உள்ளடக்கத்துக்குச் செல்

மருது பாண்டி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருது பாண்டி
இயக்கம்மனோஜ் குமார்
தயாரிப்புஎஸ். செல்வரத்தினம்
கதைஆர். பி. விஸ்வம் (வசனம்)
திரைக்கதைமனோஜ் குமார்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். எச். அசோக்
படத்தொகுப்புஸ்ரீனிவாஸ் கிருஷ்ணா
கலையகம்பொன்மனம் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 27, 1990 (1990-04-27)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மருது பாண்டி (maruthupandi)1990 இல் வெளிவந்த தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மனோஜ் குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் ராம்கி, சீதா, நிறோசா ஆகியோரும் அவர்களுடன் இணைந்து நாசர், எஸ். எஸ். சந்திரன், செந்தில், கோவை சரளா, ராகவி மற்றும் பிரதீப் சக்தி ஆகியோரும் நடித்திருந்தனர். எஸ். செல்வரத்தினம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் ஏப்ரல் 27, 1990 அன்று வெளியிடப்பட்டுள்ளது.[1][2] இத்திரைப்படம் 1991 ல் கன்னட மொழியில் சசிகுமாருடன் "கொல்லூர் காலா" எனும் பெயரிலும், 1994 ல் ஹிந்தி மொழியில் கோவிந்தாவுடன் "ஆக்" எனும் பெயரிலும் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கதைச்சுருக்கம்[தொகு]

அம்மாபட்டி எனும் ஊரில் மருது பாண்டி (ராம்கி) பரிசல் ஓட்டி உழைப்பவனாவான். மேலும் இரவுவேளைகளில் அவ்வூரையும் பாதுகாத்து வந்தான். அவன் செய்யும் வேலைக்காக அவனுக்கு ஊர் மக்கள் உணவை வேதியமாக கொடுத்து வந்தனர். மருது பாண்டியுடன் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கையான லக்ஷ்மியும் (ராகவி) இருந்ததாள். கற்பவதியான லக்ஷ்மியை தனது தாய் போல பேணி பாதுகாத்து வந்தான் மருது பாண்டி. கனகவள்ளி ஓர் நாட்டிய குழுவில் நடனமாடும் பெண்ணாவாள். அம்மாபட்டியில் நடனமாடிய அக்குழு கனகவள்ளியை அங்கேயே தனிமையில் விட்டுச் செல்கிறது. இதனால் அவ்வூர் மக்கள் கனகவள்ளிக்கு தங்குவதற்கென ஓர் வீட்டை தயார் செய்து கொடுக்கின்றனர். கனகவள்ளியும் மெதுவாக மருது பாண்டியின் மேல் காதல் கொள்கின்றாள். ஆனால் மருது பாண்டியை கைது செய்ய வேண்டி வருகிறார். மருது பாண்டியின் உண்மையான பெயர் மாணிக்கம்.

பல காலங்களிற்கு முன்பு மாணிக்கம் ஓர் ஏழை தையல்காரன். அவன் அவனுடைய தங்கையுடன் சந்தோசமாக வாழ்ந்தான். மாணிக்கம் செல்வந்த ஜமீன்தாரின் மகளான கவிதாவை (நிறோசா) காதலித்து வந்தான். ஆனால் அவளின் தந்தையான ஜெகநாதன் அவர்களின் திருமணத்தை தடுத்ததோடு தன் மகளை தன்னைப்போல் ஓர் ஜமினுக்கே திருமணம் செய்து வைக்க தீர்மானித்தார். திருமண தினத்தன்று கவிதா விசமருந்தி இறந்து விடுகிறாள். அன்றிரவு ஜெகநாதன், தியாகராஜன் (நாசர்), தியாகராஜனின் நண்பன் பிரதீப் (பிரதீப் சக்தி) ஆகியோர் மாணிக்கத்தை தாக்கியது மட்டுமல்லாமல் தியாகராஜன் மாணிக்கத்தின் தங்கையை கற்பழித்து விடுகிறான். மாணிக்கம் , ஜெகநாதனை கொலை செய்துவிட்டு அம்மாபட்டிக்குச் செல்கிறான். அதன்பிறகு என்ன நடந்தது என்பது மீதிக் கதை.

நடிகர்கள்[தொகு]

  • ராம்கி - மருது முத்து / மாணிக்கம்
  • சீதா - கனகவள்ளி
  • நிறோசா - கவிதா
  • நாசர் - தியாகராஜன்
  • எஸ். எஸ். சந்திரன் - நாட்டாமை
  • செந்தில்
  • கோவை சரளா
  • ராகவி - லக்ஷ்மி
  • பிரதீப் சக்தி - பிரதீப்
  • சிங்கமுத்து
  • தேனி குஞ்சரும்மாள்
  • ஸ்ரீலேகா
  • கே. கண்ணன் - வெள்ளைசாமி
  • மோகன் பாபு
  • வீரா ராகவன்
  • கே. கே. சௌந்தர்
  • செஞ்சி கிருஷ்ணன்
  • எம்எல்ஏ மல்லையா
  • ஜோக்கர் துளசி
  • பசி நாராயணன்
  • பாலாம்பிகா

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும் 1990 ம் ஆண்டு இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கான வரிகளை வாலி, புலமைப்பித்தன், நா. காமராசன், கங்கை அமரன், பிறைசூடன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maruthu Pandi (1990) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-10.
  2. "Marudu Pandi (1990)". gomolo.com. Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2016-10-10.