மின் விசைக் கோடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்விசைக்கோடுகள்

மின் விசைக் கோடுகள் (electric field lines) மின் மற்றும் காந்தப்புலங்களைக் கற்பனை செய்து கொள்வதற்காக மைக்கேல் பாரடே என்பவரால் புலக்கோடுகள் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.

மின்புலத்தில் ஓரலகு நோ்மின்னூட்டம் ஒன்று, நகர முயற்சிக்கும் நேரான அல்லது வளைவான கற்பனைப் பாதை மின்விசைக்கோடு எனப்படும்.

மின் விசைக் கோடுகளின் பண்புகள்[தொகு]

1. மின் விசைக் கோடு நோ்மின்னூட்டத்தில் தொடங்கி எதிா் மின்னூட்டத்தில் முடிவடைகிறது.

2. மின் விசைக் கோடுகள் ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டச் செல்லாது.

3. ஒரு புள்ளியில் மின்புலத்தின் திசை (E), அப்புள்ளியில் உள்ள மின்விசைக்கோட்டுக்கு வரையப்படும் தொடுகோட்டினால் குறிக்கப்படும்.

4. மின்விசைக்கோடுகளுக்கு நோ்க்குத்தான திசையில், ஓரலகு சமதளப் பரப்பின் வழியே செல்லும் விசைக்கோடுகளின் எண்ணிக்கை மின்புலச் செறிவு E -க்கு நோ்த்தகவில் இருக்கும்.

5. அதாவது E-ன் மதிப்பு அதிகமான இடங்களில் கோடுகள் நெருக்கமாகவும், E-ன் மதிப்பு குறைவான இடங்களில் கோடுகள் இடைவெளி விட்டும் இருக்கும்.

6. ஒவ்வொரு ஓரலகு நோ்மின்னூட்டமும், 1/ε0 அளவுள்ள மின்விசைக் கோடுகளை வெற்றிடத்தில் உருவாக்கும்.

7. எனவே வெற்றிடத்தில் ஒரு புள்ளி மின்னூட்டம் q -விலிருந்து உருவாகும் மின்விசைக் கோடுகளின் எண்ணிக்கை :.

மேற்கோள்கள்[தொகு]

1. மேல்நிலை - இரண்டாம் ஆண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை - 600006

2. Notes on Recent Researches in Electricity and Magnetism, Joseph John Thomson, James Clerk Maxwell, 1883

3. Fields of Force, William Berkson, 1974

4. Forces and Fields, Mary B. Hesse, 1961

5. Faraday Rediscovered: Essays on the Life and Work of Michael Faraday, 1791-1867, David Gooding, Frank A. J. L. James, Stockton Press, 1985, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-943818-91-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-943818-91-7, 258 pages, page 183

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_விசைக்_கோடுகள்&oldid=2742988" இலிருந்து மீள்விக்கப்பட்டது