விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 12, 2014
- ஒரே நீளமுள்ள இரட்டை உண் குச்சிகள் (படம்) சீனாவில் பாரம்பரியமாக உணவு உண்ண பயன்படுகின்றன.
- 177 அடி உயரம் கொண்ட எல். ஐ. சி. கட்டிடம், சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்று.
- அனந்தவர்மன் சோடகங்கன் கீழைக் கங்கர் அரச மரபைத் தொடங்கி வைத்தார்.
- காந்தப் பிரிப்பு முறை என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவியல் முறையாகும்
- ஒரு பல்லுறுப்புக்கோவையின் படி என்பது அப்பல்லுறுப்புக்கோவையில் உள்ள உறுப்புகளின் படிகளிலேயே மிக உயர்ந்த படியாகும்