யாக்கூப் வொன் கிட்டன்சுடேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாக்கூப் வொன் கிட்டன்சுடேன் (Jacob van Kittensteyn) 1650 ஆம் ஆண்டு முதல் 1653 அக்டோபர் வரை இலங்கையில் காலியின் ஒல்லாந்த ஆளுனராகப் பதவியில் இருந்தார். இவரது பதவிக் காலத்தில், 1652 ஆம் ஆண்டு, போத்துக்கீசருக்கும் ஒல்லாந்தருக்கும் இடையிலான எட்டாண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இந் நாடுகளிடையே மீண்டும் போர் மூண்டது. ஏற்கனவே காலியில் இருந்து களுத்துறை வரையிலான பகுதிகள் ஒல்லாந்தரின் கட்டுப்பாடுக்குள் இருந்தன. கிட்டன்சுடேனின் காலத்தில் யாழ்ப்பாணம், மன்னார், சப்பிரகமூவா பகுதி, கொழும்பு போன்ற இடங்களைக் கைப்பற்றுவதற்கும் திட்டங்கள் இருந்தன[1]. ஆனால், பத்தாவியாவில் இருந்து மேலதிக கப்பல்களும், படைவீரரும் வந்து சேராததால் கிட்டன்சுடேனின் பதவிக்காலம் 1653 ல் முடியும்வரை இத்திட்டம் கைகூடவில்லை.

குறிப்புகள்[தொகு]

  1. Blaze, L. E., 1933. பக். 157

உசாத்துணைகள்[தொகு]

  • Blaze, L. E., History of Ceylon, Asian Educational Services, New Delhi, 2004 (The first Edition Published by: The Christian Literature Society for India and Africa Ceylon Branch, Colombo, 1933)