மிருத்தியுஞ்சய தோத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிருத்தியுஞ்சய தோத்திரம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. [1] [2] இது கவசத் தோத்திரங்களில் ஒன்று. சிவபெருமான் 'மிருத்தியுஞ்சயன்' எனப் போற்றப்படுகிறான். காலனை வென்றவன் என்பது இந்த வடமொழித் தொடரின் பொருள்.

எமனுடைய பாசத்திலிருந்து தன்னைக் காக்கும்படி வேண்டுவது இந்தத் தோத்திரப் பாடல்கள். அதிவீரராம பாண்டியர் இயற்றிய மாக புராணத்தில் மார்கண்டேயன் பிறப்பு உரைத்த அத்தியாயத்தில் எமன் தன்னைப் பிடிக்க வந்தபோது மார்க்கண்டேயன் சிவபெருமானைத் துதிப்பதாக 17 பாடல்கள் உள்ளன. இவற்றை மிருத்தியுஞ்சய தோத்திரம் என்னும் நூலாகப் பதிப்பித்துள்ளனர். அறுபதாண்டு நிறைவு, ருத்திராபிசேகம், சதாபிசேகம் முதலான நன்னாள்களில் இதனை ஓதிக் காப்பு அமைத்துக்கொள்வது வழக்கம்.

பாடல் - எடுத்துப்பாட்டு [3][தொகு]
முத்தொழிற்கும் முதற்பொருளதனை முக்குணத்திலும் மேலதாம்
தத்துவத்தின் விளக்கம் ஆகிய தற் பரத்தினை ஒருவனை
வித்தகக் கணநாதர் சூழ்வர வெற்பின் வாழ் தனி வெற்பினை
பத்தியின் தொழு வேளையோ, நமனார் முனிந்து எதிர் பகருமே? [4]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 54. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 183. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  4. நமாமி சிரசா தேவம் கிந்தோ மிருத்யு:கரிஷயதி (சிவபெருமானைத் தலையால் வணங்குகிறோம். எமன் வந்து எம்மை என்ன செய்வான்) என்னும் வடமொழி மந்திரத்தின் தமிழாக்கம் இந்தப் பாடல்