விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2024 இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுவதும், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும்.

தமிழ் விக்கிப்பீடியா மாரத்தான், தமிழ் விக்கிப்பீடியர்களால் நடத்தப்படுகிறது. அனைத்துப் பயனர்களை ஒருங்கிணைக்கவும், ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், புதிய பயனர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பயனர்கள், அந்த நேர அளவு முழுவதும் பங்களிக்க வேண்டும் என்பது இல்லை; அவரவருக்கு உகந்த நேரத்தில் விருப்பமான அளவிற்கு பங்களிக்கலாம்.

2024 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா மாரத்தான் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நாள், கால அளவு[தொகு]

  • நாள்: கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும்
  • கால அளவு: 24 மணி நேரம், காலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை (இந்திய, இலங்கை நேரம்)

திட்டம் / கவனக்குவியம்[தொகு]

விக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளுதலும்.

பயனர்கள் தமக்கு விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம்.

பரிந்துரைக்கப்படும் வழமையான தொகுப்புகள்[தொகு]

எண் செயல் உதவி
1 கட்டுரைகளில் எழுத்துப் பிழை, சந்திப்பிழை, இலக்கணப் பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்தல் விக்கிப்பீடியா:உரை திருத்தும் திட்டம்
2 பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்துதல் இணையான ஆங்கிலக் கட்டுரையை பயன்படுத்தலாம்
3 தேவைப்படும் உகந்த புதிய பகுப்புகளை உருவாக்குதல் உதவி:பகுப்பு
4 கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல் இணையான ஆங்கிலக் கட்டுரையை பயன்படுத்தலாம்
5 கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைத்தல் விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்
6 புதிய கட்டுரையைத் துவக்குதல் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பகுப்புகள் உதாரணம் மட்டுமே, இதில் இல்லாத தங்களுக்கு விருப்பமான கட்டுரைகளைத் தாராளமாக உருவாக்கலாம். கீழ்க்காணும் நான்கு பகுப்புகளில் இருந்து சுமார் 2000இற்கு அதிகமான கட்டுரைகளை உருவாக்கலாம்.
1.கணிப்பிய வேதியியல்
2.எழுத்தாளர்கள்
3.அரசியல்வாதிகள்‎
4.பழங்கால இந்தியா‎‎

பேருதவி: விக்கிப்பீடியா:உதவி

பங்களிக்க விரும்பும் பயனர்கள்[தொகு]

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்[தொகு]

  1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

பங்களிப்பு விவரம்[தொகு]

ஒட்டுமொத்த தொகுப்புகள்[தொகு]

ஒவ்வொரு மணிநேரமும் செய்யப்பட்ட தொகுப்புகள்[தொகு]

புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகள்[தொகு]

ஒவ்வொரு மணிநேரமும் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகள்[தொகு]

பயனர்கள் வாரியான விவரம்[தொகு]

துணைப் பக்கங்கள்[தொகு]