதா?--C.R.Selvakumar 23:09, 29 ஜூன் 2006 (UTC)செல்வா

விரும்பினால், அனைத்து எழுத்துக்கள், எண்கள், குறிகள் வாரியாகவும் வரிசைப்படுத்த முடியும். இது வெறும் இணைப்பை ஒழுங்காகத் தரும் வேலை தான். திட்டப் பக்கத்தை தொகுப்புப் பக்கப் பதிப்பில் பார்க்கும் போது இதை அனைவரும் எளிதில் உணரலாம். விக்கிபீடியாவில் குறைந்த கட்டுரைகள் இருந்த காலத்தில், பெரும்பான்மை கட்டுரைகள் தொடங்கும் எழுத்துக்களை மட்டும் தொகுத்து தந்தேன். எந்த எழுத்தைத் தெரிவு செய்கிறோமோ அவ்வெழுத்துகளில் தொடங்கி அதை அடுத்து வரும் எழுத்துக்களும் வரிசைப்படுத்தப்பட்டு காண்பிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொள்க.--ரவி 19:46, 30 ஜூன் 2006 (UTC)

இப்பக்கம் மனிதமுறையாக தொகுக்கப்படுகிறதா, அல்லது தன்னியக்கமானதா? --மு.மயூரன் 20:06, 30 ஜூன் 2006 (UTC)

தொகுப்புகள் தன்னியக்கமானவை. அவற்றுக்கு Wikipedia:அகர வரிசையில் கட்டுரைகள்ல் இருந்து இணைப்பு தருவது மட்டும் மனித முறை.--ரவி 14:14, 1 ஜூலை 2006 (UTC)
manual என்று குறிக்க கைப்பட என்று எழுதலாம். எடுத்துக்காட்டாக இவ்வாறு எழுதலாம்: தொகுப்புகள் தன்னியக்கமாக நிகழ்கின்றன. அவற்றுக்கு Wikipedia:அகர வரிசையில் கட்டுரைகள்ல் இருந்து இணைப்பு மட்டும் கைப்பட தரப்படுகின்றது.கட்டுரைகளில் இருந்து என்ன இணைப்பு தரப்படுகின்றது என்று விளங்கவில்லை.--C.R.Selvakumar 04:13, 2 ஜூலை 2006 (UTC)செல்வா

manual -கைப்பட என்பது நேரடி மொழிபெயர்பில்லாத நல்ல சொல்லாக படுகிறது, ஆனால் எல்லா இடங்களுக்கும் பொருந்துமா என்று யோசிக்க வேண்டியிருக்கு. link என்பதற்கு இணைப்பு என்பது என்னால் உடன்பட முடியாமலிருக்கிஅது. தொடுப்பு என்பதுதான் மிகச்சரியான விளக்கத்தை தருவதாக கருதுகிறேன். --மு.மயூரன் 06:52, 2 ஜூலை 2006 (UTC)

இவ்வட்டவணையில் க், ச், த், ப், ம், வ் ஆகிய எழுத்திக்களின் அனைத்து உயிர் மெய்யெழுத்துக்களையும் உள்ளடக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. இது இலகுவானதா? --சிவகோசரன் 04:54, 16 பெப்ரவரி 2011 (UTC)

அனைத்து எழுத்துக்களையும் உள்ளடக்கலாம்.--Kanags \உரையாடுக 00:48, 14 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]