உள்ளடக்கத்துக்குச் செல்

லீசெ பான்சே தெ பாண்டிச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீசெ பான்சே தெ பாண்டிச்சேரி
Lycée français de Pondicherry
அமைவிடம்
12 ரூ விக்டர் சிமோனெல், புதுச்சேரி, புதுச்சேரி
இந்தியா
தகவல்
வகைதனியார்
குறிக்கோள்குறிக்கோள்
தொடக்கம்1826
தரங்கள்வகுப்பு 1 – 12
மாணவர்கள்1,400
Campus size5 ஏக்கர்கள் (20,000 m2)
இணைப்புரெண் பல்கலைக்கழகம்
இணையம்

லீசெ பான்சே தெ பாண்டிச்சேரி (Lycée français de Pondichéry, தமிழாக்கம்:பாண்டிச்சேரி பிரான்சிய மேனிலைப்பள்ளி) இந்திய ஒன்றியப் பகுதி புதுச்சேரியின் தலைநகர் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரான்சிய பன்னாட்டு பள்ளிக்கூடம் ஆகும்.[1]

இது ஆசியக் கண்டத்திலேயே மிகவும் தொன்மையான பன்னாட்டு பிரான்சிய பன்னாட்டுப் பள்ளிக்கூடம் ஆகும்.[2] பிரான்சிற்கு வெளியே அமைந்துள்ள மிகவும் முதன்மையான பிரான்சிய மேனிலைப்பள்ளிகளில் (lycée français) ஒன்றாகும். இங்கு தொடக்கநிலைக்கு முந்தைய வகுப்புகளிலிருந்து லீசெ (மேனிலைப்பள்ளி) வகுப்புகள் வரையிலான கல்வித்திட்டம் வழங்கப்படுகின்றது.[3]

இந்த மேனிலைப்பள்ளி 1826ஆம் ஆண்டில் அக்டோபர் 26 அன்று அன்றைய பிரெஞ்சு இந்தியாவின் புதுச்சேரி தலைமை ஆளுநர் யூழேன் பனோனால் காலேஜ் ரோயல் (இடைநிலைப் பள்ளி) என நிறுவப்பட்டது. 1972இல் மேனிலைப்பள்ளியாக (லீசெ) தரமுயர்த்தப்பட்டது.

இந்த மேனிலைப்பள்ளி ரேன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[4] இதில் ஏறத்தாழ 1,400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் இந்த மேனிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சு வகுப்புக்களை நடத்தி வருகின்றது.[5]

2014இல் பியூட்சர் பவுண்டேசன் பள்ளியுடன் இந்த மேனிலைப்பள்ளி மாணவர் பரிமாற்றத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.[6]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Registration Form பரணிடப்பட்டது 2015-02-14 at the வந்தவழி இயந்திரம்." Lycée français de Pondichéry. Retrieved on 22 January 2015. "12, rue Victor Simonel 605001-Pondichéry"
  2. "Introduction பரணிடப்பட்டது 2015-02-17 at the வந்தவழி இயந்திரம்." Lycée Français of Pondicherry. Retrieved on 22 January 2015.
  3. "The “LYCEE” ( 10th 11th and 12th standard) பரணிடப்பட்டது 2015-01-22 at the வந்தவழி இயந்திரம்." Lycée Français of Pondicherry. Retrieved on 22 January 2015.
  4. Department of Industries and Commerce staff. "French connections, Lycee français". industrypondicherry.com. Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23. This institute is affiliated to the University of Rennes in France.
  5. Institut français de Pondichéry (IFP) Staff. "Training sessions for the teachers of the French Lycée of Pondicherry". ifpindia.org. Archived from the original on 2010-06-16. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
  6. "School pact opens window to French education" (). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. November 8, 2014. Retrieved on January 22, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]