மிராஜ் 2000
மிராஜ் 2000 Mirage 2000 | |
---|---|
வகை | பன்முகச் சண்டை வானூர்தி |
உருவாக்கிய நாடு | பிரான்சு |
உற்பத்தியாளர் | தசால்ட் ஏவியேசன் |
முதல் பயணம் | 10 மார்ச் 1978 |
அறிமுகம் | சூலை1984 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படை ஐக்கிய அரபு அமீரக வான்படை கிரேக்க வான்படை இந்திய வான்படை |
உற்பத்தி | 1978–2007 |
தயாரிப்பு எண்ணிக்கை | 601[1] |
தசால்ட் மிராஜ் 2000 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது பிரான்சு நாட்டின் தசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நான்காம் தலைமுறை சண்டை வானூர்தியாகும்.
வடிவமைப்பு[தொகு]
இந்த வானூர்தி முச்சக்கர வடிவு கொண்ட இறங்கமைப்பை கொண்டுள்ளது. ஓடுபாதையில் நிறுத்துவதற்காக பின்பகுதியில் கொக்கி அல்லது வான்குடை பொருத்தப்படலாம், இது தரையிறங்கும் தூரத்தை குறைக்க கார்பன் நிறுத்திகளுடன் இணைந்து செயல்படும். இதன் முன் பகுதியில் வான்வழி எரிபொருள் நிரப்புதல் கருவியைக் கொண்டுள்ளது..[2]
மிராஜ் முக்கோண இறக்கைகளைக் கொண்ட ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். தலா நான்கு தானியங்கி பட்டிகைகள் மற்றும் இறக்கைத் துடுப்புகள் இறக்கைகளின் விளிம்புகளில் பொருத்தப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு இறக்கைக்கும் மேலேயும் கீழேயும் காற்று நிறுத்திகள் பொருத்தப்பட்டுள்ளது.[2]
விவரக்குறிப்புகள்[தொகு]
பொது இயல்புகள்
- குழு: 1
- நீளம்: 14.36 m (47 அடி 1 அங்)
- இறக்கை விரிப்பு: 9.13 m (29 அடி 11 அங்)
- உயரம்: 5.2 m (17 அடி 1 அங்)
- இறக்கைப் பரப்பு: 41 m2 (440 sq ft)
- வெற்றுப் பாரம்: 7,500 kg (16,535 lb)
- மொத்தப் பாரம்: 13,800 kg (30,424 lb)
- தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 17,000 kg (37,479 lb)
- எரிபொருள் கொள்ளவு: 3,950 L (870 imp gal; 1,040 US gal)[5]
- சக்தித்தொகுதி: 1 × சுநேக்மா எம்53-பி2 தாரை பொறி, 64.3 kN (14,500 lbf) உந்துதல் உளர், 95.1 kN (21,400 lbf) பின்னெரியுடன்
செயற்பாடுகள்
- அதிகபட்ச வேகம்: 2,336 km/h (1,452 mph; 1,261 kn)
- அதிகபட்ச வேகம்: மாக் 2.2
- வரம்பு: 1,550 km (963 mi; 837 nmi)
- பயண வரம்பு: 3,335 km (2,072 mi; 1,801 nmi) with auxiliary fuel
- உச்சவரம்பு 17,060 m (55,971 அடி)
- ஏறும் விகிதம்: 285 m/s (56,100 ft/min)
- சிறகு சுமையளவு: 337 kg/m2 (69 lb/sq ft)
- தள்ளுதல்/பாரம்: 0.7
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Last Mirage 2000s delivered". Interavia Business & Technology. 22 December 2007. Archived from the original on 10 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.
- ↑ 2.0 2.1 "Dassault Mirage 2000 & 4000". www.airvectors.net. பார்க்கப்பட்ட நாள் 2024-02-09.
- ↑ Donald, David, ed. "Dassault Mirage 2000". The Complete Encyclopedia of World Aircraft. Barnes & Noble Books, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7607-0592-5.
- ↑ Frawley, Gerald. "Dassault Mirage 2000". The International Directory of Military Aircraft, 2002/2003. Fishwick, Act: Aerospace Publications, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-875671-55-2.
- ↑ "Mirage 2000". Military Analysis Network. Federation of American Scientists. பார்க்கப்பட்ட நாள் 20 September 2023.