விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சட்டைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கப்பீடியா தனது 10 ஆண்டினை கொண்டாடும் தருணத்திற்காக அராபத் அவர்களால் சட்டை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டு இரவி அவர்களின் வழிகாட்டுதலால் சென்னை பத்தாண்டு நிறைவுக் கூடலில் விநியோகம் செய்யப்பட்டது.

ஆன்டன், தாரிக் இருவரின் முயற்சியில் சட்டை வடிவமைக்கப்பட்டு, ஜெகதீஸ்வரனால் அச்சகம் தேர்வு செய்யப்பெற்று, இரவி அவர்களால் முன்மாதிரி பார்வையும், இறுதியாக அச்சிடப்பட்ட சட்டையும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

பொதுத் தகவல்கள்

  • நிறம் - ROYAL BLUE
  • பாக்கெட் இல்லாத காலர் வைத்த சட்டை
  • முன்பக்கம் (இடது பக்கம்)- விக்கி சின்னம் (விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம்).
  • கைப்பட்டை (வலது பக்கம்) - தமிழ் விக்கிப்பீடியா ta.wikipedia.org.
  • விக்கி சின்னம் அளவு - 4 அங்குலம் (அதற்கு ஏற்றவாறு எழுத்துரு)
  • கைப்பட்டை அளவு - 4/5 அங்குலம்
அளவு
அளவு S M L XL
மார்பு 34-36 38-40 42-44 46-48
இடுப்பு 30-32 32-33 33-34 36-38
செயல்பாடுகள்
எண் செயல்கள் காலக்கெடு நிலை
1 சட்டை வடிவமைப்பு நிறைவுற்றது
2 அச்சகம் தேர்வு 17-09-2013 நிறைவுற்றது
3 மாதிரிப் பார்வை 26-09-2013 நிறைவுற்றது
4 அச்சிடல் நிறைவு 27-09-2013 நிறைவுற்றது
5 வழங்குதல் 29-09-2013 நிறைவுற்றது

வடிவமைப்பு[தொகு]

மாதிரி[தொகு]

இணையத்தில் கீழ்க்கண்ட மாதிரி வடிவமைப்பினைக் கண்டேன். சட்டை அச்சகங்கள் இது போன்ற தைத்து தர முன்வந்தால் முழுவதுமாக ஒரே நிறம் கொண்ட சட்டைகளைவிட இது கவர்ச்சிகரமாக இருக்கும். விக்கிப்பீடியாவின் சின்னம் வெண்ணிறமாகவும் இருப்பதால், வெண்ணிறம் தவிற வேறு நிறங்களையும் தேர்வு செய்யலாம். விக்கியன்பர்கள் தங்களுடைய கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

அச்சகம் சட்டைகளை விலைக்கு வாங்கி அச்சடித்து தருவதால் இந்த வடிவமைப்பு மாதிரியை முன்னெடுக்க முடியவில்லை. :-( --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:38, 18 செப்டம்பர் 2013 (UTC)

அச்சகங்கள்[தொகு]

சென்னையில் இருக்கும் சட்டை அச்சகங்களை நேரில் சென்றுப் பார்த்து அச்சகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான அச்சகங்கள் சட்டை அச்சுப்பணிகளில் அனுபவமில்லாமல் இருக்கின்றன. அனுபவமுள்ளவர்கள் வீட்டையே அச்சகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். pg Corportion மற்றும் NANA DESI என இரண்டு அச்சகங்களில் மட்டுமே வெவ்வேறு அச்சு முறைகளை காண முடிந்தது.

தொடர்புகொள்ளப்பட்ட அச்சகங்கள்
  1. pg Corportion - வெள்ளை நிற சட்டைகள் மட்டுமே அச்சடிப்பதால் நிராகரிப்பு. (ரூ 300 - வெள்ளை சட்டை + அச்சுபணி)
  2. Add win business solutions - விக்கிப்பீடியா சின்னத்தின் ஒரு நிறம் மட்டுமே அச்சிட இயலும் என்பதால் நிராகரிப்பு. (தொழில் நுட்ப மேம்பாடு இல்லை - ரூ 260)
  3. Dude Tamizha - அச்சடிப்பதில்லை.
  4. ABS Associates - தரமில்லை.
  5. Anbu Screens - அனுபவமில்லை
  6. Golden Tech -அனுபவமில்லை
தெரிவு செய்யப்பட்ட அச்சகம்

NANA DESI - மந்தைவெளி - www.nanadesi.com

சட்டையின் விலை - ரூ 180 அச்சு செலவு - ரூ 60 மொத்தமாக ரூ 240 (ரூ 275 வெளிவிலையை விக்கப்பீடியாவிற்காக குறைத்துக் கொண்டுள்ளார்கள்)

தெரிவு செய்யப்பட்டதன் காரணம் - முன் அனுபவம் உள்ளவர்கள. சென்னையில் அச்சகத்திற்கென வலைதளம் வைத்திருக்கின்றார்கள். நல்ல மதிப்பீடுகள் இருக்கின்றன. வண்ண சட்டைகளில் அச்சடித்த அனுபவம் உள்ளவர்கள். விக்கிப்பீடியாவின் சமூக நன்மையை எடுத்துக் கூறிய பின்பு தங்களுடைய இலாபத்தினை கனிசமாக குறைத்துக் கொண்டு நல்ல முறையில் அச்சடித்து தர இசைந்திருக்கின்றார்கள்.

இற்றை[தொகு]

  • 60 சட்டைகள் அச்சடிக்கப்பட்டன. இலங்கையைச் சேர்ந்த பயனர்களுக்குத் தருவதற்கு என்று 13 சட்டைகள் சிவகோசரனிடமும் சஞ்சீவி சிவக்குமாரிடமும் தரப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாகத் தந்தால் அரங்கம் முழுவதும் நீல வண்ணமாகி விடும். அது நேரிலும் ஒளிப்பதிவிலும் காண்பதற்கு அவ்வளவு உகப்பாக இருக்காது என்பதற்காக எஞ்சிய சட்டைகள் படிப்படியாக பயனர்களிடம் சேர்க்கப்பட்டன. பல்வேறு விக்கிப்பீடியர்களின் தொழில்முறை ஒளிப்பதிவு, நிகழ்படங்கள் நாள் முழுதும் பதிவாகியதால் அவற்றிலும் மாறுபட்ட வண்ணங்கள் தெரிவதற்காக சட்டைகள் தருவதை நிறுத்தி வைத்திருந்தோம். தவிர, மாலை நிகழ்வுக்கு மட்டும் வரும் தகுந்த விக்கிப்பீடியர்களுக்கும் தர வேண்டும் என்பதற்காக மாலை வரை சட்டை வழங்கலை நிறைவு செய்யவில்லை. எனினும், நேரடியாக வந்து சட்டை வேண்டும் என்று கேட்ட தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு மறுக்காமல் சட்டைகள் வழங்கப்பட்டன. சிலருக்குச் சரியான அளவில் சட்டைகள் கிடைக்கவில்லை. இவை போக CIS-A2K அமைப்பிடம் சில ஆங்கில விக்கிப்பீடியா சட்டைகளைக் கோரிப் பெற்றிருந்தோம். நிகழ்வுக்கு உரிய பங்களித்த ஆனால் தமிழ் விக்கிப்பீடியர் அல்லாதவர்களுக்கு இவற்றில் சில சட்டைகள் வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்குவதற்காக அளவு பிரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு சில சட்டைகள் (10 அல்லது 15) ஒரு சிறிய இடைவேளையில் காணாமல் போயின. இவற்றில் சிவற்றைத் தமிழ் விக்கிப்பீடியர்கள் பெற்றுக் கொண்டதையும் அறிய முடிகிறது. இருந்தாலும், வருங்காலத்தில் சட்டைகளை வழங்குவதற்கு முறையான அணுகுமுறை வேண்டும். குறைவான எண்ணிக்கையில் சட்டை அடித்ததால் சட்டை கேட்ட நிறைய பேருக்கு மறுக்க வேண்டி வந்தது வருத்தமே. அரங்க ஏற்பாடுகளைக் கவனிக்கும் ஊழியர்கள் முதல் நிகழ்வுக்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் வரை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு அடுத்து சட்டை அச்சடிக்க வேண்டும்.
  • முதல் முறையாக சட்டை அச்சடிக்கும் போது, சோதனை முறையில் செய்து பார்க்க குறைவான சட்டைகள் அச்சடிப்பதே தகும். பத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான விக்கிமீடியா நல்கையில் செவைக் குறைக்கும் பொருட்டு சட்டைகளுக்கான நிதி ஒதுக்கீடும் குறைவாகவே கேட்கப்பட்டது. விக்கிமீடியா நல்கைக் குழு எவ்வாறு சட்டைகளை வழங்குவீர்கள் என்ற கேட்டதற்கு, தக்க பங்களிப்புகளை நல்கியவர்களுக்கு மட்டுமே வழங்குவோம் என்று கூறி இருந்தோம். எனவே, நிகழ்வுக்கு வரும் அனைவருக்கும் சட்டைகள் வழங்குவது சாத்தியமற்றது. அதிலும் குறிப்பாக, எந்த விதமான பதிவுக் கட்டணமும் இன்றி இலவசமாக நடக்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கு வரும் நூற்றுக் கணக்கானோருக்கு தருவது சாத்தியமே இல்லை. இல்லை, வருங்காலத்தில் நிகழ்வுகளுக்கு எத்தனை பேர் என்றாலும் தர வேண்டும் என்றால், இதற்கு உரிய நிதி ஆதரவைப் பெற்றுக் கொண்டு தொடர வேண்டும். அல்லது, விலை வைத்து விற்க வேண்டும். எப்படி என்றாலும், இது போன்ற சட்டைகளை அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் என்ற புரிதலுடன் திட்டமிடல் வேண்டும்.
  • சட்டைக்கான உற்பத்தியாளரை பெரும் தேடலுக்குப் பிறகு இறுதி செய்திருந்து தக்க அவகாசம் கொடுத்திருந்தோம் என்றாலும், நிகழ்வுக்கு முந்தைய நாளே கிடைக்கப்பெற்றது. தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று சில சட்டைகளை முன்கூட்டியே அச்சடித்து ஒட்டு மொத்தமாக வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது நெருக்கடி இன்றி நிகழ்வுகளுக்குப் பெற்றுக் கொள்ளலாம். தற்போதைய உற்பத்தியாளரின் பணி அவ்வளவு நிறைவாக இல்லை. கடும் முயற்சி செய்து சென்னையில் இருப்பதில் நல்ல கடையைத் தேர்வு செய்தோம் என்றாலும், திருப்பூர் போன்ற பகுதிகளில் இன்னும் பெரிய தொழில்முறை நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாகப் பெற்றுக் கொண்டால் விலை குறையவும் தரம் கூடவும் வாய்ப்புண்டு.
  • கூடல் நிகழ்வுக்கு வந்த புதியவர்கள் சட்டைகளை வைத்து விக்கிப்பீடியர்களை இனங்கண்டு பேசினர் என்பது brandingக்கும் தேவைப்படும் உதவிகளுக்கும் வசதியாக இருந்தது. இதே காரணத்தை முன்னிட்டு அனைவருக்கும் சட்டை வழங்கினால் யார் விக்கிப்பீடியர் என்ற குழப்பமும் பார்வையாளர்களுக்கு வரலாம் என்பதையும் கவனிக்க வேண்டும்.
  • தொடர்ந்து இதே சட்டையையோ புதிய சட்டையையோ வடிவமைத்து உற்பத்தியாளரை இனங்கண்டு புதிய சட்டைகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் தேவை.
  • சட்டைக்கான வடிவமைப்பை மட்டும் நாம் செய்துவிட்டு, அவற்றுக்கான அச்சிடல் உதவியை CIS-A2K, இந்திய விக்கிமீடியா கிளை போன்றவற்றிடம் கோருவதன் மூலம் நமது நடைமுறை உழைப்பைக் குறைத்துக் கொள்ளலாம். மேற்கண்ட அமைப்புகள் தொடர்ந்து பல சட்டைகளை ஒரே நிறுவனத்திடம் அச்சிடக்கூடியவர்கள் என்பதால் குறைந்த விலையிலும் கிடைக்கலாம்.