மன்னார் முன்னகர்வு முறியடிப்புச் சமர், அக்டோபர் 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கை 2007 அக்டோபர் 3 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணியளவில் நிகழ்த்தப்பட்டது. மன்னார் மாவட்டம், விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இவ்வலிந்த தாக்குதல் புதன்கிழமை மாலை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இரு முனைகளில் முன்னகர்வை ஏற்படுத்திய இலங்கை இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலை முறியடிப்புச் செய்த விடுதலைப் புலிகளால் 10ற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினரின் சடலங்கள் களத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டும் மேலும் 25 படையினர் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும் பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை இராணுவத்தினரின் 57வது பிரிவைச் சேர்ந்த தரைப்படையினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த இப்படையெடுப்பின்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளைத் திசை திருப்பும் வகையில் தம்பனை, முள்ளிக்குளம், கட்டுக்கரைக்குளம் ஆகிய பகுதிகளினூடக முன்னகர்வுகளை ஏற்படுத்தியிருந்தனர்.