விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் தகுதி நீக்க நியமனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீக்கப் பட வேண்டிய கட்டுரைகளை இப்பக்கத்தில் சேர்க்கவும். அதற்கான காரணமும் தரப்பட்டாலொழிய நீக்கல் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இந்தியா[தொகு]

விக்கிபீடியாவில் நல்ல கட்டுரை என்று அங்கீகாரம் பெறுவதற்கே கட்டுரைகள் நல்ல மேற்கோள்கள் உள்ளனவாக இருத்தல் வேண்டும். இக்கட்டுரைக்கு ஒரே ஒரு மேற்கோள் இருக்கும் பொழுது இது சிறப்பு கட்டுரையாக இருப்பது வியப்பாக இருக்கிறது! 2006 ஆண்டில் மேற்கொள்களே இல்லாமல் இது சிறப்பு கட்டுரையாக ஆக்கப்பட்டது! சிறப்புக் கட்டுரை மீளாய்வு தேவை - செழியன் 00:32, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]

சிறப்புக் கட்டுரைக்கான தகுதியில் இருந்து நீக்கத் தேவையில்லை. அனைவரும் இணைந்து மிக விரைவில் இதனைத் தரம் உயர்த்த வேண்டும். அதற்கான முயற்சியில் செழியன் ஏற்கனவே இறங்கியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:16, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]
2006லிருந்து நெடுந்தூரம் வந்து விட்டோம். ”சிறப்புக் கட்டுரை”க்கான தகுதிகளையே மீளாய்வு செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இப்போதிருக்கும் சிறப்பு கட்டுரைகளில் பலவற்றை அத்தகுதியிலிருந்து நீக்க வேண்டி வரும். பலவற்றை சேர்க்க வேண்டி வரும். சுருங்கச் சொல்லின் எக்கச்சக்க வேலைகள் உருவாகும் :-). இப்போதைகு ஒரிரு வாரங்களுள் இந்தியா கட்டுரை மேம்படுத்தப் படாவிட்டால் அதன் சிறப்பு அந்தஸ்தைப் பறிக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:37, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]
2006ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் நிலைக்கேற்ப சிறப்புக் கட்டுரை ஆக்கப்பட்டிருக்கலாம்.கனகு சிறீதரன் சொல்வதுபோல இதனை "மிக விரைவில்" கூட்டு சேர்ந்து தரமுயர்த்துவதே நேர்மறையான செயலாகும். சிவப்பு உள்ளிணைப்புகளுக்கான கட்டுரைகளும் எழுதப்பட வேண்டும். செய்ய வேண்டுவனவற்றைப் பட்டியலிடுதல் முதல் முயற்சியாக அமையும். சோடாபாட்டில் சொல்வதுபோல "சிறப்புக் கட்டுரை" தகுதிகளை மீளாய்வு செய்ய வேண்டும். இதற்கான சோதனைக் களமாக இக்கட்டுரையை வைத்துக் கொள்ளலாம் --மணியன் 04:46, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]

முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரைகள் சிறப்புக்கட்டுரைகளாக அறிவிக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து. ரவிசந்தர் பத்து விக்கிநிகழ்வில் ஆங்கில விக்கிப்பீடியாவில் கடைபிடிக்கப்படும் கொள்கைகள் பற்றி விளக்கியதிலிருந்து தமிழ் விக்கியில் சிறப்பு கட்டுரைகளின் சிறப்பு தகுதிகள்,கொள்கைகள் என்ன என்று அறிய விரும்புகிறேன். அநேக கட்டுரைகளில் பகுதிகளுக்கு முதன்மை கட்டுரைகள் இல்லை, ஏகப்பட்ட சிகப்பு இணைப்புகள் உதா. சென்னை -- மாஹிர் 06:17, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]

//முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரைகள் சிறப்புக்கட்டுரைகளாக அறிவிக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து.//

இப்படி இது வரை அறிவித்தது இல்லை. முதலில் சிறப்புக் கட்டுரைகளை மட்டுமே மாதக்கணக்கில் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தினோம். கூடுதல் கட்டுரைகளைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், "முதற்பக்கக் கட்டுரைகள்" என்ற வகையை உருவாக்கினோம்.

2006 நிலவரப்படி, உரைநடைப் பிழைகள் இன்றி, ஓரளவு முழுமையான தகவல்கள் இருந்தாலே சிறப்புக் கட்டுரையாக்கும் வாய்ப்பு இருந்தது. சிறப்புக்கட்டுரைகளுக்கான வரையறையை இறுக்கமாக்குவது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே உள்ள சிறப்புக் கட்டுரைகளை மீளாய்வதுடன் மேலும் பல சிறப்புக் கட்டுரைகளை உருவாக்க முனைய வேண்டும்--இரவி 10:39, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]