ரஜ்னி குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஜ்னி குமார்
பிறப்புபிறந்த தேதி மார்ச் 5,1923
இங்கிலாந்து
பணிகல்வியாளர்
வாழ்க்கைத்
துணை
யுதிட்டிரர் குமார்
விருதுகள்பத்மஸ்ரீ
Gr8! பெண்கள் விருது
வலைத்தளம்
Official web site

ரஜ்னி குமார்(Rajni Kumar) (பிறப்பு: மார்ச் 5, 1923) ஒரு பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த இந்திய கல்வியாளர் ஆவார் மேலும் ஸ்பிரிங்டேல்ஸ் குழும பள்ளிகளின் நிறுவனர் ஆவார்.[1][2][3] நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை இந்திய அரசு இவருக்கு 2011ல் வழங்கி கௌரவித்தது. .[4]

சுயசரிதை[தொகு]

நீ நான்சி ஜாய்ஸ் மார்கரெட் ஜோன்ஸ்(ரஜ்னி) [3] மார்ச் 5, 1923 அன்று இங்கிலாந்தில் பிறந்தார்.[2] இவர் 1941 இல் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்றார், தனது சக மாணவரான யுதிஷ்டர் குமாரை தனது 23வது வயதில் திருமணம் செய்து கொண்டார். இந்தியாவுக்குச் சென்ற பிறகு இந்தியப் பெயரான ரஜ்னி என்னும் பெயரை வைத்துக் கொண்டார். 1950 ஆம் ஆண்டில், அவர் உள்ளூர் பள்ளியான சல்வான் பெண்கள் பள்ளியில் முதல்வராக சேர்ந்து, 1955 வரை அங்கு பணியாற்றினார்.[3] இவர் 1953 ஆம் ஆண்டில் தேசிய இந்திய பெண்கள் கூட்டமைப்பில் அதன் நிறுவனர்களில் ஒருவராக சேர்ந்தார்.[2] 1955 ஆம் ஆண்டில், ரஜ்னி குமார் தனது சொந்த பள்ளியான ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியை தனது வீட்டின் அறையில் மழலையர் பள்ளியாகத் தொடங்கினார். இந்த நிறுவனம், பல ஆண்டுகளாக வளர்ந்து இந்தியாவில் நான்கு பள்ளிகளாகவும், துபாயில் ஒரு பள்ளியாகவும் விரிவடைந்துள்ளது. மேலும் 6000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது.

ரஜ்னி குமார் லேடி இர்வின் கல்லூரியின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.[3] மற்றும் தேசிய பால பவனின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார்.[2] ஜெனீவாவில் நடந்த உலகளாவிய அமைதி மாநாடுகளிலும், மாஸ்கோவில் நடந்த குழந்தைகள் உரிமைகளுக்கான உலக காங்கிரஸ் கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார். 1988 இல் ஓய்வு பெற்ற பிறகு, ரஜ்னி குமார் தனது ஸ்பிரிங்டேல்ஸ் கல்விச் சமூகத்தின் தலைவராக கல்விப்பணிகளில் ஈடுபட்டார். தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியான டெல்லி எழுத்தறிவு பள்ளிகள் திட்டத்துடனும் இணைந்து பணியாற்றியவராவார்.

ரஜ்னி குமார் 2005 இல் சர்வதேச மகளிர் தினத்தன்று தென்னாப்பிரிக்கா அரசாங்கத்தால் பாராட்டப்பட்டார்.[2] ஜி.ஆர். 8 ன் பெண்கள் விருது பெற்றுள்ளார்.இந்திய அரசு 2011ல் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை ரஜ்னி குமாருக்கு வழங்கி கௌரவித்தது.[3] 2012 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா அரசாங்கத்தால் ஆர்டர் ஆப் தி கம்பேனியன்ஸ்(Order of the Companions of O. R. Tambo )என்னும் விருதினை வழங்கியது.[5]

குறிப்புகள்[தொகு]

  1. "Springdales". Springdales. 2014. Archived from the original on 4 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Rajni Kumar : A Class Apart". Boloji. 25 December 2005. Archived from the original on 17 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "The woman behind the legendary Springdales School". Gulf News. 17 April 2013. Archived from the original on 10 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 26 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Padma Shri" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2014. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  5. "Rajni Kumar conferred with prestigious award in South Africa". Hindustan Times. 5 November 2012. Archived from the original on 2014-11-30. பார்க்கப்பட்ட நாள் 2014-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜ்னி_குமார்&oldid=3925620" இலிருந்து மீள்விக்கப்பட்டது