யாதவர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாதவர் கல்லூரி
குறிக்கோளுரைஅறிவே செல்வம்
வகைதன்னாட்சி, கலை அறிவியல், இருபாலர் கல்லூரி
உருவாக்கம்1969
நிதிக் கொடையாதவர் கல்விநிதி
முதல்வர்செ. ராஜு
கல்வி பணியாளர்
11
நிருவாகப் பணியாளர்
246
மாணவர்கள்2912
அமைவிடம், ,
வளாகம்கோவிந்தராஜன் வளாகம்
இணையதளம்www.yadavacollege.org

யாதவர் கல்லூரி (Yadava College ) என்பது தமிழ் நாட்டில் மதுரையில் அமைந்துள்ள [1]தன்னாட்சி பெற்ற இருபாலர் பயிலும் அரசுதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி ஆகும். கல்லூரி வளாகம் 40 ஏக்கர் (0.16 கிமீ2) பரப்பளவில் 13 துறைகளுக்கு இடமளிக்கும் ஐந்து தொகுதிகளைக் கொண்டுள்ளது.

கற்பிக்கப்படும் பாடங்கள்[தொகு]

அறிவியல் பிரிவு[தொகு]

  • இயற்பியல்
  • கணிதம்
  • வேதியியல்
  • விலங்கியல்
  • கணினியியல்
  • தகவல் தொழினுட்பம்

கலைப் பிரிவு பாடங்கள்[தொகு]

  • தமிழ்
  • வரலாறு
  • வணிகவயல்

வரலாறு[தொகு]

பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் கல்வியறிவை வளர்க்க, 1969ஆம் ஆண்டு யாதவ சமூக மக்களால் யாதவர் கல்லூரி தொடங்கப்பட்டது.[2] 1970ஆம் ஆண்டில் இக்கல்லூரிக்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்தது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் இணைவு பெற்று செயல்பட்டுவந்த இக்கல்லூரிக்கு 2008ஆம் ஆண்டு தன்னாட்சி தகுதியினை புது தில்லியில் பல்கலைக்கழக மானியக்குழு வழங்கியது.

அமைவிடம்[தொகு]

யாதவர் கல்லூரி இந்தியாவின் தமிழகத்தில், மதுரை மேற்குப் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த திருப்பாலை கிராமத்தில், செந்நா புலவர் கார்மேகனார் சாலையில் (நத்தம் சாலை) ஊமச்சிகுளம் அருகே கோவிந்தராசன் வளாகத்தில் அமைந்துள்ளது.

முதல்வர்கள்[தொகு]

  1. தி. அ. சொக்கலிங்கம் (1969 முதல் 1978 வரை)
  2. மு. தமிழ்க்குடிமகன் (1978 முதல் 1989 வரை)
  3. க. திருவாசகம்
  4. எசு. தனசேகரன்
  5. வி.சம்பத்
  6. பி.அழகேசன்

முன்னாள் மாணவர்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மதுரை யாதவர் கல்லூரி நிர்வாகிகள் செயல்படுவதில் சட்ட சிக்கல்", Hindu Tamil Thisai, 2023-10-27, பார்க்கப்பட்ட நாள் 2024-05-09
  2. Bureau, The Hindu (2023-09-12), "Two-decade-old issue in Madurai Yadava College solved, new office-bearers elected on HC direction", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-05-09
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாதவர்_கல்லூரி&oldid=3953856" இலிருந்து மீள்விக்கப்பட்டது