வலைவாசல்:தமிழிலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தமிழிலக்கிய வலைவாசல்


தொகு  

தமிழிலக்கிய வலைவாசல் உங்களை வரவேற்கிறது


தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்கிறார்கள். முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாக கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.

தமிழ் இலக்கியம் பற்றி மேலும்...
தொகு  

சிறப்புக் கட்டுரை


அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.

தொகு  

தமிழ் இலக்கியம் குறித்த பகுப்புகள்


தொகு  

இலக்கியவாதிகள்


புலியூர்க் கேசிகன் தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மெய்ப்பு திருத்துநர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சோதிடர், எண்கணித வல்லுநர், செய்யுளாசிரியர், ஆவியியல் ஆய்வாளர், சொற்பொழிவாளர் என்னும் பன்முகம் கொண்டவர். நெல்லை மாவட்டத்தில் உள்ள புலியூர்க் குறிச்சி என்னும் சிற்றூரில் கந்தசாமி பிள்ளை, மகாலட்சுமி அம்மையார் ஆகியோருக்கு அக்டோபர் 16, 1923 ஆம் நாள் புலியூர்க் கேசிகன் பிறந்தார். இவருக்கு சொக்கலிங்கம் எனப் பெற்றோர் பெயரிட்டனர். அவர் தந்தைக்கு வேளாண்மை முதன்மைத் தொழில்; மளிகைக்கடை வணிகம் துணைத்தொழில்.

தொகு  

சிறப்புப் படம்


திருவள்ளுவர்
திருவள்ளுவர்
படிம உதவி: பயனர்:Darisi sumanth

திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை.

தொகு  

உங்களுக்குத் தெரியுமா...?


தொகு  

தொடர்பானவை


தொகு  

இலக்கியம் குறித்த பகுப்புகள்

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


  • தமிழிலக்கியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • தமிழிலக்கியம் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • தமிழிலக்கியம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • தமிழிலக்கியம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • தமிழிலக்கியம் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:தமிழிலக்கியம்&oldid=1986913" இலிருந்து மீள்விக்கப்பட்டது