உள்ளடக்கத்துக்குச் செல்

லலித் நாராயண் மிஸ்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லலித் நாராயணன் மிஸ்ராவின் அஞ்சல் தலை, ஆண்டு 1976

லலித் நாராயண் மிஸ்ரா (2 பிப்ரவரி 1923 – 3 சனவரி 1975) பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும், 1973 முதல் 1975 முடிய இந்திராகாந்தி அமைச்சரவையில் இரயில்வே அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் ஜவகர்லால் நேரு பிரதம அமைச்சராக இருக்கும் போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றச் செயலாளராகப் பணியாற்றியவர்.[1] 2 சனவரி 1975 அன்று சமஸ்திபூர் தொடருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் லலித் நாராயண் மிஸ்ரா இறந்தார்.[2]

மரபுரிமைப் பேறுகள்[தொகு]

இவரது நினைவைப் போற்றும் வகையில் பிகார் மாநிலத்தின் தர்பங்கா நகரத்தில் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ள்து.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pranava K Chaudhary (1 June 2009). "Prez releases book on Nehru, Sri Babu letters". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 14 February 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160214124822/http://timesofindia.indiatimes.com/Cities/Patna/Prez-releases-book-on-Nehru-Sri-Babu-letters/articleshow/4601515.cms. பார்த்த நாள்: 1 June 2009. 
  2. Limca Book of Records 1991. Bombay: Bisleri Beverages Ltd. 1991. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-900115-1-0.
  3. Lalit Narayan Mithila University Kameshwaranagar, Darbhanga

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்_நாராயண்_மிஸ்ரா&oldid=3742610" இலிருந்து மீள்விக்கப்பட்டது